மேலும் அறிய

மூன்றாம் உலக போர்...அணு ஆயுத பயன்பாடு...பகீர் கிளப்பும் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்..!

கடந்த 2016 ஆம் ஆண்டு, ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்த சம்பவம் ட்ரம்புக்கு பெரிய தலைவலியாகவும், அவரது அரசியல் எதிர்காலத்தையே பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது. 

ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்த விவகாரத்தில் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கைது  செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த ஆண்டு நடக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட டிரம்ப் விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், குற்ற வழக்கில் டிரம்ப் கைதாகி இருப்பது உலக அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது.

தலைவலியாக மாறிய சம்பவம்:

கடந்த 2016 ஆம் ஆண்டு, ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்த சம்பவம் ட்ரம்புக்கு பெரிய தலைவலியாகவும், அவரது அரசியல் எதிர்காலத்தையே பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது. 

குற்ற வழக்கில் சிக்கிய முதல் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் ஆவார். குற்ற வழக்கு பதிவு செய்ததை தொடர்ந்து முதல்முறையாக மக்கள் மத்தியில் பொதுக்கூட்டத்தில் பேசிய டிரம்ப், பல திடுக்கிடும் தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

மூன்றாம் உலக போர் குறித்து பேசிய அவர், பைடன் அரசாங்கத்தின் கீழ் உலகம், அணு ஆயத மூன்றாம் உலகப் போரை எதிர்கொள்ளும் வாய்ப்பு உள்ளது என்றும் தற்போதைய அமெரிக்க அரசு நாட்டை அழித்து வருவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், "அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவோம் என பல்வேறு நாடுகள் வெளிப்படையாக மிரட்டி வருகின்றன.

நான் அதிபராக பதவி வகித்தபோது, மற்ற நாடுகள் இதுபோன்று பேசியதில்லை. இது தொடர்பாக ஆலோசனை செய்தது இல்லை. இது பைடன் நிர்வாகத்தின் தலைமையின் கீழ் முழுமையான அணுசக்தி மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கும். நம்பினாலும் நம்பாவிட்டாலும் நாம் அதிலிருந்து வெகு தொலைவில் இல்லை.

பைடன் மீது சரமாரி குற்றச்சாட்டு:

ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த அதிபர் ஜோ பைடனின் கீழ் அமெரிக்கா இப்போது குழப்பத்தில் உள்ளது. நமது பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வருகிறது. பணவீக்கம் கட்டுக்குள் இல்லை. சீனாவுடன் ரஷ்யா இணைந்துள்ளது. நம்ப முடிகிறதா? சவுதி அரேபியா ஈரானுடன் இணைந்துள்ளது.

சீனா, ரஷியா, ஈரான், வட கொரியா ஆகியவை இணைந்து அச்சுறுத்தும் மற்றும் அழிவுகரமான கூட்டணியாக உருவாகியுள்ளது. என்னுடைய தலைமையில் இது ஒருபோதும் நடந்திருக்காது" என்றார்.

உக்ரைன் போர் குறித்து பேசிய அவர், "நான் உங்கள் அதிபராக இருந்திருந்தால் இது ஒருபோதும் நடந்திருக்காது. ரஷியாவும் உக்ரைனை தாக்காது. அந்த உயிர்கள் அனைத்தும் காப்பாற்றப்படும். அந்த அழகான நகரங்கள் அனைத்தும் அப்படியே இருந்திருக்கும். நமது நாணயம் வீழ்ச்சியடைந்து வருகிறது. விரைவில் உலகத் தரமாக இருக்காது. இது 200 ஆண்டுகளில் நமது மிகப்பெரிய தோல்வியாக இருக்கும்" என்றார்.

