Elonmusk: "காசாவை கட்டியெழுப்ப நான் உதவி செய்றேன்; ஆனால்..." - இஸ்ரேல் பிரதமருக்கு கண்டிசன் போட்ட எலான் மஸ்க்!
இஸ்ரேலுக்குச் சென்ற எலான் மஸ்க், அதிபர் ஜசக் ஹெர்சார்க மற்றும் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்து பேசி உள்ளார்.
Elonmusk Visit Gaza: இஸ்ரேலுக்குச் சென்ற எலான் மஸ்க், அதிபர் ஜசக் ஹெர்சார்க மற்றும் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்து பேசி உள்ளார். இந்த சம்பந்தமான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இஸ்ரேல் போர்:
கடந்த மாதம் 7ம் தேதி ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அதோடு, ஏராளமானோர் சிறைபிடிக்கப்பட்டனர். இதற்கு பதிலடி தரும் வகையில் ஹமாஸ் அமைப்பு முற்றிலும் அழிக்கப்படும் என கூறி, இஸ்ரேல் ராணுவம் ஹமாஸ் கைவசம் உள்ள காஸா பகுதியின் மீது மும்முனை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 40 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அத்தியாவசிய பொருட்கள் கூட இன்றி தவித்தனர். இந்த சூழலில் தான் அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் எடுத்த முயற்சியின் பேரில், கடந்த வெள்ளிக்கிழமை முதல் 4 நாள் போர் நிறுத்தம் மேற்கொள்ள இஸ்ரேல் - ஹமாஸ் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. போர் நிறுத்த ஒப்பந்தத்தின் படி, தங்கள் வசம் இருந்த 13 பணயக் கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் விடுவித்தனர். இதற்கு இணையாக 117 பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் விடுவித்துள்ளது.
காசாவுக்கு விரைந்த எலான் மஸ்க்:
இந்நிலையில், இஸ்ரேல் ஆதரவாக குரல் கொடுத்து வரும் எலான் மஸ்க் சமீபத்தில் விளம்பரங்கள் மற்றும் சந்தாக்கள் மூலம் கிடைக்கும் அனைத்து வருவாயையும் இஸ்ரேலில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் காசாவில் உள்ள செஞ்சிலுவைச் சங்கம்/கிரசன்ட் ஆகியவற்றிற்கு நன்கொடையாக வழங்கப்படும் என்று தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து, நேற்று இஸ்ரேல் சென்றிருந்த எலான் மஸ்க், அங்கு அதிபர் ஜசக் ஹெர்சாக்கை சந்தித்தார். அதேபோல, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்த எலான் மஸ்க், ஆயுதக்குழுவால் பயங்கரவாத தாக்குதலுக்கு உள்ளான பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர், ஹமாஸ் குழுவினரால் பணய கைதிகளாக கடத்தி செல்லப்பட்ட இஸ்ரேலியர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
Why is Elon Musk visiting Israel ,he’s not a political figure .
— Jackie Meek (@JackieMeek6) November 27, 2023
He needs to keep out of politics .
He’s not helping ,it’s annoying Hamas and people in Gaza
This is bloody ridiculous,he is putting lives at risk just by being there #Elonmusk pic.twitter.com/qYXjEtsWU2
”நானும் காசாவுக்கு உதவ விரும்புகிறேன். இஸ்ரேல்-ஹமாஸ் போருக்குப் பிறகு காசாவை மீண்டும் கட்டியெழுப்ப உதவி செய்ய விரும்புகிறேன். ஆனால், ஹமாஸை முற்றிலுமாக அழிக்க வேண்டும். ஹமாஸை அழிப்பது தவிர வேறு வழி இல்லை" என்று பிரதமர் நெதன்யாகுவை சந்தித்தபோது மஸ்க் தெரிவித்துள்ளார்.