Watch Video : அன்பும்..காதலும்.. அடைகாக்கும் ஜோடிக்கு அன்பாய் உணவு கொடுக்கும் ஆண் பறவை! வைரல் வீடியோ!
ஆண் பறவை அவ்வபோது வெளியில் சென்று இரை தேடி வந்து , தனது ஜோடி பறவைக்கு அதாவது தாய் பறவைக்கு கொடுக்கிறது
மனிதர்கள் எப்படி சக மனிதர்களிடம் அன்பு செலுத்துகின்றார்களோ அப்படித்தான் பறவைகள் , விலங்குகள் என பிற உயிரினங்களும். அன்பு என்பது எல்லா உயிரினங்களுக்கும் பொதுவானதுதானே !
வைரல் வீடியோ!
அப்படித்தான் ஹார்ன்பில் பறவை ஒன்று முட்டையை பாதுகாக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அப்படி என்ன இதில் அதிசயம் இருக்கிறது! இது எல்லா பறவைகளும் செய்யும் ஒன்றுதானே ! என்றால் அங்குதான் ட்விஸ்ட் இருக்கிறது. இது ஒரு ஆண் ஹார்ன்பில் பறவை. தாய் பறவை அடைக்காக்கும் சமயத்தில் தந்தை பறவையானது முட்டைகளையும் கூடுகளையும் தனது ஜோடியையும் தினமும் பாதுகாத்து வந்திருக்கிறது. இதனை வனத்துறை அதிகாரி ஒருவர் வீடியோவாக பதிவு செய்து, ட்விட்டரில் பகிர்ந்திருக்கிறார். தந்தையர் தினமான நேற்று இந்த வீடியோ வைரலாக ஷேர் செய்யப்பட்டது.இந்த வீடியோவை ஷேர் செய்த வனத்துறை அதிகாரி "தந்தையர் தினத்தன்று இந்த தந்தையின் கதையை #காட்டில் இருந்து பகிர்ந்து கொள்கிறேன். கூட்டிற்குள் அடைத்து வைத்த பெண்ணுக்கு #ஹார்ன்பில் ஆண் உணவளிக்கிறது. இது பல மாதங்களாக நடக்கும் நிகழ்வு " என்றார்.
On FathersDay let me share story of this father from #forest. Great #Hornbill male is feeding the female who has locked her inside nest. This he will do for months !! pic.twitter.com/2BohxfYcAN
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) June 19, 2022
வீடியோவில்..
மிகப்பெரிய மரத்தில் உருவாக்கப்பட்ட மர பொந்து ஒன்றில் பெண் ஹார்ன்பில் முட்டையுடன் அடைக்காத்து வருகிறது. அதனை வெளியில் இருந்து பாதுகாக்கும் ஆண் பறவை அவ்வபோது வெளியில் சென்று இரை தேடி வந்து , தனது ஜோடி பறவைக்கு அதாவது தாய் பறவைக்கு கொடுக்கிறது. குழந்தை பாசம் என்பது மனிதர்களுக்கு மட்டும்தானா ! பறவைகளுக்கும் மற்ற உயிரினங்களுக்கு உண்டுதானே! இந்த வீடியோவை பகிர்ந்த பிரவீன் என்னும் வன அதிகாரி , அதன் அடுத்தடுத்த செயல்பாடுகளையும் புகைப்படமாக பகிர்ந்திருக்கிறார்.
This is a story about hornbills which are perfect couple and which are also called as Gardner of the forest. How ?
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) June 19, 2022
There are 9 species of hornbills found in India. From Great to Grey. Hornbills are generally monogamous. The pair lasts long. Here a Wreathed Hornbill couple. pic.twitter.com/8IpB2YG3Sc
They move together and live very long.
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) June 19, 2022
When the couple is expecting they go shopping for a house. A nest.
It can be a natural cavity in a tree or nest of some other bird or their old nest. pic.twitter.com/bfJ1OLBLko
After finding that house the female will enter. She will occupy the nest and will seal the nest from inside with whatever material is available. Just a small slit will be kept for open food. Like this one. A female hornbill is inside it. pic.twitter.com/ioxutObJwo
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) June 19, 2022