India Slams Pak : ”தீவிரவாதிகளுக்கு அடைக்கலம்... இந்த நாடகம் இங்க வேணாம்” ஐநாவில் பாகிஸ்தானை பொளந்துக்கட்டிய இந்தியா
தீவிரவாதிகளுக்கு"நீண்ட காலமாக பயங்கரவாதத்தை ஆதரித்து ஏற்றுமதி செய்து வரும் ஒரு நாடு இப்போது மிகவும் அபத்தமான அறிக்கைகளை வெளியிடத் தயங்குவதில்லை என்று கெல்லட் கடுமையாக விமர்சித்து இருந்தார்.

காஷ்மீர் மற்றும் சிந்து நதி நீர் ஒப்பந்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபையில் பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் வெளியிட்ட அறிக்கைக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.
காஷ்மீர் பிரச்சினை:
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் பேசிய ஷெரீப் "காஷ்மீரிகளுடன் நான் எப்போதும் அவர்களுடன் நிற்கிறேன், பாகிஸ்தான் அவர்களுடன் நிற்கிறது, விரைவில் ஒரு நாள், காஷ்மீரில் இந்தியாவின் அட்டூழியங்கள் முடிவுக்கு வரும்"காஷ்மீரிகளின் "சுயநிர்ணய உரிமைக்கான அடிப்படை உரிமையை" பாகிஸ்தான் ஆதரிக்கிறது என்றும், இந்த செயல்முறை ஐக்கிய நாடுகள் சபையின் மேற்பார்வையின் கீழ் ஒரு நியாயமான பொது வாக்கெடுப்பு மூலம் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
பயங்கரவாதத்தை அதன் "அனைத்து வடிவங்களிலும்" கண்டிப்பதாகவும் கூறிய ஷெரீப் மேலும் தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் மற்றும் பலுசிஸ்தான் விடுதலை இராணுவம் போன்ற வெளிநாட்டு ஆதரவு குழுக்கள் தனது நாட்டை குறிவைப்பதாக குற்றம் சாட்டினார். "எந்தவொரு தனிநபருக்கும் அல்லது மதத்திற்கும் எதிராக வெறுப்பு, பாகுபாடு அல்லது வன்முறைக்கு இடமில்லை" என்று அவர் கூறினார்.
சிந்து ஒப்பந்தம் மீறல் - போருக்கு சமம்
ஏப்ரல் மாதம் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா மீறியதாக ஷெரீப் குற்றம் சாட்டினார். "எங்களைப் பொறுத்தவரை, இந்த ஒப்பந்தத்தை மீறுவது போருக்குச் சமம்" என்று அவர் கூறினார்.
26 பொதுமக்களைக் கொன்ற பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, 1960 இல் கையெழுத்திடப்பட்ட இந்த உலக வங்கியின் மத்தியஸ்த ஒப்பந்தத்தில் இந்தியா பங்கேற்பதை நிறுத்தியது . எல்லை தாண்டிய வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர பாகிஸ்தான் உறுதியான மற்றும் சரிபார்க்கக்கூடிய நடவடிக்கைகளை எடுத்தால் மட்டுமே இந்த ஒப்பந்தம் மீண்டும் நிலைநிறுத்தப்படும் என்று மத்திய அரசு கூறியிருந்தது.
இந்தியா பதிலடி:
பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் வெளியிட்ட அறிக்கைகளை இந்தியா கடுமையாக விமர்சித்து பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாக இந்தியா குற்றம் சாட்டியது.
பாகிஸ்தானுக்கு பதிலளித்த இந்தியாவின் பிரதிநிதி பெட்டல் கெலாட் 'மேதகு சபாநாயகர் அவர்களே, இன்று காலை இந்தக் கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் வெளிப்படுத்திய நாடகங்கள், அவரது வெளியுறவுக் கொள்கையில் பயங்கரவாதத்தின் முக்கியத்துவத்தை மீண்டும் ஒருமுறை எடுத்துக்காட்டுகின்றன, ஆனால் உண்மையை எந்த நாடகத்தாலும் அல்லது பொய்களாலும் மறைக்க முடியாது' என்று கூறினார்.
தீவிரவாத அமைப்பை காப்பாற்றிய பாக்
"பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாத அமைப்பை" பாகிஸ்தான் ஆதரித்ததையும் கெலாட் நினைவு கூர்ந்தார். "ஏப்ரல் 25, 2025 அன்று பாதுகாப்பு கவுன்சிலில் இந்த பயங்கரவாத அமைப்பை அதன் நடவடிக்கைகளிலிருந்து பாதுகாத்தது அதே பாகிஸ்தான்தான்"
”பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தான்”
தொடர்ந்து பேசிய கெலாட் தீவிரவாதிகளுக்கு"நீண்ட காலமாக பயங்கரவாதத்தை ஆதரித்து ஏற்றுமதி செய்து வரும் ஒரு நாடு இப்போது மிகவும் அபத்தமான அறிக்கைகளை வெளியிடத் தயங்குவதில்லை. பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் கூட்டாளியாக நடித்துக்கொண்டு, ஒரு தசாப்த காலமாக ஒசாமா பின்லேடனை மறைத்து வைத்தது. அதன் அமைச்சர்கள் சமீபத்தில் பல தசாப்தங்களாக பயங்கரவாத முகாம்களை நடத்தி வருவதாக ஒப்புக்கொண்டனர். இந்த இரட்டை விளையாட்டு இப்போது பிரதமர் மட்டத்திலும் தொடர்கிறது என்பதில் ஆச்சரியமில்லை" என்று தெரிவித்தார்.




















