"கணக்கு காட்டுங்கள், டெஸ்லா ஷேரை விற்று தருகிறேன்" - 6 பில்லியனில் உலக பசியை போக்கலாம் என்று WFP-யிடம் எலான் மஸ்க்!
எலான் மஸ்க் பங்குகளை விற்று சுமார் 6 பில்லியன் டாலர்களை WFP-க்கு வழங்க தயாராக இருப்பதாக முன்வந்துள்ளார்.
WFP இயக்குனர் டேவிட் பீஸ்லி, எலான் மஸ்க் அவரது ஷேரில் 2 சதவிகிதத்தை கொடுத்தால் உலக மக்களின் பசியை முற்றிலும் ஒழித்துவிடலாம் என்று கூறியது பரபரப்பாக பேசப்பட்டது. அப்போது எலான் மஸ்கின் ஒட்டுமொத்த ஷேரில் 2 சதவிகிதம் 6 பில்லியன் டாலராக கணக்கிடப்பட்டது. அதற்கு ட்விட்டரில் பதிலளித்த எலான் மஸ்க், ஆறு பில்லியன் டாலர் கொண்டு எவ்வாறு உலக மக்களின் பசியை ஒட்டுமொத்தமாக போக்க முடியும் என்று விளக்குங்கள், நான் என் ஷேர்களை விற்று அதனை செய்ய தயார் என்று சவால் விட்டிருக்கிறார். எலான் மஸ்க் தெரிவித்த கருத்துகள் ஆனது அவரது நிறுவனங்கள் குறித்தோ அல்லது கிரிப்டோ கரன்சி குறித்தோ அல்ல, சமூகம் சார்ந்தது ஆகும். உலகளாவிய பசி குறித்த தீவிரமான விஷயம் ஆகும் என்பதால் இது அனைவராலும் பேசப்படும் தலைப்பாகி போனது. ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டத்தின் (டபிள்யூஎஃப்பி) இயக்குனர் டேவிட் பீஸ்லி, சிஎன்என்-க்கு பதிலளிக்கையில், மஸ்க் அல்லது யாராவது ஒரு பில்லியனர்களின் 2 சதவீத செல்வத்தை கொடுத்தால் உலகளாவிய பசியை தீர்க்க முடியும் என கூறியிருக்கிறார்.
இதையடுத்து ஐநா சரியான உத்தியை கொண்டு வந்தால், தனது பணத்தை கொடுக்க மஸ்க் ஒப்புக் கொண்டார். உலகின் பசியை 6 பில்லியன் டாலர் எவ்வாறு தீர்க்கும் என்பதை WFP டுவிட்டர் விவரிக்க முடிந்தால், தற்போதே டெஸ்லா பங்குகளை விற்று அதை செய்வேன் என இணை நிறுவனரின் டீவீட்டுக்கு மஸ்க் பதிலளித்தார். அதில் பணம் எவ்வாறு செலவிடப்படுகிறது என்பதை பொதுமக்கள் துல்லியமாக பார்க்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார். டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸின் தலைமை நிர்வாக அதிகாரியான மஸ்க், மொத்தம் 300 பில்லியனுக்கும் அதிகமான பணமதிப்பை கொண்டிருக்கிறார். பீஸ்லி கூற்றுப்படி, இந்த செல்வத்தில் 2 சதவீதம் சுமார் 6 பில்லியன் டாலர் இருக்க வேண்டும். "42 மில்லியன் மக்களுக்கு உதவலாம், நாம் அவர்களிடம் இதனை கொண்டு சேர்க்கவில்லை என்றால் மக்கள் பசியால் இறந்துவிடுவார்கள். இதை பெரிய பணக்காரர்கள் கொடுப்பது ஒன்றும் கடினமான காரியம் அல்ல" என்று பீஸ்லி அவரது ட்விட்டர் தெரிவித்தார். அதிப் முழுமையான முறையான விளக்கத்தை அவர் அளிக்கவில்லை.
ஆனால் இதுகுறித்து தற்போது பீஸ்லி விளக்கமளிக்கையில், "6 பில்லியன் டாலர் உலகப் பசியை தீர்க்கும் என்று நான் ஒருபோதும் கூறவில்லை. இது பசிப்பட்டினியின் நெருக்கடியை, 42 மில்லியன் உயிர்களை காப்பாற்ற ஒருமுறைக்கு போதுமான நன்கொடையாகும்" என குறிப்பிட்டதாக கூறினார். இந்த சவால் ஆனது இன்னும் முற்றுப்புள்ளி பெறாமல் இருக்கிறது. WFP தனது லெட்ஜரை பொதுமக்களுக்கு காட்ட வேண்டும் என மஸ்க் கேட்கும்போது போது WFP இயக்குனர், பில்லியனர்கள் எப்படி உலகப் பசியை தீர்க்க முடியும் என்பது குறித்து விவாதிக்க வேண்டும் என விரும்புகிறார். 2021 ஆம் ஆண்டுக்கான உலக பணக்காரர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார் டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க். அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் உலக பணக்காரர் பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு பின்தங்கியிருக்கிறார். டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், தற்போது 210 பில்லியன் டாலர் மதிப்புடன் உலகின் மிகப் பெரிய பணக்காரர் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.