கையில் துப்பாக்கி.. பேஸ்புக்கில் லைவ்.. 4 பேரை சுட்டுக்கொன்ற நபர்! பதறிப்போன மக்கள்!
இவரைக் கண்டறியும் வரை மெம்ஃபிஸ் நகர மக்கள் அனைவரையும் வீட்டுக்குள்ளேயே இருக்கும்படியும் காவல் துறையினர் அறிவுறுத்தியிருந்தனர்.
அமெரிக்காவில் 19 வயது இளைஞர் ஒருவர் துப்பாக்கியால் நான்கு பேரை சுட்டுக் கொன்றதோடு தன் செயல்களை ஃபேஸ்புக் பக்கத்தில் லைவ் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் டென்னஸி மாகாணத்தில் உள்ள மெம்ஃபிஸ் நகரைச் சேர்ந்த இந்த இளைஞரின் பெயர் எஸெகில் கெல்லி என முன்னதாகத் தெரிய வந்துள்ளது.
— Memphis Police Dept (@MEM_PoliceDept) September 8, 2022
இவர் அமெரிக்காவின் டென்னஸி மாகாணத்தில் பல இடங்களில் மொத்தம் 7 துப்பாக்கிச்சூடு தாக்குதல்களை இதுவரை நிகழ்த்தியுள்ளதாகவும் அத்துடன் தன் செயல்களை ஃபேஸ்புக் பக்கத்தில் லைவாக பதிவிட்டு வருவதாகவும் மெம்ஃபிஸ் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
UPDATE: the suspect is currently in a grey Toyota with Arkansas AEV63K. If this suspect is seen, call 911 immediately.
— Memphis Police Dept (@MEM_PoliceDept) September 8, 2022
UPDATE: the suspect has been identified at 19-year-old Ezekiel Kelly.
— Memphis Police Dept (@MEM_PoliceDept) September 8, 2022
இந்நிலையில், முன்னதாக இந்த நபர் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்த காவல் துறையினர், இந்நபர் தற்போது எந்தப் பகுதியில் இருக்கிறார் என்பதைக் கண்டறிய முடியவில்லை என்றும் பொதுமக்களை கவனமாக இருக்கும்படியும் எச்சரித்திருந்தனர்.
மேலும், இவரைக் கண்டறியும் வரை மெம்ஃபிஸ் நகர மக்கள் அனைவரையும் வீட்டுக்குள்ளேயே இருக்கும்படியும் காவல் துறையினர் அறிவுறுத்தியிருந்தனர்.
*****UPDATE 9:28 PM******
— Memphis Police Dept (@MEM_PoliceDept) September 8, 2022
SUSPECT IS IN CUSTODY
Ezekiel D. Kelly
Please follow our social media platforms for updates.
Please avoid the area of Ivan Road & Hodge Road
இந்நிலையில், முன்னதாக எஸெகில் கெல்லி இருக்குமிடத்தைக் கண்டறிந்த காவல் துறையினர் அவரைக் கைது செய்து காவலில் வைத்து தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.