கூடுதலாக 20,000 மெட்ரிக் டன் கோதுமை ஆப்கானிஸ்தானுக்கு வழங்க இந்தியா திட்டமா?
இந்தியா ஆப்கானிஸ்தானுக்கு கூடுதலாக 20,000 மெட்ரிக் டன் கோதுமையை ஐநா உலக உணவு திட்டத்துடன் இணைந்து ஈரானில் உள்ள சபஹர் துறைமுகம் வழியாக அனுப்பப்படும் என கூறப்பட்டுள்ளது.
இந்தியா ஆப்கானிஸ்தானுக்கு கூடுதலாக 20,000 மெட்ரிக் டன் கோதுமையை ஐநா உலக உணவு திட்டத்துடன் இணைந்து ஈரானில் உள்ள சபஹர் துறைமுகம் வழியாக அனுப்பப்படும் என கூறப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் ஐந்து மத்திய ஆசிய நாடுகள், நேற்றைய தினம், ஆப்கானிஸ்தான் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஒரு தளமாக இருக்கக்கூடாது என்ற கருத்தை தெரிவித்தது. ஆப்கானிஸ்தானுக்கு கூடுதலாக 20,000 மெட்ரிக் டன் கோதுமை வழங்குவதாக இந்தியா அறிவித்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த கோதுமை ஐநா உலக உணவு திட்டத்துடன் இணைந்து ஈரானில் உள்ள சபஹர் துறைமுகம் வழியாக அனுப்பப்படும் என கூறப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானுக்கு 50,000 மெட்ரிக் டன் கோதுமை வழங்குவதாக இந்தியா உறுதியளித்த சில மாதங்களுக்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்வரை பாகிஸ்தான் வழியாக நிலப் பாதையைப் பயன்படுத்தி சரக்குகள் அனுப்பப்பட்டன. புதுதில்லியில் ஆப்கானிஸ்தான் தொடர்பான இந்தியா-மத்திய ஆசிய கூட்டுப் பணிக்குழுவின் முதல் கூட்டத்தின் போது, பயங்கரவாதம், தீவிரவாதம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் ஆகியவற்றின் பிராந்திய அச்சுறுத்தல்கள் குறித்து விவாதித்தனர். இந்த அச்சுறுத்தல்களை கூட்டாக எதிர்கொள்வதற்கான வழிகளை அவர்கள் ஆராய்ந்து, ஆப்கானிஸ்தானை தீவிரவாத பயிற்சிக்கூடம் அல்லது பயங்கரவாத செயல்களுக்கு பயன்படுத்தக் கூடாது என்று வலியுறுத்தினர்.
பெண்கள், சிறுமிகள் மற்றும் சிறுபான்மைக் குழுக்களுக்கான சம உரிமைகள் உட்பட அனைத்து ஆப்கானியர்களின் உரிமைகளையும் மதிக்கும் உண்மையான அரசியல் கட்டமைப்பை உருவாக்குவதன் முக்கியத்துவத்தையும் இந்த கூட்டத்தில் பேசப்பட்டது. ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு பல்கலைக்கழக கல்வியை தடை செய்யும் தலிபான்களின் முடிவை இந்தியா கடுமையாக விமர்சித்தது என்பது குறிப்பிடத்தக்கது. கஜகஸ்தான், கிர்கிஸ் குடியரசு, தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் போதைப்பொருள் குற்றங்களுக்கான அலுவலகம் மற்றும் உலக உணவுத் திட்டத்தின் ஐ.நா. பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
ஆப்கானிஸ்தானின் தற்போதைய அரசியல் சூழல், பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான அம்சங்கள் உள்ளிட்டவை குறித்து கருத்துக்கள் கூறப்பட்டது. இறையாண்மை, ஒற்றுமை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் அமைதியான, பாதுகாப்பான இடமாக ஆப்கானிஸ்தான் மாற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. கூட்டுப் பணிக்குழு, மூத்த அதிகாரிகள் மட்டத்தில் கூட்டத்தை நடத்தியதற்காக இந்தியாவுக்கு நன்றி தெரிவித்ததோடு, இதே அடிப்படையில் ஆலோசனைகளைத் தொடர ஒப்புக்கொண்டது. ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் ஆட்சியை இந்தியா இன்னும் அங்கீகரிக்காத நிலையில், காபூலில் அனைவரையும் உள்ளடக்கிய அரசாங்கத்தை அமைப்பதற்காக வலியுறுத்தி வருகிறது.