ஏமன் மீது அமெரிக்கா, இங்கிலாந்து தாக்குதல்.. அதிகரிக்கும் பதற்றம்..
ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து ஏமன் மீது அமெரிக்கா, இங்கலாந்து இணைந்து தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏமன் மீது அமெரிக்கா, இங்கலாந்து இணைந்து தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து இரு நாடுகளும் இணைந்து தாக்குதல் நடத்துவதால் அப்பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது. செங்கடல் பகுதியில் சரக்கு கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஈரன் ஆதரவு ஹவுதி ஏமனிலும் செயல்பட்டு வருகிறது.
ஏமன் தலைநக சானா உள்ளிட்ட நகரங்களில் ஹவுதி அமைப்பை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. விமானம் மற்றும் கடற்படைகள் மூலம் ஹவுதி ஆய்த கிடங்கினை குறிவைத்தும் தாக்குதல் நடத்தப்படுகிறது. செங்கடலில் இஸ்ரேன் தொடர்புடைய கப்பல்களை தொடர்ந்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்கியதால் பதிலடி கொடுக்கும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மேலும் ஹவுதி அமைப்பின் 12 மையங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து இணைந்து நடத்தும் இந்த தாக்குதலுக்கு 10 க்கும் மேற்பட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளது. இதற்கிடையில், தேவைப்பட்டால் தாக்குதலை தீவிரப்படுத்துவோம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அமெரிக்கா தற்போது ஏமன் மீது தாக்குதல் நடத்தியிருக்கும் நிலையில், காசாவில் நடக்கும் போர் மேலும் தீவிரமடையும் என நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.