டொனால்ட் ட்ரம்ப் மீது ஏற்கனவே பல பெண்கள் பாலியல் புகார் அளித்துள்ளனர். இதுதொடர்பான வீடியோ ஆதாரங்களும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain Alert: தமிழகமே..! இன்று 16 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் அலெர்ட் - வானிலை மையம் எச்சரிக்கை
TN Rain Alert: தமிழகமே..! இன்று 16 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் அலெர்ட் - வானிலை மையம் எச்சரிக்கை
IND vs NZ 1st Test:இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட்; நியூசிலாந்து ஆல் அவுட்!விட்டதை பிடிக்குமா இந்தியா?
IND vs NZ 1st Test:இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட்; நியூசிலாந்து ஆல் அவுட்!விட்டதை பிடிக்குமா இந்தியா?
Breaking News LIVE 18th OCT 2024:  “அனைவரின் முதுகில் குத்திய துரோகியை மக்கள் நம்பத் தயாராக இல்லை” -ஓ.பன்னீர்செல்வம்
Breaking News LIVE 18th OCT 2024: “அனைவரின் முதுகில் குத்திய துரோகியை மக்கள் நம்பத் தயாராக இல்லை” -ஓ.பன்னீர்செல்வம்
 “துரோகம்” தியாகம் பற்றி பேசுவதா?- அதலபாதாளம் சென்ற அதிமுக- ஈபிஎஸ்ஸை மறைமுகமாக சாடிய ஓபிஎஸ்
 “துரோகம்” தியாகம் பற்றி பேசுவதா?- அதலபாதாளம் சென்ற அதிமுக- ஈபிஎஸ்ஸை மறைமுகமாக சாடிய ஓபிஎஸ்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Isha Yoga Issue : ”மர்ம மரணம்.. தகன மேடை..காணாமல் போன பக்தர்கள்!” ஈஷா மீது போலீஸ் பகீர்!Ponmudi vs Senji Masthan : Serious Mode-ல் பொன்முடி!ஹாயாக பிஸ்கட் சாப்பிட்ட மஸ்தான்!பதறிய அதிகாரிகள்Pradeep John vs Sumanth Raman : பிரதீப் ஜான் vs சுமந்த் ராமன்!காரசார வாக்குவாதம்”சும்மா நொய் நொய்-னு”Arun IAS | ”ஐயா நீங்க நல்லா TOP-ல வருவீங்க”காரை நிறுத்திய முதியவர்! நெகிழ்ந்து போன IAS அதிகாரி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain Alert: தமிழகமே..! இன்று 16 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் அலெர்ட் - வானிலை மையம் எச்சரிக்கை
TN Rain Alert: தமிழகமே..! இன்று 16 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் அலெர்ட் - வானிலை மையம் எச்சரிக்கை
IND vs NZ 1st Test:இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட்; நியூசிலாந்து ஆல் அவுட்!விட்டதை பிடிக்குமா இந்தியா?
IND vs NZ 1st Test:இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட்; நியூசிலாந்து ஆல் அவுட்!விட்டதை பிடிக்குமா இந்தியா?
Breaking News LIVE 18th OCT 2024:  “அனைவரின் முதுகில் குத்திய துரோகியை மக்கள் நம்பத் தயாராக இல்லை” -ஓ.பன்னீர்செல்வம்
Breaking News LIVE 18th OCT 2024: “அனைவரின் முதுகில் குத்திய துரோகியை மக்கள் நம்பத் தயாராக இல்லை” -ஓ.பன்னீர்செல்வம்
 “துரோகம்” தியாகம் பற்றி பேசுவதா?- அதலபாதாளம் சென்ற அதிமுக- ஈபிஎஸ்ஸை மறைமுகமாக சாடிய ஓபிஎஸ்
 “துரோகம்” தியாகம் பற்றி பேசுவதா?- அதலபாதாளம் சென்ற அதிமுக- ஈபிஎஸ்ஸை மறைமுகமாக சாடிய ஓபிஎஸ்
IPL 2025 Auction:ஐபிஎல் மெகா ஏலம்;லக்னோ அணியிலிருந்து விலகும் கே.எல்.ராகுல்?
IPL 2025 Auction:ஐபிஎல் மெகா ஏலம்;லக்னோ அணியிலிருந்து விலகும் கே.எல்.ராகுல்?
One City One Card : பஸ், ரயில், மெட்ரோ எல்லாத்துக்கும் ஒரே அட்டை.. ஹைடெக்காக மாறும் சென்னை சிட்டி
பஸ், ரயில், மெட்ரோ எல்லாத்துக்கும் ஒரே அட்டை.. ஹைடெக்காக மாறும் சென்னை சிட்டி
"எனக்கு பரீட்சை இருக்கு! நான் வரல" +2 தேர்வுக்காக நியூசி. தொடரில் இருந்து விலகிய இந்திய கிரிக்கெட் பிரபலம்!
Gold Silver Price: 3 நாட்களில் ரூபாய் 1160 உயர்வு! ரூ.58 ஆயிரத்தை நெருங்கியது தங்கம் விலை!
Gold Silver Price: 3 நாட்களில் ரூபாய் 1160 உயர்வு! ரூ.58 ஆயிரத்தை நெருங்கியது தங்கம் விலை!
Embed widget