மேலும் அறிய

America Vs Venezuela: கரீபியன் கடலில் குவிந்த போர் கப்பல்கள்; வெனிசுலா மீது தாக்குதலா.? என்ன செய்யப் போகிறார் ட்ரம்ப்.?

கரீபியன் கடல் பகுதியில், அமெரிக்க போர்க் கப்பல்களும், ராணுவமும் குவிக்கப்பட்டு வருவதால், வெனிசுலா மீது எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ட்ரம்ப் என்ன கூறுகிறார்.?

அமெரிக்காவுக்கும், வெனிசுலாவுக்கும் இடையே நீண்ட காலமாக பகை இருந்து வருகிறது. போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை என்ற பெயரில் பசிபிக் மற்றும் கரீபியன் கடல் பகுதிகளில், சந்தேகத்துக்குரிய கப்பல்கள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு வெனிசுலா அதிபர் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், கரீபியன் கடல் பகுதியில் அமெரிக்க போர்க் கப்பல்களும், ராணுவமும் குவிக்கப்பட்டு வருவதால், போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் என்ன கூறுகிறார் என்று பார்ப்போம்.

பசிபிக், கரீபியன் கடலில் கப்பல்களை தாக்கும் அமெரிக்கா

வெனிசுலாவில் இருந்து கடல் வழியாக போதைப் பொருட்கள் அமெரிக்காவிற்கு கடத்தி வரப்படுவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குற்றம் சாட்டி வருகிறார். அதோடு நிற்காமல், பசிபிக் மற்றும் கரீபியன் கடல் பகுதிகளில், சந்தேகத்திற்குரிய படகுகள் மீது தாக்குதலையும் அமெரிக்கா நடத்தி வருகிறது.

அமெரிக்காவின் குற்றச்சாட்டை மறுக்கும் வெனிசுலா

ஆனால், போதை கடத்தல் குற்றச்சாட்டை வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ திட்டவட்டமாக மறுத்து வருகிறார். மேலும்,  அமெரிக்கா தாக்கிய கப்பல்களில் பயணித்தவர்கள் மீனவர்கள், தொழிலாளர்கள் என்றும், சர்வதேச சட்டத்தை மீறி அமெரிக்கா தாக்குதல் நடத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

கரீபியன் கடல் பகுதியில் அமெரிக்க படைகள் தயார் நிலை

இந்த சூழலில், கரீபியன் கடல் பகுதியில், போர்க் கப்பல்கள் மற்றும் போர் விமானங்களை அமெரிக்கா குவித்து வருகிறது.  மேலும், 15 ஆயிரம் ராணுவ துருப்புக்களையும் குவித்துள்ளது. அங்குள்ள போர்டோரிகோ தீவில், மூடப்பட்ட விமான தளம் ஒன்றை அமெரிக்கா மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது. எஃப்-35 ரக போர் விமானங்கள், கனரக ஹெலிகாப்டர்களும் வந்து இறங்கியுள்ளன.

அதோடு, உலகிலேயே மிகப் பெரிய மற்றும் அதிநவீன விமானம் தாங்கி போர்க் கப்பலான 'யு.எஸ்.எஸ்., ஜெரால்டு ஃபோர்டு' ஒரு குழுவுடன் கரீபியன் கடல் பகுதிக்கு சென்று கொண்டிருக்கிறது. மேலும், இந்த ராணுவ நடவடிக்கைக்கு ஆப்பரேஷன் சதர்ன் ஸ்பியர் என்றும் அமெரிக்கா பெயர் சூட்டியுள்ளது.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கையால், வெனிசுலாவில் சிறப்பு அவசர நிலையை அந்நாட்டு அதிபர் நிகோலஸ் மதுரோ அறிவித்துள்ளார். மேலும், நிலம், கடல், வான்வெளிகளின் பாதுகாப்பையும் பலப்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார். அந்நாட்டு படைகளும் தயார் நிலையில் உள்ளன.

வெனிசுலா மீது தாக்குதலா.? என்ன சொல்கிறார் டிரம்ப்.?

இப்படிப்பட்ட சூழலில், வெனிசுலா மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து தான் முடிவு எடுத்து விட்டதாகவும், ஆனால், அது எந்த விதமான நடவடிக்கை என்பதை தற்போது கூற முடியாது என்றும், விரைவில் அது பற்றி தெரிவிப்பதாகவும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார். 

இதனிடையே, கரீபியன் கடலில் அமெரிக்க ராணுவம் போர் பயிற்சியில் ஈடுபடுவது ஒரு பொறுப்பற்ற செயல் என வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ விமர்சித்துள்ளார்.

 

 

தலைப்பு செய்திகள்

Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
North Korea Ballistic Missile: ஜப்பானுக்கு மெர்சல் காட்டிய வட கொரியா; பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் US, தென் கொரியாவுக்கும் எச்சரிக்கை
ஜப்பானுக்கு மெர்சல் காட்டிய வட கொரியா; பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் US, தென் கொரியாவுக்கும் எச்சரிக்கை
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
Honda Rebel 300 Vs RE Goan Classic 350: பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
Embed widget