மேலும் அறிய

Queen Elizabeth | வெறுமனே பேசாதீர்கள்... செயலில் காட்டுங்கள்... எரிச்சலடைந்த பிரிட்டன் ராணி எலிசபெத்..

பசுமை இல்ல வாயுக்களை வெளியேற்றும் மிகப்பெரிய நாடாக சீனா உள்ளது. பருவநிலை மாற்றம் குறித்த மாநாட்டில் ஜீ ஜின்பிங் கலந்துக்கொள்ளமாட்டார் என கூறியிருப்பது பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது

காலநிலை மாற்றம் குறித்து பேசமட்டும் செய்து ஆனால் உலக வெப்பமயமாதலை தடுக்க எந்த வித நடவடிக்கைகளை எடுக்காத உலகத் தலைவர்கள் எரிச்சலூட்டுகிறார்கள் என பிரிட்டன் அரசி எலிசபெத் தெரிவித்துள்ளார்.  ஸ்காட்லாந்தின் க்ளாஸ்கோவில் நடைபெறும் COP26 காலநிலை உச்சிமாநாட்டில் யார் கலந்துக் கொள்வார்கள் என்பது இன்னும் தெளிவற்றதாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

அக்டோபர் 31ம் தேதி முதல் நவம்பர் 12ம் தேதி வரை கிளாஸ்கோவில் காலநிலை உச்சிமாநாடு நடைபெறுகிறது. இதில் கலந்துக்கொள்ளுமாறு பல்வேறு உலகத் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து,  சீன அதிபர் ஜி ஜின்பிங் COP26 காலநிலை உச்சி மாநாட்டில் நேரில் கலந்து கொள்ள மாட்டார் என்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பசுமை இல்ல வாயுக்களை  (கிரீன்ஹவுஸ்) வெளியேற்றும் மிகப்பெரிய நாடாக சீனா உள்ளது. இந்த சூழலில் பருவநிலை மாற்றம் குறித்த மாநாட்டில் ஜீ ஜின்பிங் கலந்துக்கொள்ளமாட்டார் என கூறியிருப்பது பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்துதான் பிரிட்டன் அரசி எலிசபெத் இந்தக் கருத்தை தெரிவித்துள்ளார்.

Queen Elizabeth | வெறுமனே பேசாதீர்கள்... செயலில் காட்டுங்கள்... எரிச்சலடைந்த பிரிட்டன் ராணி எலிசபெத்..

இந்நிலையில் COP26 உச்சிமாநாடு பற்றி தான் தொடர்ச்சியாக கேள்விபட்டு வருவதாக 95 வயது பிரிட்டன் ராணி தெரிவித்துள்ளார். இந்த மாநாட்டில் யார் யார் கலந்துக் கொள்வார்கள் என இன்னும் தெளிவாக தெரியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் சொற்களில் மட்டுமே பருவநிலை மாற்றம் பற்றி பேசிவிட்டு அதை செயல்களில் கொண்டுவராத தலைவர்கள் எரிச்சலூட்டுகிறார்கள் என தெரிவித்துள்ளார். அவருடைய ராயல் குடும்பத்திலிருந்து இந்த வாரம் மட்டுமே 3வது விமர்சனத்தை முன்வைக்கும் நபராக இவர் உள்ளார். ஏனெனில் ஏற்கெனவே அவருடைய மகன் இளவரசர் சார்ல்ஸ் COP (Conference of the Parties) தலைவர்கள் செயல்களில் ஈடுபடவேண்டும் வெறும் சொற்களால் பேசக்கூடாது எனவும் தெரிவித்திருந்தார். 

இந்த உச்சிமாநாட்டின் தொகுப்பாளர் ஜான்சன் இதுகுறித்து பேசியபோது, இந்த உச்சிமாநாடு உலக வெப்பமாயதலை தடுக்க நம் முன்னே இருக்கும் பெரிய மற்றும் முக்கிய வாய்ப்பு என தெரிவித்தார். உலகத்தலைவர்கள் அதற்கான செயல்களுடன் முன்வர வேண்டும் என்றும் அவர் தெரிவித்தர். கனடா நாட்டின் அதிபர் ஜோ பைடன் மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் இந்த மாநாட்டில் கலந்துக்கொள்வார்கள் எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கலந்துக் கொள்வாரா என்பது பற்றி அந்நாடு சார்பில் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. 

