China lockdown: மறுபடியுமா? மீண்டும் லாக்டவுன்..! ஷாக் கொடுக்கும் சீனா.! ஒமிக்ரானால் மூடப்பட்ட தொழில்நகரம்!
சீனாவில் ஒமிக்ரான் பாதிப்பு அதிகரித்துள்ளது. இதனால், அந்நாட்டின் தொழில் நகரமான குவாங்ஷூ மூடப்பட்டுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் முதன் முதலில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அதன் பிறகு உலக நாடுகள் முழுவதும் பரவியது. இதுவரை மூன்று மற்றும் நான்காம் அலை பரவலை நாடுகள் சமாளித்து வருகின்றன. இந்நிலையில், சீனாவில் ஒமிக்ரான் பாதிப்பு அதிகரித்துள்ளது. இதனால், அந்நாட்டின் தொழில் நகரமான குவாங்ஷூ மூடப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் முதல் அலையின் போதே சீனா போக்குவரத்து தட, ஊரடங்கு உள்ளிட்டவைகள் மூலம் நோய் தொற்று பரவைக் கட்டுக்குள் கொண்டுவந்தது. இப்போது சீனாவில் ஒமிக்ரான் தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ளதால் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மூடப்பட்ட குவாங்ஷூ நகரம்:
குவாங்டாங்கின் தலைநகரான குவாங்ஷூவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் 27 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டது. இதில் 9 பேருக்கு அறிகுறிகள் இல்லை. இதனால், இந்நகரில் ஒட்டு மொத்த ஒமிக்ரான் பாதிப்பு 26,000-ஆக அதிகரித்துள்ளது. நாளுக்கு நாள் இந்த நகரில் ஒமிக்ரான் பாதிப்பு அதிகரித்து வருவதாக சீன சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
The manufacturing hub of Guangzhou closed itself to most arrivals as China battles a major COVID-19 surge in its big eastern cities. https://t.co/TexcAsTidQ
— ABC News (@ABC) April 11, 2022
இதனால், குவாங்ஷூ நகரில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. மாணவ மாணவிகள் பள்ளிகளுக்கு வராமல் ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்ளுமாறு அறிவுருத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு விதிமுறைகளில் தளர்வுகள் அறிவிப்பது குறித்து அரசு எதுவும் தெரிவிக்கவில்லை. எனினும், இதே நிலை தொடர்ந்தால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மேலும் தீவிரமாக்கப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. தொழில் நகரமான குவாங்ஷூ ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ளதால், வேலைகள் முடங்கி இருப்பதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
புதிய வகை ஒமிக்ரான்?
கடந்த ஏப்ரல் 6-ம் தேதி மும்பையில் ஒமிக்ரான் XE என்ற புதிய வகை வைரஸ் கண்டறியப்பட்டது என மும்பை மாநகராட்சி தெரிவித்தது. இங்கிலாந்து நாட்டில் முதன்முறையாக ஒமிக்ரான் XE என்ற வகை வைரஸ் கண்டறியப்பட்டநிலையில் தற்போது மும்பையில் இந்த வகை வைரஸ் கண்டறியப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் XE மாறுபாட்டை உறுதிப்படுத்தவில்லை என்று சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்