Watch Video : நடுவானில் பறந்த விமானம்..! ஜன்னலை எட்டி உதைத்து உடைக்க முயற்சித்த பாகிஸ்தான் பயணி..! சக பயணிகள் திக்..திக்.!
நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் ஜன்னல் கதவை காலால் எட்டி உதைத்த பாகிஸ்தான் பயணியால் விமானத்தில் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.
பாகிஸ்தானில் இருந்து துபாய்க்கு தினமும் விமானங்கள் அந்த நாட்டு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இன்று பாகிஸ்தானின் பெஷாவரில் இருந்து துபாய்க்கு விமானம் ஒன்று இயக்கப்பட்டது. பிகே 283 என்ற இந்த விமானத்தில் நூற்றுக்கணக்கான பயணிகள் பயணித்தனர்.
விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, அந்த விமானத்தில் பயணம் செய்த விமானி ஒருவர் திடீரென நடுவானிலே தொழுகை செய்தார். பாதுகாப்பு கருதி அந்த பயணி தொழுகை செய்ய விமானத்தில் இருந்த விமான பணியாளர்கள் அனுமதி மறுத்துள்ளனர்.
#Video A passenger created extreme trouble on a Pakistan International Airlines (PIA) Peshawar-Dubai PK-283 flight as he suddenly started punching seats and kicking the aircraft’s window. pic.twitter.com/bUZ0ZTVNxw
— Ghulam Abbas Shah (@ghulamabbasshah) September 19, 2022
இதனால், அவருக்கும், விமானத்தில் இருந்த அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்து. தொடர்ந்து விமானிகள் மற்றும் விமானத்தில் இருந்த பணியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அந்த பயணி, திடீரென விமானத்தின் ஜன்னலை தனது காலால் ஆத்திரத்தில் எட்டி உதைத்தார்.
A passenger created extreme trouble on a #Pakistan International Airlines #PIA flight,as he suddenly started punching seats and kicking the aircraft’s window, now blacklisted.But what about those pakistani #Terrorists, whom you always safeguard with the help of #China? pic.twitter.com/wCKCG7Pc5t
— Anil RS Tiwari (@AnilRsTiwari) September 19, 2022
#Watch: In a shocking incident, a passenger on a #Pakistan International Airlines (#PIA) #Peshawar to #Dubai flight created chaos midflight when he started kicking the aircraft's window, punching seats, and indulging in a brawl with the flight staff. @odysseuslahori @BushraGohar pic.twitter.com/sW1ILpUz5f
— Mahar Naaz (@naaz_mahar) September 19, 2022
இதனால், விமானிகள் மற்றும் விமானத்தில் இருந்த பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், விமானம் துபாயில் தரையிறங்கிய பிறகு அவரை ஏவியேஷன் விதிகளை மீறியதற்காக விமான நிலைய அதிகாரிகள் பிடித்தனர். பின்னர், அவரை மீண்டும் துபாயில் இருந்து பாகிஸ்தானுக்கே திருப்பி அனுப்பினர்.
பாகிஸ்தானைச் சேர்ந்த பயணி நடுவானிலே விமானத்தின் ஜன்னல் கதவை உடைக்க முயற்சித்து விமானத்தில் இருந்த அனைவரின் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் விதமாக நடந்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.