மேலும் அறிய

Hormuz-Gulf Countries New Plan: ஹார்முஸ் ஜலசந்திக்கு Bye Bye.! அரபு நாடுகள் போட்ட அதிரடி பிளான்; புதிய வழி கண்டுபிடிப்பு; திட்டம் என்ன.?

சவூதி அரேபியா, UAE, துருக்கி ஆகிய நாடுகள், ஹார்முஸ் ஜலசந்தி மற்றும் செங்கடலை சார்ந்திருப்பதை குறைக்க, தரைவழி ரயில் இணைப்புகள், கடல்வழிப் பாதைகள் மற்றும் குழாய் திட்டங்களில் பணியாற்றி வருகின்றன.

ஹார்முஸ் ஜலசந்தி மீதான பதற்றங்களுக்கு மத்தியில், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் துருக்கி ஆகியவை இணைந்து ஒரு மாற்று வழியை ஆராய்ந்து வருகின்றன. ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான்  முடக்கி வைத்திருப்பது, உலகெங்கிலும் உள்ள நாடுகளுக்கு சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தி மற்றும் செங்கடல் வழியாக செல்லும் பாதைகளை சார்ந்திருப்பதை குறைக்கும் நோக்கில், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளின் அரசுகள், தரைவழி ரயில் இணைப்புகள், கடல்வழிப் பாதைகள் மற்றும் குழாய்த் திட்டங்களில் பணியாற்றி வருவதாக சவுத் சைனா மார்னிங் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டு தாக்குதலைத் தொடர்ந்து, பிப்ரவரி 28 அன்று ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டது. எரிசக்தி விநியோகத்திற்கான ஒரு முக்கிய நீர்வழியாக இது இருப்பதால், உலக பொருளாதாரத்தை அது கடுமையாக பாதித்தது. 

மாற்று வழித் திட்டம் என்ன.?

இந்த சமீபத்திய செய்தியைத் தொடர்ந்து, வளைகுடா பிராந்தியத்தின் பலவீனமான உள்கட்டமைப்பை சார்ந்திருக்கும் நிலையிலிருந்து விலகிச் செல்லும் ஒரு கட்டமைப்பு மாற்றம் என நிபுணர்கள் இந்த நடவடிக்கையை குறிப்பிடுகின்றனர். பாரசீக வளைகுடாவிற்கு வெளியே அமைந்துள்ள ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் துறைமுகங்கள் வழியாக செல்லும் சரக்குகள் இந்த வழித்தடங்களில் அடங்கும். இந்த சரக்குகள் இப்போது சவுதி அரேபியா வழியாக ஜோர்டானுக்கு கொண்டு செல்லப்படும். அங்கிருந்து, எகிப்தின் சூயஸ் கால்வாய் அல்லது சிரியாவின் துறைமுகங்கள் வழியாக மத்திய தரைக்கடலுக்கு அவை கொண்டு செல்லப்படும்.

மேலும், சில இணைப்புகள் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளன. ஐக்கிய அரபு அமீரக துறைமுகங்களை சவுதி அரேபியத் துறைமுகங்களுடன் இணைக்கும் ஒரு கடல்-தரை வழித்தடம், அத்துடன் இந்த ஆண்டு தொடங்கப்பட்ட ஜோர்டானுக்கான ரயில் சேவையும் இதில் அடங்கும். சவுதி அரேபியா தனது நியோம் துறைமுகத்திலிருந்து ஒரு சரக்கு சேவையையும் தொடங்கியுள்ளது. இது, சூயஸ் கால்வாயை வளைகுடா நாடுகள் மற்றும் ஈராக்குடன் இணைக்கிறது.

இதற்கிடையே, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், துருக்கி மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகள், ஜெட்டாவை அம்மான் மற்றும் டமாஸ்கஸ் வழியாக இஸ்தான்புல்லுடன் இணைக்கும் வரலாற்று சிறப்புமிக்க ஹிஜாஸ் ரயில் பாதையை புனரமைப்பதற்கான திட்டங்களை தொடங்கியுள்ளன.

பிராந்திய ரயில்வே வலையமைப்பை மேம்படுத்த ஜிசிசி ஒப்புதல்

சமீபத்தில் ஜெட்டாவில் நடைபெற்ற வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (GCC) உச்சிமாநாட்டில், சவுதி அரேபியாவை, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், ஓமான், குவைத் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளுடன் இணைக்கும் ஒரு பிராந்திய ரயில் வலையமைப்பை விரைவாக மேம்படுத்த, தலைவர்கள் ஒப்புக்கொண்டனர். மேலும், எண்ணெய் மற்றும் எரிவாயு குழாய்கள், மின் இணைப்புகள் மற்றும் நீர் அமைப்புகளுக்கான பல நாடுகளை உள்ளடக்கிய வலையமைப்பை உருவாக்குவது குறித்தும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இதனால், இனி ஹார்முஸ் ஜலசந்தியை சார்ந்திருக்க வேண்டிய அவசியம் வளைகுடா நாடுகளுக்கு இருக்காது.