ஜப்பானில் அக்டோபர் 31ல் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனைத்தொடர்ந்து அந்நாட்டு அதிபர் கலந்துக்கொள்ள முயற்சிகள் மேற்கொள்வதாக உறுதியளித்துள்ளார். சீன அதிபர் ஜி ஜின்பிங் கலந்துக்கொள்ளமாட்டார் என அந்நாட்டு ஊடகங்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்று தொடங்கிய காலத்திலிருந்து அவர் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளவில்லை. ஆனால் காணொலிக் காட்சியின் வாயிலாக உலகத்தலைவர்களுடனான சந்திப்பில் ஈடுபட்டார்.
Queen Elizabeth | வெறுமனே பேசாதீர்கள்... செயலில் காட்டுங்கள்... எரிச்சலடைந்த பிரிட்டன் ராணி எலிசபெத்..

இந்நிலையில் தென்மேற்கு இங்கிலாந்தில் ஒரு பள்ளிக்கு பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், “உலகத்தலைவர்களை அழைத்து கிரீன் ஹவுஸ் வாயுக்களை நிறுத்தி, உலகத்தைக் காப்பாற்றுமாறு சொல்வேன் என உங்களுக்கு உறுதியளிக்கிறேன்” என தெரிவித்தார். அதேபோல இலைவடிவ காகித்தில் தனது உறுதிமொழியை எழுதி அதில் தன் கையெழுத்தை இட்டு அதை மாணவர்களிடம் உயர்த்திக் காட்டினார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Vijay - Seeman:
Vijay - Seeman: "மாணவ - மாணவியரை ஊக்கப்படுத்திய விஜய்” - நெகிழ்ந்து போன சீமான்.. என்ன சொன்னார் தெரியுமா?
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Vijay Honours Students: மாணவர்கள் என்ன படிக்கலாம்?- எப்படி துறை தேர்வு செய்யலாம்?- கேரியர் குறித்து விஜய் கொடுத்த டிப்ஸ்
Vijay Honours Students: மாணவர்கள் என்ன படிக்கலாம்?- எப்படி துறை தேர்வு செய்யலாம்?- கேரியர் குறித்து விஜய் கொடுத்த டிப்ஸ்
Thalapathy Vijay:
"எனக்கு பயமா இருக்கு” - போதைப்பொருள் பயன்பாடு குறித்து மாணவர்களுக்கு விஜய் அட்வைஸ்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay - Seeman:
Vijay - Seeman: "மாணவ - மாணவியரை ஊக்கப்படுத்திய விஜய்” - நெகிழ்ந்து போன சீமான்.. என்ன சொன்னார் தெரியுமா?
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Vijay Honours Students: மாணவர்கள் என்ன படிக்கலாம்?- எப்படி துறை தேர்வு செய்யலாம்?- கேரியர் குறித்து விஜய் கொடுத்த டிப்ஸ்
Vijay Honours Students: மாணவர்கள் என்ன படிக்கலாம்?- எப்படி துறை தேர்வு செய்யலாம்?- கேரியர் குறித்து விஜய் கொடுத்த டிப்ஸ்
Thalapathy Vijay:
"எனக்கு பயமா இருக்கு” - போதைப்பொருள் பயன்பாடு குறித்து மாணவர்களுக்கு விஜய் அட்வைஸ்
Kalki 2898AD : முதல் நாளிலே 150 கோடிக்கு மேல் வசூல் செய்த கல்கி 2898 AD!
Kalki 2898AD : முதல் நாளிலே 150 கோடிக்கு மேல் வசூல் செய்த கல்கி 2898 AD!
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
Vijay Honours Students: “படித்தவர்கள் அரசியலுக்கு வரணும்.. நல்ல தலைவர்கள் தேவை” -  த.வெ.க., தலைவர் விஜய் பேச்சு!
“படித்தவர்கள் அரசியலுக்கு வரணும்.. நல்ல தலைவர்கள் தேவை” - த.வெ.க., தலைவர் விஜய் பேச்சு!
Delhi Airport Roof Collapse: பிரதமர் மோடி திறந்து வைத்த டெல்லி விமான நிலைய முனையம் - மூன்றே மாதங்களில் சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு
Delhi Airport Roof Collapse: பிரதமர் மோடி திறந்து வைத்த டெல்லி விமான நிலைய முனையம் - மூன்றே மாதங்களில் சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு
Embed widget