இலங்கைக்கு கோடி கணக்கில் வாரி வழங்கிய இந்தியா: எவ்வளவு தெரியுமா?
இந்தியா 376 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் இலங்கைக்கு கடனாக வாரி வழங்கி இருக்கிறது.இந்த பணம் ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே வழங்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு அதிகளவில் உதவிகளை வழங்கியுள்ள இந்தியா. இலங்கையின் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் புரட்சி ஏற்பட்டு அதிபராக இருந்த கோத்தபாய நாட்டை விட்டு தப்பி வெளிநாட்டில் பஞ்சம் புகுந்தார்.தற்போது பொறுப்பதிபராக, பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க செயற்பட்டு வருகிறார் .
இது இலங்கை மக்களின் புரட்சிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும்.இருப்பினும் புதிதாக நிரந்தர அதிபர் வந்த பிறகு அவருக்கு மிகப்பெரிய சவால்கள் காத்திருக்கின்றன.இலங்கையை சுற்றி கடல் சூழ்ந்து இருப்பதைப் போல இலங்கையை சுற்றி கடனும் சூழ்ந்து இருக்கிறது. இலங்கையில் கடந்த காலத்தில் ஆலயங்களில் நடத்தப்பட்ட மிகப்பெரிய குண்டு வெடிப்பும் அதன் பிறகு ஆட்சியைப் பிடித்த ராஜபக்ச சகோதரர்களின் வரவும் மிகப்பெரிய பயத்தையே அனைவருக்கும் தந்திருந்தது.ஆலயங்களில் வெடித்த வெடிகுண்டு கிறித்துவ நாடுகளின் மத்தியில் இலங்கைக்கு மிகப்பெரிய அவப்பெயரை உண்டு பண்ணி சுற்றுலாத்துறையை பாதித்து பொருளாதாரத்தில் ஒரு அடியை உண்டு பண்ணியது.
இது ஒரு புறம் என்றால் கொரோனாவும் ஒருபுறம் பொருளாதாரத்தை வெகுவாக பாதித்தது.ஓர் இரவு மாற்றம் என்பதைப் போல அதிபராக இருந்த கோத்தபாய ராஜபக்ச,செயற்கை உரங்களை படிப்படியாக ஐந்தாண்டுகள் அல்லது 10 ஆண்டுகளில் குறைத்து இயற்கை விவசாயத்தை கொண்டு வருவதற்கு பதிலாக, அதிரடியாக உர இறக்குமதியை நிறுத்தியது விளைச்சலை வெகுவாக பாதித்து. இதுவும் பொருளாதாரத்திற்கு ஒரு பேரிடியாக விழுந்தது.மற்றொருபுறம் குண்டுவெடிப்புக்கு பிறகு நிறைய ,முஸ்லிம் சமூக சேவை அமைப்புகளையும் சேர்த்து இலங்கை தடை செய்தது .இது இஸ்லாமிய நாடுகளின் மத்தியில் மிகப்பெரிய வருத்தத்தை உண்டு பண்ணியது.
இப்படியாக இலங்கையுடைய பொருளாதாரம் ஒவ்வொரு விதமாக விழுந்து கொண்டிருந்த அதே நேரத்தில் சீனா ஏறக்குறைய 67 மில்லியன் அமெரிக்க டாலர்களை கடனாக வழங்கியது. இது பல்வேறு ஒப்பந்தங்கள் மூலம் வழங்கப்பட்டு அதை திருப்பி தராத பட்சத்தில் ஹம்பாந்தோட்டத்தை துறைமுகமாக போல எதிர்காலத்தில் பல பிரச்சினைகளை இலங்கை முகம் கொடுக்க வேண்டி இருக்கிறது.சீனா கடன் கொடுத்ததைப் போன்று அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் போன்ற நாடுகளும் பல்வேறு வழிகளில் உதவிகளை வழங்கி வருகிறது.
இதற்கெல்லாம் ஒரு படி மேலே இந்தியா 376 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் இலங்கைக்கு கடனாக வாரி வழங்கி இருக்கிறது. இந்த பணம் ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே வழங்கப்பட்டுள்ளது.இந்த கடனை இலங்கையால் திருப்பி செலுத்த முடியாத போது அதற்கு ஈடாக துறைமுகங்களையோ அல்லது விலை நிலங்களையோ அல்லது கட்டுமான ஒப்பந்தங்களை அல்லது விமான நிலையங்களையோ அல்லது தொலைத்தொடர்பு நிறுவனங்களையோ ஈடாக தர வேண்டி இருக்கும் அந்த வகையில் பார்த்தால் மற்றைய நாடுகளை காட்டிலும் இந்தியா மிகப்பெரிய அளவில் கடன் வழங்கியிருப்பதால் இலங்கை இனி இந்தியாவின் அனுமதி இல்லாமல் பெரியளவிலான திட்டங்களை அங்கு செயற்படுத்த முடியாது என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது.