மேலும் அறிய

Israel - Hamas War: 266 பேர் பலி- ஹமாஸ் படைக்கு அமெரிக்கா எச்சரிக்கை? உலக தலைவர்கள் இஸ்ரேல் வருகை

Israel - Hamas War: காஸாவில் உள்ள ஹமாஸ் பிரிவினரை ஒடுக்க இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவின் சிறப்பு பிரிவு வீரர்கள் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Israel - Hamas War: ஹமாஸ் பகுதியில் இஸ்ரேல் வீரர்கள் நடத்திய தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் 266 பேர் உயிரிழந்துள்ளனர்.

17வது நாளாக தொடரும் போர் - 266 பேர் பலி:

காஸா பகுதியில் ஹமாஸ் அமைப்பினர் மற்றும் இஸ்ரேல் ராணுவத்தினர் இடையேயான மோதல், 17வது நாளாக நீடித்து வருகிறது. தொடர் தாக்குதல் சிறுவர்கள், பெண்கள் மற்றும் முதியவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் உயிரிழந்து வருகின்றனர். போரின் அடுத்தகட்டமாக வான்வழித் தாக்குதலை மிகத் தீவிரமாக இஸ்ரேல் ராணுவம் முடுக்கிவிட்டது. அதன்படி, நேற்று காலை தொடங்கி இன்று காலை வரையிலான கடைசி 24 மணி நேரத்தில், 177 சிறுவர்கள் உட்பட 266 பேர் மரணித்துள்ளதாக காஸா நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டட இடிபாடுகளில் சிக்கி ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

மனிதாபிமான உதவிகள் -ஆபத்தில் குழந்தைகள்:

போர் தொடங்கியதை தொடர்ந்து காஸாவில் உள்ள மக்களுக்கு தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதும் கேள்விக்குறியானது. இதையடுத்து 15 நாட்களுக்குப் பிறகு, இரண்டு தினங்களுக்கு முன்னதாக எகிப்தின் ராபா எல்லை வழியாக  காஸாவிற்குள் நிவாரணப் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன. மருந்துகள், ரொட்டி மற்றும் பால் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன. இதனிடையே, வென்டிலேட்டர்களை நம்பியிருக்கும் பல குழந்தைகள் காசாவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டால் உயிர்வாழ முடியாது என, இஸ்ரேல் படையினரால் முற்றுகையிடப்பட்ட கடலோரப் பகுதியில் உள்ள மருத்துவ பணியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இது பேரழிவாக கருதப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

அமெரிக்கா எச்சரிக்கை:

அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர் பிளிங்கன் மற்றும் பாதுகாப்பு அமைச்சரான லாய்ட் ஆஸ்டின் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது,  ஈரானின் பினாமிகளின் ஈடுபாட்டின் மூலம் இஸ்ரேல்-ஹமாஸ் போர் தீவிரமடையும் என்று அமெரிக்கா எதிர்பார்க்கிறது. காஸாவில் சிக்கியுள்ள அமெரிக்கர்களை வெளியேற விடாமல் ஹமாஸ் அமைப்பினர் தடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எதிர்தரப்பு அமைப்பினரால் அமெரிக்கர்கள் யாரேனும் தாக்கப்பட்டால், அதற்கு பதிலடி அளிக்க பைடன் அரசு தயாராக உள்ளது.  இந்த மோதலை நாங்கள் விரும்பவில்லை, தேடவில்லை, அதிகரிப்பதையும் விரும்பவில்லை. ஆனால், அமெரிக்கர்கள் தாக்கப்பட்டால், அதற்கு பதிலடி தர தயாராக இருக்கிறோம்” என தெரிவித்தனர். இதனிடையே, ஏற்கனவே பல்வேறு நாடுகளில் செயல்பட்டு வரும் அமெரிக்காவின் டெல்டா படையை, ஹமாஸ் அமைப்பிற்கு எதிராக களமிறக்க இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ரகசியமாக திட்டமிடவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

நேதன்யாகு விளக்கம்:

