வித்தியாசமாக திருமணம் செய்ய ஆசை! அதான் இப்படி! நிலவில் கல்யாணத்தை நடத்திய கால்பந்து வீரர்!
முன்னாள் பார்சிலோனா கால்பந்து வீரரரான கெவின் பிரின்ஸ் படெங், இவர் தனது காதலி மற்றும் இத்தாலிய மாடல் வாலண்டினா ஃப்ராடெக்ராடாவை நிலவில் திருமணம் செய்து கொண்டார்.
![வித்தியாசமாக திருமணம் செய்ய ஆசை! அதான் இப்படி! நிலவில் கல்யாணத்தை நடத்திய கால்பந்து வீரர்! Ex-Barcelona footballer Prince marries Italian model on Moon in metaverse, pics surface வித்தியாசமாக திருமணம் செய்ய ஆசை! அதான் இப்படி! நிலவில் கல்யாணத்தை நடத்திய கால்பந்து வீரர்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/12/1bbd598f77247ce5b0c61c4fb987039f_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
முன்னாள் பார்சிலோனா கால்பந்து வீரரரான கெவின் பிரின்ஸ் படெங், இவர் தனது காதலி மற்றும் இத்தாலிய மாடல் வாலண்டினா ஃப்ராடெக்ராடாவை நிலவில் திருமணம் செய்து கொண்டார்.
வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில் நாம் கனவில் நினைப்பது மட்டுமில்லாமல் பொழுதுபோக்காக பேசுவதும் கூட நிஜத்தில் தொழில்நுட்ப உலகின் அபரிமிதமான வளர்ச்சியினால் நனவாகிறது.
முன்னாள் பார்சிலோனா கால்பந்து வீரரரான கெவின் பிரின்ஸ் படெங், இவர் தனது காதலி மற்றும் இத்தாலிய மாடல் வாலண்டினா ஃப்ராடெக்ராடாவை மெடோபெர்ஸ் முறையில் நிலவில் திருமணம் செய்து கொண்டார். முன்னாள் பார்சிலோனா கால்பந்து வீரர் கெவின் பிரின்ஸ் படெங் மற்றும் இத்தாலிய மாடலுமாகிய வாலாண்டினா ஃப்ரடெக்ராடா ஆகியோர் காதலித்து வந்தனர். இந்நிலையில் தனது காதலி மற்றும் இத்தாலிய மாடலுமாகிய வாலாண்டினா ஃப்ரடெக்ராடா தங்களது காதலை மிகச் சிறப்பாக மற்றும் யாரும் கொண்டாடாத வகையில் கொண்டாட வேண்டும் என தெரிவித்ததாக முன்னாள் பார்சிலோனா கால்பந்து வீரரரான கெவின் பிரின்ஸ் படெங் கூறியிருந்தார்.
மெட்டோபெர்ஸ் முறையில் திருமணம்
View this post on Instagram
இந்நிலையில் முன்னாள் பார்சிலோனா கால்பந்து வீரரரான கெவின் பிரின்ஸ் படெங் தனது காதலியிம் இத்தாலிய மாடலுமாகிய வாலாண்டினா ஃப்ரடெக்ராடாவை நிலவிலி மெட்டோபெர்ஸ் முறையில் திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் மெட்டோபெர்ஸ் முறையில் நிலவில் திருமணம் செய்து கொண்டதன் படங்களை தந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு, ஏற்கனவே தனது காதலி வாலாண்டினா ஃப்ரடெக்ராடா தங்களது காதலை மிகச் சிறப்பாக மற்றும் யாரும் கொண்டாடாத வகையில் கொண்டாட வேண்டும் என தெரிவித்திருந்ததாகவும் குறிப்பிட்டிருக்கிறார். மேலும் அதற்காகத்தான் எங்களது திருமணம் இவ்வாறு மெட்டோபெர்ஸ் முறையில் நிலவில் நடைபெற்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதுமிருந்தும் வாழ்த்துகள்
இந்த படத்தில் கால்பந்து வீரரரான கெவின் பிரின்ஸ் படெங் மற்றும் அவரது காதலி வாலாண்டினா ஃப்ரடெக்ராடா திருமண கோலத்திலும், அவர்களது செல்லப் பிராணிகளும், நண்பர்களும் உள்ளனர். இப்படப் பார்ப்பதற்கு அழகாக இருப்பதால் இவர்களின் ரசிகர்கள் உலகம் முழுவதிலிருந்தும் வாழ்த்துகளை கூறிவருகின்றனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)