காலநிலை பிரச்சனைகளுக்காக, இறைச்சி விளம்பரங்களை தடைசெய்யும் நகரம்.. என்ன நடந்தது?
கிரீன் ஹவுஸ் வாயுவில் 14 சதவீதமானது இறைச்சி உற்பத்தியினால் உண்டாகிறது என்று ஐக்கிய நாடுகளின் சபையின் ஒரு ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
புவி வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்த, புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாட்டைக் கணிசமாகக் குறைக்க, மின்மயமாக்கப்பட்ட உலகளாவிய எரிசக்தி அமைப்பைத் தொடர வேண்டும், சுத்தமான புதுப்பிக்கத்தக்க சக்தியைப் பயன்படுத்த வேண்டும், கார்பனை அகற்றவும் சேமிக்கவும் இயற்கை அடிப்படையிலான தீர்வுகளைப் பயன்படுத்தவும் மற்றும் நகரங்களை அதிக ஆற்றல் திறன் கொண்டதாக மாற்றவும் வேண்டும் என்று, காலநிலை மாற்றம் தொடர்பான அரசுகளுக்கிடையேயான குழுவின் (ஐபிசிசி - IPCC) சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது
கிரீன் ஹவுஸ் வாய்வு எனப்படும் பச்சை வீட்டு விளைவு அல்லது பசுமை இல்ல வாயுவை குறைப்பதற்கும் காலநிலை மாற்றத்தை எதிர்த்து போராடும் எண்ணத்துடனும் நெதர்லாந்து நாட்டின் ஹார்லிங்க் நகரமானது இறைச்சி விளம்பரங்களுக்கு தடையை விதித்துள்ளது. இறைச்சி உற்பத்தியானது, அதிலும் மாட்டு இறைச்சி உற்பத்தியானது,அளவுக்கு அதிகமான மீத்தேன் வாயுக்களை வெளியிடுகிறது.இதை கருத்தில் கொண்டு மக்களை இறைச்சியின் விருப்பத்தில் இருந்து விடுவிக்க இறைச்சி சம்பந்தமான விளம்பரங்களுக்கு நெதர்லாம் நாட்டின் ஹார்லெம் நகரம் தடை விதித்துள்ளது.
நெதர்லாந்து நாட்டின் அரசாங்கம் இந்த தடையைப் பற்றி இன்னும் பரிசீரிக்கவில்லை. ஆனாலும், நெதர்லாந்து நாட்டின் தலைநகரமான ஆம்ஸ்டர்டாமின் மேற்கில் உள்ள, ஒரு லட்சத்து 60 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட ஹார்லெம் நகரம்,வருகின்ற 2024 முதல்,இறைச்சி விளம்பரங்களுக்கு தடையை விதித்து நடைமுறைப்படுத்த உள்ளது. பூமி வெப்பமடைவதற்கு காரணமான கிரீன்ஹவுஸ் வாயுக்களின் வெளிப்பாட்டிற்கு இறைச்சி அதிக அளவில் மக்களால் வாங்கப்படுவதும் அந்த இறைச்சியை உற்பத்தி செய்யும் கூடங்களுமே மூன்றில் ஒரு பங்கு கிரீன் ஹவுஸ் வாயுக்களின் வெளியேற்றத்திற்கு காரணம் என்ற உண்மையின் அடிப்படையில் ஹார்லெம் நகரம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
ஹார்லெம் நகரமானது நகரத்தில் உள்ள ஆகப்பெரிய சுவரொட்டிகள் பேருந்து நிறுத்தங்கள் மற்றும் திரைப்பட சுவரொட்டிகள் என அனைத்தையும் அகற்றுவது நெதர்லாந்து நாட்டின் மத்திய அரசிடம் இருந்து விமர்சனங்களை பெற்றுள்ளது. மக்களுக்கு எது சிறப்பானது என்பதை இவர்களாகவே முடிவு செய்து கொள்கிறார்கள் என்ற ரீதியில் விமர்சனங்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.
க்ரோன் லிங்க்ஸ் கட்சியின் கவுன்சிலர் ஜிக்கி கூற்றுப்படி மக்கள் அவர்களுடைய சொந்த என்ன வேக வைக்கிறார்கள் என்ன சொல்லுகிறார்கள்? என்ன உணவை சாப்பிடுகிறார்கள் என்பதை பார்ப்பதோ அல்லது இதைத்தான் சாப்பிட வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது தங்களின் நோக்கம் அல்ல இருப்பினும் அவர்கள் இறைச்சியின் பால் அதிக விருப்பம் கொண்டு அதை சாப்பிடும் நேரத்தில் புவி வெப்பமயதமாதலுக்கான ஒரு ஒரு காரணியாக தாங்களும் இருக்கிறோம் என்பதை நினைவில் வைத்துக் கொண்டால் போதுமானது இதுவே அனைத்தையும் சரி செய்ய ஒரு துவக்க புள்ளியாக இருக்கும் என்று கூறுகிறார். மனிதனால் உருவாக்கப்பட்ட கிரீன் ஹவுஸ் வாயுவில் 14 சதவீதமானது இறைச்சி உற்பத்தினால் உண்டாகிறது என்று ஐக்கிய நாடுகளின் சபையின் ஒரு ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது. ஐரோப்பாவில் மாடுகள், பன்றிகள் மற்றும் ஆட்டு இறைச்சி போன்றவை பரவலான பயன்பாட்டில் உள்ளன இதில் கிரீன் ஹவுஸ் வாயுக்களின் உற்பத்தியில் மாட்டிறைச்சி உற்பத்திக்கு அடுத்தபடியாக ஆராய்ச்சி உற்பத்தி இருக்கிறது
டச்சு பேராசிரியரான, ஹெர்மன் ப்ரோரிங் இது பற்றி கருத்து தெரிவிக்கையில் இது தடையானது அடிப்படை பேச்சுரிமைக்கு எதிரான தடையை விட மிக மோசமானது இதை எதிர்த்து சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் சட்ட நடவடிக்கை எடுக்கலாம் என்று எச்சரித்துள்ளார். இதே நேரம் நேரம் விமான உற்பத்தி, பூமியில் இருந்து அகழ்ந்து எடுக்கப்படும் பெட்ரோலிய மூலப்பொருட்கள் மற்றும் இயற்கை எரிவாயுக்களை எடுப்பதற்கோ அல்லது அது சம்பந்தமான வியாபாரத்திற்கோ நெதர்லாந்து ஏற்கனவே தடை விதித்திருப்பது குறிப்பிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.