லாக்டவுன் காலம்.. பலான படங்களில் மூழ்கிய இளைஞர்கள்; டேட்டா சொல்வதென்ன?
ஊரடங்கு காலத்தில் வீட்டில் முடங்கிய இளசுகள் கைகளில் செல்போனை வைத்துக்கொண்டு ஆபாச இணையதளம் பக்கம் திரும்பியுள்ளனர்.
இங்கிலாந்தில் கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கில் வீட்டில் முடங்கிக் கிடந்த இளைஞர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் ஆபாச இணைதளங்கள் மற்றும் செயலிகளை உபயோகித்துள்ளதாக புள்ளிவிவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2020ம் ஆண்டு கொரோனா பரவத் தொடங்கியதால் உலக நாடுகள் ஊடரங்கை அமல்படுத்தின. அதில் ஒன்று இங்கிலாந்து. தீவிரமான லாக்டவுன் கட்டுப்பாடுகளால் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்தது அந்நாட்டு அரசு. அந்த ஊரடங்கு காலத்தில் வீட்டில் முடங்கிய இளசுகள் கைகளில் செல்போனை வைத்துக்கொண்டு ஆபாச இணையதளம் பக்கம் திரும்பியுள்ளனர். அப்கம் என்ற அமைப்பு டேட்டா ஒன்றை வெளியிட்டுள்ளது. வீடியோ தளங்களை நெறிப்படுத்தவும், ஆன்லைன் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் இந்த ஆய்வை அந்த நிறுவனம் எடுத்துள்ளது.
அதில் இங்கிலாந்தில் கடந்த ஆண்டு இளைஞர்களின் சரிபாதி பேர் ஆபாச இணையதளங்களை நாடியதாக தெரிவித்துள்ளது. இங்கிலாந்தில் செப்டம்பர் 2020ல் 26 மில்லியன் பேர் ஆபாச இணையதள மற்றும் செயலிகளை பார்த்துள்ளனர். இந்த எண்ணிக்கையில் 4ல் 3 பங்கு இளைஞர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படியென்றால் இங்கிலாந்தில் உள்ள சரிபாதி இளைஞர்கள் பல்லான படங்களை பார்த்து நேரத்தை கடத்தியுள்ளனர். ஆபாச இணைதளத்தை நாடிய இளைஞர்களில் 50% பேர் ஆண்கள், 16%பேர் பெண்கள் என புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Bra: கயிறு முதல் கார்செட்கள் வரை - ப்ரா பயன்பாட்டுக்கு முன்பு நடந்தது என்ன? : இது ப்ராக்களின் கதை
இங்கிலாந்தில் வீடியோ தளங்களை அதிகம் பயன்படுத்துவது 18-24 வயதினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019ம் ஆண்டை பொருத்தவரை யூ ட்யூப் இணைதளத்தில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 1 மணி நேரம் 16 நிமிடங்களை இளைஞர்கள் செலவழித்துள்ளனர். அது இந்த வருடம் மேலும் 11 நிமிடங்கள் அதிகரித்துள்ளது. கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் யூ ட்யூப்பில் நேரம் செலவிடுகின்றனர் இங்கிலாந்து இளைஞர்கள். அதேபோல் அங்கு டிக் டாக் செயலியும் அதிகம் பயன்படுத்தும் செயலியாக உள்ளது
அதேபோல் டாக்டவுன் காலத்தில் இண்டர்நெட் பயன்பாடும் பல மடங்கு உயர்ந்துள்ளது. மக்கள் வீடுகளிலேயே இருந்ததால் ஆன்லைனில் படிப்பது, வீட்டில் இருந்து வேலை பார்ப்பதும், பொழுதுபோக்குக்காக பல மணி நேரங்கள் ஆன்லைனில் இருப்பதுமே ஆன்லைன் பயன்பாடு அதிகரிக்க காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் மட்டுமல்ல இந்தியாவில் கடந்த ஆண்டு லாக்டவுன் காலத்தில் ஆபாச இணையதளம் பக்கம் கூடுபவர்களின் எண்ணிக்கை 95% அதிகரித்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள் விடுமுறையில் இருப்பதாலு சரியான பொழுதுபோக்கு, ஆக்கப்பூர்வமான வேலை இல்லாததாலும் இளைஞர்கள் பார்ன் வெப்சைட் பக்கம் அதிகளவில் கூடுவதாக கூறப்பட்டது. இந்தியா ஆபாச இணையதளங்கள் பலவற்றை முடக்கியுள்ள நிலையிலும் பார்ன் வெப்சைட்டுகள் இளைஞர்களை சென்று சேர்ந்துள்ளன. ஆபாச இணையதளங்களை 89% பேர் தங்களுடைய செல்போனில் தான் பார்க்கின்றனர். ஆபாச படங்களை அதிகம் பார்ப்பவர்கள் பட்டியலில் அமெரிக்கா, இங்கிலாந்துக்கு பிறகு இந்தியா உள்ளது.
சரணடைந்தது ட்விட்டர்; ஒரு வாரம் கெடு கேட்டு மத்திய அரசுக்கு கடிதம்!