"நீ செத்துட்டா ட்விட்டர் எனக்குதான?", யூட்யூபர் கேள்விக்கு எலன் மஸ்க் கொடுத்த பதில்!
மாயாண்டி குடும்பத்தார் படத்தில் வரும் காமெடி போல "எப்பா நீ செத்து போய்ட்டா இந்த ரெண்டு செருப்பும் எனக்கு தானப்பா" எனபது போல "நீங்க செத்துப்போய்ட்டா ட்விட்டர நான் எடுத்துக்கவா" என்று கேட்டுள்ளார்.
ட்விட்டரில் பல ஸ்வாரஸ்யமான உரையாடல் நடப்பது வழக்கம். ட்விட்டரை எலன் மஸ்க் வாங்கியது பலர் அறிந்த செய்தியே. ஏப்ரல் 25 அன்று ட்விட்டரை ரூ.3.3 லட்சம் கோடிக்கு வாங்கியதில் இருந்து, டெஸ்லா CEO மற்றும் SpaceX நிறுவனர் எலான் மஸ்க் பல சந்தேகத்திற்கிடமான ட்வீட்டுகளை பதிவிட்டு வருகிறார். உலகின் பெரும் பணக்காரர்களின் ஒருவரான எலான் மஸ்க், தன் பணிகளுக்கு இடையே, சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கிறார். இவரின் செயல்பாடுகளை பயனர்கள் உற்று கவனித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி அவர் பதிவு செய்த ஒரு வித்யாசமான டீவீட்டிற்கு உலக பேமஸ் யூட்யூபர் மிஸ்டர் பீஸ்ட் அளித்த ரிப்ளையும் அதற்கு எலன் மஸ்க் அளித்த பதிலும்தான் தற்போது பேசுபொருள். தமிழில் பிரபல காமெடியுடன் அதனை ஒப்பிட்டு தமிழ் ட்விட்டர் உலகும் ட்ரோல் செய்து வருகிறது.
If that happens can I have Twitter
— MrBeast (@MrBeast) May 9, 2022
அதன்படி மே 9 அன்று, எலான் மஸ்க் "நான் மர்மமான முறையில் இறந்தால் அதற்கான காரணத்தை நீங்கள் தெரிந்துகொண்டால் மகிழ்ச்சி" என்று ட்வீட் செய்து பீதியைக் கிளப்பினார். எலான் மஸ்க் தற்போது பதிவிடும் அனைத்து ட்வீட்டுகளும் ஹாட் டிரெண்டாகி வருகிறது. அவர், உக்ரைன் அரசுக்கு தனது SpaceX நிறுவனத்தின் ஸ்டார்லிங் பிராட்பேண்ட் சேவையை வழங்கியதற்காக, இவரை ரஷ்ய அரசு மிரட்டி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் தான் எலான் மஸ்க் மரணம் குறித்து ட்வீட் செய்தார் என்று கூறப்படுகிறது.
Jokes aside, be safe! I wuv u 🥺❤️
— MrBeast (@MrBeast) May 9, 2022
இதற்கு உடனடியாக பதில் கொடுத்த மிஸ்டர் பீஸ்ட் என அழைக்கப்படும் யூடியூப் நட்சத்திரமான ஜிம்மி டொனால்ட்சன், மாயாண்டி குடும்பத்தார் படத்தில் வரும் காமெடி போல "எப்பா நீ செத்து போய்ட்டா இந்த ரெண்டு செருப்பும் எனக்கு தானப்பா" எனபது போல "நீங்க செத்துப்போய்ட்டா ட்விட்டர நான் எடுத்துக்கவா" என்று கேட்டுள்ளது இப்போது வைரல் ஆகி வருகிறது. அதற்கு மஸ்க், "சரி" என்று பதிலளித்தார். "நகைச்சுவைகள் ஒருபுறம் இருக்க, பாதுகாப்பாக இருங்கள்!" என்று யூடியூபர் அதற்கு பதிலளித்திருந்தார்.