Earthquake: ஈரானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்... நள்ளிரவில் பயங்கரம்... 7 பேர் உயிரிழந்த சோகம்..!
ஈரான் எல்லையில் நள்ளிரவு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
![Earthquake: ஈரானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்... நள்ளிரவில் பயங்கரம்... 7 பேர் உயிரிழந்த சோகம்..! Earthquake 7 killed over 400 injured as 5.9 magnitude earthquake rocks northwest Iran Earthquake: ஈரானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்... நள்ளிரவில் பயங்கரம்... 7 பேர் உயிரிழந்த சோகம்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/29/66764ab686db7bb5bdcd6806d6efd5fb1674960527743571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
துருக்கி-ஈரான் எல்லையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. ஈரான் நாட்டின் பல பகுதிகளில் 5.9 ரிக்டர் அளவில் உணரப்பட்ட கடுமையான நிலநடுக்கத்தால் 7 பேர் உயிரிழந்ததாகவும், 440 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 10 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Notable quake, preliminary info: M 5.9 - 7 km SW of Khowy, Iran https://t.co/Rjmgz05sSM
— USGS Earthquakes (@USGS_Quakes) January 28, 2023
நிலநடுக்கத்தால் கோய் நகரில் உள்ள பல வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. மேலும் அப்பகுதி முழுவதும் மின்சாரம் தடை செய்யப்பட்டுள்ளது. உறைபனி நிலவுவதால் அப்பகுதியில் மீட்டு பணிகள் தாமதாக நடைபெற்று வருகிறது.
🇮🇷 The earthquake occurred in the north-west of Iran, different sources write about the magnitude from 5.6 to 5.9.
— marina alikantes (@Marianna9110) January 28, 2023
Two people died, 122 were injured, media reported (pictured and video shows the consequences in the area of the city of Khoi). pic.twitter.com/FeWGZNj3OC
ஈரானின் செய்தி நிறுவனமான ஐஎஸ்என்ஏ படி, 447 பேர் காயமடைந்துள்ளனர். ஈரானின் மேற்கு அஜர்பைஜான் மாகாணத்தில் உள்ள பகுதிக்கு மீட்புக் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும், மருத்துவமனைகள் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் ஈரானிய அவசர அதிகாரிகள் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் பல வீடுகள் இடிந்து விழுந்த நிலையில், கட்டட இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதுமட்டுமின்றி இதுவரை 447 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு உள்துறை அமைச்சர் மற்றும் மீட்பு அதிகாரிகள் என பலரும் மீட்பு பணிகளை கண்காணிக்க சென்றுள்ளனர். சில பகுதிகளில் மின்சார விநியோகத்தை சீரமைக்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
முன்னதாக,
ஜூலை 2022ஆம் ஆண்டில் தெற்கு ஈரானில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கதால் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 44 பேர் காயமடைந்துள்ளனர். தலைநகர் தெஹ்ரானில் இருந்து சுமார் 1,00 கிலோ மீட்டர் தெற்கே உள்ள ஹோர்மோஸ்கான் மாகாணத்தில் சுமார் 300 பேர் வசிக்கும் கோஷ் கிராமத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
2003ஆம் ஆண்டில் ஈரான் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கமானது பல உயிர்களை பறித்தது. அதன்படி, 2003ல் 6.6 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 26 ஆயிரிம் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
அதேபோன்று 2017ல் 7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தாகவும், 9,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)