 

 

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

France Protest: பற்றி எரியும் ஃப்ரான்ஸ்..! வன்முறையான போராட்டம் - தீ வைப்பு, கடைகளில் கொள்ளை - அரசு வார்னிங்
பற்றி எரியும் ஃப்ரான்ஸ்..! வன்முறையான போராட்டம் - தீ வைப்பு, கடைகளில் கொள்ளை - அரசு வார்னிங்
Yorkshire Wildlife Park: புலி வாய்க்குள் சிக்கிய இளைஞர்.. அநியாயமாக பறிபோன உயிர்.. Zoo-ல் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
Yorkshire Wildlife Park: புலி வாய்க்குள் சிக்கிய இளைஞர்.. அநியாயமாக பறிபோன உயிர்.. Zoo-ல் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
Elon MusK: “அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
“அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
Ukraine Drone Attack: ரஷ்ய கருங்கடலில் 23 இந்தியர்களுடன் சென்ற எண்ணெய் கப்பலை தீக்கிரையாக்கிய உக்ரைன்; நடந்தது என்ன.?
ரஷ்ய கருங்கடலில் 23 இந்தியர்களுடன் சென்ற எண்ணெய் கப்பலை தீக்கிரையாக்கிய உக்ரைன்; நடந்தது என்ன.?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"13 ஏக்கரில் தலைமைச் செயலகமா? சாத்தியமே இல்லை!" - பல்லவன் இல்ல திட்டத்திற்கு அன்புமணி கடும் எதிர்ப்பு
Chennai Rain: சென்னையில் தீவிரமடையும் பருவமழை..! இடைவெளி இன்றி பொளக்கும் என பிரதீப் ஜான் எச்சரிக்கை
சென்னையில் தீவிரமடையும் பருவமழை..! இடைவெளி இன்றி பொளக்கும் என பிரதீப் ஜான் எச்சரிக்கை
CM Vijay: 5 தொகுதிகளும் நமக்கு தான்..! டார்கெட் வைத்து அதிரடி திட்டங்கள் - CM விஜய் கொடுத்த சர்ப்ரைஸ்
5 தொகுதிகளும் நமக்கு தான்..! டார்கெட் வைத்து அதிரடி திட்டங்கள் - CM விஜய் கொடுத்த சர்ப்ரைஸ்
Actor Ajith: மனிதாபிமானம் மிக்க அஜித்! துக்க நிகழ்வுகளில் மட்டும் பங்கேற்காதது ஏன்? இதுதான் காரணமா?
Actor Ajith: மனிதாபிமானம் மிக்க அஜித்! துக்க நிகழ்வுகளில் மட்டும் பங்கேற்காதது ஏன்? இதுதான் காரணமா?
TN Weather News: டெல்டாவிற்கு ரெட் அலெர்ட்! சென்னையில் மழை, இன்று எங்கெல்லாம் கனமழை? தமிழக வானிலை அறிக்கை
டெல்டாவிற்கு ரெட் அலெர்ட்! சென்னையில் மழை, இன்று எங்கெல்லாம் கனமழை? தமிழக வானிலை அறிக்கை
அடுத்த 4 ஆண்டுகளுக்குள் 26 கார்கள்.. 45 ஆயிரம் கோடியை இந்தியாவில் இறக்கப்போகும் ஹுண்டாய்!
அடுத்த 4 ஆண்டுகளுக்குள் 26 கார்கள்.. 45 ஆயிரம் கோடியை இந்தியாவில் இறக்கப்போகும் ஹுண்டாய்!
Karthik Sabesh: தேவா வீட்டில் முடியாத சோகம்..! கார்த்திக் சபேஷ் திடீர் மரணம் - நடந்தது என்ன? திரையுலகம் ஷாக்
தேவா வீட்டில் முடியாத சோகம்..! கார்த்திக் சபேஷ் திடீர் மரணம் - நடந்தது என்ன? திரையுலகம் ஷாக்
RC Book: வண்டியின் RC புக்கை தொலைத்துவிட்டீர்களா? வீட்டில் இருந்தே நகலை பெறுவது எப்படி? கட்டணம், வழிமுறை
வண்டியின் RC புக்கை தொலைத்துவிட்டீர்களா? வீட்டில் இருந்தே நகலை பெறுவது எப்படி? கட்டணம், வழிமுறை
Embed widget