Driverless train: உலகின் முதல் டிரைவர் இல்லாத ரயில் அறிமுகம்.. ஜெர்மன் போனால் போகலாம்!
ரயில் டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் முழு தானியங்கி மூலம் கட்டுப்படுத்தப்பட்டாலும், பயணிகள் இருக்கும்போதெல்லாம் பயணங்களை கண்காணிக்க ஒரு டிரைவர் இருப்பார்.
ஜெர்மனியில் உலகின் முதல் தானியங்கி, டிரைவர் இல்லாத ரயில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஜெர்மன் ரெயில் ஆபரேட்டர் டாய்ச் பான் மற்றும் தொழில்துறை குழு சீமன்ஸ் நேற்று உலகின் முதல் தானியங்கி, டிரைவர் இல்லாத ரயிலை ஹாம்பர்க் நகரில் அறிமுகப்படுத்தியது. இது பாரம்பரிய ரயில்களை விட சரியான நேரத்தில் மற்றும் ஆற்றல் திறன் கொண்டதாக உள்ளது.
இதுபோன்ற நான்கு ரயில்கள் வடக்கு நகரத்தின் எஸ்-பான் விரைவு நகர்ப்புற ரயில் நெட்வொர்க்கில் சேர்ந்து, தற்போதுள்ள ரயில் உள்கட்டமைப்பைப் பயன்படுத்தி டிசம்பர் முதல் பயணிகளை ஏற்றிச் செல்லத் தொடங்கும்.
பாரிஸ் போன்ற பிற நகரங்களில் ஓட்டுனர் இல்லாத மெட்ரோ ரயில்கள் உள்ளன. அதே நேரத்தில் விமான நிலையங்கள் பெரும்பாலும் தானியங்கி மோனோரயில் ரயில்களை இயக்குகின்றன, ஆனால் ஹாம்பர்க் ரயில் மற்ற வழக்கமான ரயில்களுடன் தடங்களை பகிர்ந்து கொள்ளும் போது பிரத்யேக ஒற்றை தடங்களில் இயங்குகின்றன.
இந்தத் திட்டத்தை உலகின் முதல் திட்டம் என்று சீமென்ஸ் மற்றும் டாய்ச் பான் அழைக்கிறது. டாய்ச் பான் தலைமை நிர்வாக அதிகாரி ரிச்சர்ட் லூட்ஸ் கூறுகையில், தானியங்கி ரயில்கள் ஒரு கிலோமீட்டர் புதிய பாதையை அமைக்காமல் மிகவும் நம்பகமான சேவையை வழங்குகிறது” என்று கூறினார்
"நாங்கள் ரயில் போக்குவரத்தை மிகவும் புத்திசாலித்தனமாக்குகிறோம். தானியங்கி ரயில்கள் 30 சதவிகிதம் அதிக பயணிகளை கொண்டு செல்ல முடியும். நேரத்தை கணிசமாக மேம்படுத்தலாம் மற்றும் 30 சதவிகிதத்திற்கும் அதிகமான ஆற்றலை சேமிக்க முடியும்" என்று சீமென்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி ரோலண்ட் புஷ் கூறினார்..
ரயில் டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் முழு தானியங்கி மூலம் கட்டுப்படுத்தப்பட்டாலும், பயணிகள் இருக்கும்போதெல்லாம் பயணங்களை கண்காணிக்க ஒரு டிரைவர் இருப்பார் என்று நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்