Nepal plane crash: நேபாள நாட்டில் நடுவானில் காணாமல்போன விமானம்; கருப்புப் பெட்டி கண்டுபிடிப்பு..
நேபளம் நாட்டில் காணமால்போன விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டெடுக்கப்பட்டதாக நேபாள இராணுவம் தெரிவித்துள்ளது.
நேபாளம் நாட்டில் ஜாம்சோ நகருக்கு பயணித்த விமானம் நடுவானில் திடீரென கட்டுபாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. இந்த விபத்தில் 4 இந்தியர்கள் உட்பட 19 பயணிகளுடன், மொத்தம் 22 பேர் உயிரிழந்தனர். கடந்த நான்கு நாட்களாக உயிழந்தோரின் உடல்களைத் தேடும் பயணியில் நேபாள இராணுவம் ஈடுபட்டு வந்தது. இந்நிலையில், காணாமல் போன விமானத்தின் கருப்புப் பெட்டி மற்றும் உயிரிழந்தவர்களில் கடைசி நபரின் உடல் இன்று காலையில் மீட்பட்டதாகவும் நேபாள இராணுவம் வெளியிட்டுள்ள செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளது.
#UPDTAE Nepal plane crash | All 22 bodies recovered from the crash site. Black box also retrieved and being brought to the base station: Rescue officers
— ANI (@ANI) May 31, 2022
இது குறித்து நேபாள இராணுவ துறையின் செய்தித்தொடர்பாளர் நாராயண் சில்வால் ANI செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், இதுவரை உயிரிழந்தவர்களின் 10 உடல்கள் மீட்கப்பட்டு மஸ்டாங்க மாவட்டத்திற்கு கொண்டு செல்லபப்ட்டுள்ளது. இன்று காலை, விமானத்தின் கருப்புப் பெட்டியும், இறுதி பயணியின் உடலும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காணப்படும் பணிகள் தொடரும்.’ என்று தெரிவித்துள்ளார்.
இந்த விமானம் 14, 500 அடிக்கு கீழே மலை அடியில் கண்டெடுக்கப்பட்டது.
Nepal plane crash: 12 bodies to be flown to Kathmandu, black box recovered
— ANI Digital (@ani_digital) May 31, 2022
Read @ANI Story | https://t.co/E7DW0MrjX5#NepalPlaneCrash #Nepal pic.twitter.com/7PAAoSDlRX
என்ன நடந்தது:
போஹ்ராவிலிருந்து (Pokhara) ஜாம்சோம் (Jomsom) நகருக்கு 4 இந்தியர்கள் உட்பட 19 பயணிகளுடன் புறப்பட்ட Tara Air's 9 NAET என்ற விமானம் பயணித்துக் கொண்டிருக்கும் போது, கடந்த 27 ஆம் தேதி காலை 9.55 மணிக்கு கட்டுப்பாட்டு அறை உடனான தொடர்பை இழந்ததாக தெரிவிக்கப்பட்டது. பின்னர், தொலைந்துபோன Tara Air's 9 NAET என்ற விமானம் கண்டுபிடிக்கப்பட்டதாக ANI தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல் தெரிவித்திருந்தது.
Depending on the weather condition, the bodies will be flown to Kathmandu via Pokhara. Possibly, the search and rescue operation will come to an end if the weather permits: Nepal Army Spokesperson to ANI
— ANI (@ANI) May 31, 2022
முன்னதாக, தொலைந்துபோன இந்த விமானத்தில் இந்தியாவைச் சேர்ந்த மூன்று பேர், மற்றும் ஜப்பானைச் சேர்ந்த மூன்று பேர் பயணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானம் நடுவானில் மாயமானது குறித்து தேடும் பணிகள் நடந்து வந்தன.
Nepal plane crash | Bodies being retrieved from the crash site. 10 bodies have already been brought to the base station in Khabang-Mustang. Two bodies are being brought down to the base station, the black box has also been recovered from the site: Nepal Army Spokesperson to ANI
— ANI (@ANI) May 31, 2022
மேலும், இது குறித்து முழுமையான தகவல் விசாரணையில் தெரிய வரும் என்றும், இந்த விமானம் ஜாம்சோமில் உள்ள மஸ்டாங் மாவட்டத்தில் வானில் தெரிந்ததாகவும், தொடர்பை இழப்பதற்கு முன்பு, விமானம் தெளலாகிரி மாவட்டத்தை நோக்கி பயணிக்க திசை திருப்ப சொல்லப்பட்டதாகவும் மஸ்டாங் மாவட்ட தலைமை அதிகாரி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், விமானத்தின் கருப்புப் பெட்டி இன்று காலை கண்டறியப்பட்டுள்ளது.