இதனிடையே, காஸாவிற்குள் தரைவழி தாக்குதலை தற்போதைய சூழலில் நடத்த வேண்டாம் எனவும், அங்குள்ள மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் கிடைக்கப் பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும், அமெரிக்க அதிபர் பைடன் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவிற்கு வலியுறுத்தியுள்ளார். அதேநேரம், டெல் அவிவில் உள்ள  கிரியாவில் போர் அமைச்சரவை உறுப்பினர்கள் மற்றும் மூத்த பாதுகாப்பு அதிகாரகளுடன் நேதன்யாகு ஆலோசனை நடத்தினார். அதைதொடர்ந்து பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் மற்றும் நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட்டே ஆகியோர் இந்த வாரம் இஸ்ரேலுக்கு வர உள்ளதாக அறிவித்துள்ளார். 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

America Vs Iran China: ட்ரம்ப் அறிவிப்பால் கோபமடைந்த சீனா.! ஈரானுக்கு ஆதரவாக என்ட்ரி; போரில் புதிய ட்விஸ்ட்
ட்ரம்ப் அறிவிப்பால் கோபமடைந்த சீனா.! ஈரானுக்கு ஆதரவாக என்ட்ரி; போரில் புதிய ட்விஸ்ட்
Somalia Pirates: மீண்டும் கடலிறங்கிய சோமாலியா கொள்ளையர்கள்.! துருக்கி கப்பல் கடத்தல்; 6 இந்தியர்களின் கதி என்ன.?
மீண்டும் கடலிறங்கிய சோமாலியா கொள்ளையர்கள்.! துருக்கி கப்பல் கடத்தல்; 6 இந்தியர்களின் கதி என்ன.?
Trump Vs Iran: உங்க சொந்த நாட்டு பிரச்னைய மறைக்க எங்க மேல தடையா.? ட்ரம்ப்பை கழுவி ஊற்றும் ஈரான்; என்ன விஷயம்.?
உங்க சொந்த நாட்டு பிரச்னைய மறைக்க எங்க மேல தடையா.? ட்ரம்ப்பை கழுவி ஊற்றும் ஈரான்; என்ன விஷயம்.?
ரூ.19,000 செலவில் படம்… ரூ.28 கோடி வசூல்! ‘மோசமான படம்’ என விமர்சிக்கப்பட்ட Niu Lai-க்கு குவியும் ஆதரவு!
ரூ.19,000 செலவில் படம்… ரூ.28 கோடி வசூல்! அன்று மோசமான படம்! இன்று Niu Lai-க்கு குவியும் ஆதரவு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
SBI அடிப்படை சேமிப்பு கணக்கு: அக்டோபர் 1 முதல் புதிய கட்டணங்கள் - உஷார்!
SBI அடிப்படை சேமிப்பு கணக்கு: அக்டோபர் 1 முதல் புதிய கட்டணங்கள் - உஷார்!
Gold and silver rate today : சவரனுக்கு ரூ.5,160 அதிகரிப்பு.! 3 நாளில் கிடு கிடுவென உயர்ந்த தங்கம் விலை- இன்றைய விலை என்ன தெரியுமா.?
சவரனுக்கு ரூ.5,160 அதிகரிப்பு.! 3 நாளில் கிடு கிடுவென உயர்ந்த தங்கம் விலை- இன்றைய விலை என்ன தெரியுமா.?
Sowcar Janaki: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்... திரைத்துறையினர் அதிர்ச்சி!
Sowcar Janaki: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்... திரைத்துறையினர் அதிர்ச்சி!
எய்தவரை விட்டு விட்டு அம்புகளை மட்டும் நோவதில் பயனில்லை.! டிவிகே அரசுக்கு எதிராக சீறிய CPM சண்முகம்
எய்தவரை விட்டு விட்டு அம்புகளை மட்டும் நோவதில் பயனில்லை.! டிவிகே அரசுக்கு எதிராக சீறிய CPM சண்முகம்
Udhayanidhi Stalin: விஜய் அறிவித்த கார் தேவையில்லை.. உதயநிதி பேச்சால் சட்டசபையில் கடும் வாக்குவாதம்!
Udhayanidhi Stalin: விஜய் அறிவித்த கார் தேவையில்லை.. உதயநிதி பேச்சால் சட்டசபையில் கடும் வாக்குவாதம்!
Embed widget