மேலும் அறிய

ஹார்மூஸை திறந்தாலும் கட்டுப்பாடு இருக்கு.. ட்விஸ்ட் கொடுத்த ஈரான்! ஒரு நாளைக்கு எத்தனை கப்பல்கள் அனுமதிக்கப்படும்?

ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இனி ஒரு நாளைக்கு 15 கப்பல்கள் மட்டுமே செல்ல ஈரான் அனுமதிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

ஈரான் இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு மத்தியில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்கள் செல்வது தொடர்பாக சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது. 

ஈரானின் அதிரடி முடிவு:

ரஷ்யாவின் அரசு செய்தி நிறுவனமான டாஸ் (TASS) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இனி ஒரு நாளைக்கு 15 கப்பல்கள் மட்டுமே செல்ல ஈரான் அனுமதிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானின் இந்த திடீர் கட்டுப்பாடு உலகளாவிய சரக்கு போக்குவரத்து நிறுவனங்கள் இடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, இந்தியாவுக்கு வரும் எல்பிஜி (LPG) மற்றும் கச்சா எண்ணெய் விநியோகத்தில் இது பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இந்திய அரசின் பதில் என்ன?

நாட்டின் எல்பிஜி, கச்சா எண்ணெய் மற்றும் ரசாயன பொருட்களின் இருப்பு குறித்து மத்திய பெட்ரோலிய அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. மேலும் நாட்டில் எல்பிஜி சிலிண்டர் விநியோகம் தற்போது சீராக இருப்பதாகவும், நிலவி வரும் தட்டுப்பாடுகளை போக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் தினசரி 58 லட்சத்திற்கும் அதிகமான வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.வணிக ரீதியான சிலிண்டர்களின் இருப்பு சுமார் 70 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோலிய அமைச்சகம் வெளியிட்ட தரவுகளின்படி, ஒரே நாளில் 6,700 டன் வணிக எல்பிஜி விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது சுமார் 3.5 லட்சம் சிலிண்டர்களுக்கு சமமாகும். மேலும், அதே காலக்கட்டத்தில் சுமார் 1.06 லட்சம் ஐந்து கிலோ சிலிண்டர்களும் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

ஹார்முஸ் ஜலசந்தி ஏன் முக்கியமானது?

ஈரான் மற்றும் ஓமன் நாடுகளுக்கு இடையே அமைந்துள்ள ஒரு குறுகிய கடல் பகுதியே ஹார்முஸ் ஜலசந்தி ஆகும். இதன் அகலம் வெறும் 34 கிலோமீட்டர் மட்டுமே என்றாலும், இது உலகின் 'பொருளாதார நரம்பு மண்டலமாக' கருதப்படுகிறது.வளைகுடா நாடுகளை இந்தியப் பெருங்கடலுடன் இணைக்கும் முக்கிய பாதையாக இது உள்ளது.உலகின் மொத்த கச்சா எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு (1/5) இந்த வழியாகத்தான் செல்கிறது. எண்ணெய் மட்டுமின்றி, உரங்கள் மற்றும் அத்தியாவசிய விவசாயப் பொருட்களும் இந்த கடல் பாதை வழியாகவே உலக நாடுகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

ஈரானின் இந்த புதிய கட்டுப்பாடுகள் சர்வதேச எரிசக்தி சந்தையில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

Zelensky Serbia Weapons: பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
China Firm Unhappy Leave: அட, இது லிஸ்ட்லயே இல்லையே.! மன வருத்தத்துல இருக்குற பணியாளர்களுக்கு விடுப்பு கொடுக்கும் கம்பெனி; எங்கே.?
அட, இது லிஸ்ட்லயே இல்லையே.! மன வருத்தத்துல இருக்குற பணியாளர்களுக்கு விடுப்பு கொடுக்கும் கம்பெனி; எங்கே.?
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Kia Seltos CNG: க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
Rasi Palan Today (09-08-2026): மேஷத்துக்கு வெற்றி.. அப்ப இன்னைக்கு உங்க ராசிக்கு என்ன பலன்?
Rasi Palan Today (09-08-2026): மேஷத்துக்கு வெற்றி.. அப்ப இன்னைக்கு உங்க ராசிக்கு என்ன பலன்?
Embed widget