ஜஸ்ட்டு மிஸ்... நெற்றிப்பொட்டில் சுடப்பட்டு உயிர் பிழைத்த அதிசய நாய்!
நாயின் முகத்தில் வித்தியாசமான கோணத்தில் சுடப்பட்டுள்ள நிலையில், அதிசயமாக குண்டு மூளையை துளைக்காமல் விட்டுள்ளது.

இரு கண்களுக்கு நடுவே கிட்டத்தட்ட நெற்றிபொட்டில் சுடப்பட்ட நாய் ஒன்று அதிசயமாக உயிர் தப்பிய சம்பவம் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது.
ஆர்த்தர் எனப்படும் இந்த நாய் முன்னதாக தான் வளர்க்கப்பட்டு வந்த பண்ணையில் இருந்து காணாமல் போயுள்ளது. தொடர்ந்து அதன் உரிமையாளர் நாயைத் தேடி வந்த நிலையில், இரு கண்களுக்கு இடையே குண்டடியுடன் கண்டுபிடிக்கப்பட்ட இந்த நாயைக் கண்டு உரிமையாளர் அதிர்ச்சியடைந்துள்ளார்.
இந்நிலையில் முன்னதாக முகத்திலும் தலையிலும் கடும் வலியோடு இருந்து வந்த நாய் ஆர்த்தருக்கு பென்சில்வேனியா சொசைட்டி ஃபார் த ப்ரவென்ஷன் ஆஃப் க்ரூயல்டி டு அனிமல்ஸ் (பிஎஸ்பிசிஏ) குழுமம் சிகிச்சை அளிக்கத் தொடங்கியுள்ளது.
இந்த நாயின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள இக்குழுமம், ”ஆர்தரின் முகத்தில் வித்தியாசமான கோணத்தில் சுடப்பட்டுள்ள நிலையில், அதிசயமாக குண்டு மூளையை துளைக்காமல் விட்டுள்ளது.
நாயின் சுவாசப்பாதை, வாய்ப் பகுதிகளிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
View this post on Instagram
ரத்த சோகையும், காது தொற்றும் ஏற்பட்டுள்ளது. எனினும் ஆர்த்தர் சிறப்பாக தேறி வருகிறது. மருத்துவமனையில் தனது நாள்களை செலவழித்து வரும் ஆர்த்தர், இப்போது நன்றாக மூச்சு விடுகிறது. ” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்த்தரை துப்பாக்கியால் சுட்டவர்கள் யார் என இதுவரை கண்டறியப்படாதது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: உலகை மிரள வைத்த இலங்கை போராட்டம்...முடிவுக்கு கொண்டு வர துடிக்கும் ஆளும் வர்க்கம்...பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

