பிடிச்ச மீனை பச்சையா சாப்பிடணும்.. இதுதான் கொண்டாட்டம்! களைகட்டும் மீன்பிடி திருவிழா!
நெதர்லாந்தில் 2 லட்சம் பார்வையாளர்களுடன் விமர்சியாக கொண்டாடப்பட்ட மீன்பிடித்திருவிழா
Dutch festival of Vlaggetjesdag என்பது நெதர்லாந்தில் பிரசிதிபெற்ற மீன்பிடி திருவிழா. கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மூன்றாண்டுகளாக நடைபெறாமல் இருந்த இந்தவிழா, இந்தாண்டு 2 லட்சம் பார்வையாளர்களுடன் விமர்சியாக கொண்டாடப்பட்டது. கடலோர பகுதியில் நடைபெற்ற இந்த திருவிழாவில் மீன் கொண்டு தயாரிக்கப்படும் பாரம்பரிய உணவுகள் தயாரிக்கப்படும். இதற்கு Little Flags Day என்ற பெயரும் உண்டு.
பருவத்தின் முதல் மீன்பிடி சீசனை தொடங்க்கும் வகையில் முதன் முதலில் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லும் நிகழ்வை திருவிழா போல் கொண்டாகிறார்கள்.
Om 19.00 uur voer de Zr. Ms. Zeeleeuw onderzeeër de haven van Scheveningen uit. De binnenkomst gemist maar gelukkig was ik nu wel getuige van dit historische moment! #Scheveningen #denhaag #onderzeedienst #vlaggetjesdag #onderzeeër pic.twitter.com/zmxih6SSIe
— Marc Wurfbain 🦀 (@WurfTwain) June 19, 2022
ஹேக் நகரில் (Hague) செவனிஜன் மாவட்டத்தில் நடக்கும் மீன்பிடி திருவிழாவின் சிறப்பு மீனவர்கள் கடலுக்குள் சென்று பிடித்துவரும் மீன்களை அப்படியே சமைக்காமல், வேகவைக்காமல் சாப்பிடுவார்கள். நெதர்லாந்து பகுதிகளில் கிடைக்கும் ஹெர்ரிங்க் (herring) என்ர சிலவர் நிற சின்ன மீன்கள் அதிக சுவையுடன் இருக்கும். படகுகளை அலங்கரித்து அதில் கொடிகளை பறக்கவிட்டு மீனவர்கள் மீன்பிடிக்க செல்வார்கள். கரை திரும்பியதும் கொண்டுவரும் மீன்களை ஏலம் விடப்படும். பல்வேறு இடங்களில் இருந்தும் இந்த மீன்பிடி திருவிழாவில் பங்கேற்க வருவார்கள்.
மீன்பிடி திருவிழா நடக்கும் நாளில் பொதுவிடுமுறையும் அளிக்கப்படும். இதற்கு ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் வந்து தங்கள் விடுமுறை நாட்களை கொண்டாடிவிட்டு செல்வார்கள். ஜூன் மாதத்தின் இறுதியில் லட்ச கணக்கில் நெதர்லாந்து மக்கள் ஹெரிங் வகை மீன்களை சாப்பிடுவார்கள்.
Checking out the herrings during the Scheveningen Vlaggetjesdag festival! Flag Day and lots of herrings! pic.twitter.com/rOTug7Ys8H
— Brainy Brendan (@brainybrendan) June 19, 2022
இதுவரை அதிகபட்சமாக ஏலத்தில் 113,500 யூரோவிற்கு மீன்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. உப்பு போட்டு ஐஸில் உறைய வைக்கப்பட்ட மீன்களை அப்படியே சாப்பிடுவது அல்லது சாலட் ஆக சாப்பிடுவது பெரும்பாலான மக்களின் விருப்பமாக இருக்கிறது. நெதர்லாந்து கடலில் பிடிக்கப்படும் மீன்கள் பெரும்பாலும் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும். இந்த மீன்பிடி திருவிழாவில் மீன்களை வேக வைத்து இரண்டாக வந்து அதற்குள் வெங்காயம் வைத்து சாப்பிட கொடுப்பார்கள்.
இந்த திருவிழாவிற்கு வருபவர்கள் முதலில் வேகவைக்கதா மீன்களை சாப்பிட விரும்ப மாட்டார்கள். அதைச் சாப்பிடும்போது ஒருமாதிரியான சமைக்காத வாசனை வரும் என்றும் சிலர் தெரிவித்துள்ளனர். பலர் இந்தத் திருவிழாவிற்கு வருவதற்கு அன்றைய நாளில் வரும் கூட்டம், அலங்காரம், மீனவர்கள் மீன்பிடிக்க செல்லும் காட்சிகளைப் பார்ப்பது, மீன்கள் ஏலம் நடத்தப்படும் இவற்றை காண ஏராளமானோர் வருவார்கள்.