Watch Video: கார் ஃபேன்ஸி நம்பர் பிளேட்கள் ஏலம்: பட்டினியால் தவிக்கும் நாடுகளுக்கு சேவை செய்யும் ’ஒன் பில்லியன் மீல்ஸ்’
உலகில் பட்டினியால் தவிக்கும் நாடுகளுக்கு, கார்களின் ஃபேன்சி நம்பர் பிளேட்களை ஏலம்விட்டு அதில் கிடைக்கும் தொகையில் உணவளிக்கும்; ஒன் பில்லியன் மீல்ஸ்’ என்ற இயக்கம் துபாயில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
துபாய் நகரில் பசி இல்லாத உலகை உருவாக்கிடுவோம் என்ற நோக்கில் கார்களின் நம்பர் பிளேட்களை ஏலம்விட்டு, அதன் மூலம் கிடைக்கும் தொகையை பட்டினியால் வாடுபவர்களுக்கு உணவு வழங்க செலவழித்திருக்கிறது.
துபாயில் ஒன் பில்லியன் மீல்ஸ் (‘1 Billion Meals’) என்ற முன்னெடுப்பின் மூலம், பசியால் தவிப்பப்ர்களுக்கு உணவு வழங்கவும், உலகில் பசி, பட்டினி போன்ற பிரச்சனைகளுக்கான காரணம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஃபேன்சி கார் நம்பர் பிளேட்களை ஏலத்தில் விடப்பட்டது.
பிரபல செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில், துபாய் நகர சாலைகளில் நம்பர் பிளேட்கள் இல்லாமல் கார்கள் செல்கின்றன. ஃபேசியான இருக்கும் கார் நம்பர்கள் ஏலத்தில் பெரும் தொகை கொடுத்து வாங்கப்பட்டது.
ICYMI: The ‘1 Billion Meals’ initiative launched a campaign where vehicles with empty number plates were spotted across Dubai, to highlight the 800 million people suffering daily from hunger around the world pic.twitter.com/VlTqY50IAd
— Reuters (@Reuters) April 30, 2022
துபாயின் ஆட்சியாளரும், துணை அதிபருமான முகம்மது பின் ரஷீத் அல்-மாக்டோம் (Mohammed bin Rashid Al Maktoum) ’ஒன் பில்லியன் மீல்ஸ்’ (1 billion meals)என்ற இயக்கத்தைத் தொடங்கினார். 100 கோடி பேருக்கு உணவு அளிக்கும் இலக்குடன் கடந்த ஏப்ரல் 2 அன்று, ரமலான் மாதத்தில் இந்த இயக்கம் தொடங்கப்பட்டது. மத்திய கிழக்கு நாடுகள், தென் ஆப்பிரிக்கா, ஆசியா உள்ளிட்ட நாடுகளில் உள்ள உணவின்றி தவிக்கும் மக்களுக்கு உணவளிக்க இன்றுவரை தொடர்ந்து வருகிறது. ஒரு பில்லியன் மீல்ஸ் என்ற இலக்கை அடையும் வரை இந்த முன்னெடுப்பு தொடரும் என துணை அதிபர் முகம்மது பின் ரஷீத் அல்-மாக்டோம் கூறியுள்ளார்.
Today, we announce the One Billion Meals campaign.. It starts at the beginning of the holy month of Ramadan and will continue until the goal is achieved.. 800 million people suffer from hunger around the world..Our humanity and religion encourage us to help others
— HH Sheikh Mohammed (@HHShkMohd) March 10, 2022
ஒன் பில்லியன் மீல்ஸ் என்ற இயக்கம் தொடங்கப்பட்டதிலிருந்து, இதுவரை 560 கார் நம்பர் பிளேட்கள் இதுவரை ஏலத்தில் விடப்பட்டுள்ளன. இந்த ஏலத்தில், AA 8 Dubai என்ற ஒரு காரின் நம்பர் பிளேட் 9.5 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புக்கு ஏலத்தில் விற்பனையாகியுள்ளது. இது ஐக்கிய அரேபு நாட்டு பண மதிப்பில் 35 மில்லியன் டிரிஹாம் (Dirham) ஆகும்.
AA 8 என்ற நம்பர் பிளேட் உலக அளவில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்ட லைசன்ஸ் பிளேட்டிகளில் 6-வது இடத்தில் இருக்கிறது. அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்ட நம்பர் பிளேட்களில் ஐந்தாவது இடம், AA9. இது 10.3 மில்லியன் அமெரிக்க டாலருக்கு ஏலத்தில் விற்கப்பட்டது.
இந்த லைசன்ஸ் பிளேட் ஏலத்தில் கிடைத்த தொகையின் மூலம் கடந்த ஏப்ரல் 21 ஆம் தேதில் முதல் நைஜீரியா, இந்தியா,சூடான், ஜோர்டான், லெபனான், கிரிஸ்கிஸ்தான், எகிப்து,தஜிகிஸ்தான், உகாண்டா, ஐக்கிய அரேபிய நாடுகள்,கோஸ்வா, அமெரிக்கா மற்றும் அல்பானியா ஆகிய 13 நாடுகளில் உணவு தேவைப்படுவோருக்கு சாப்பாடு வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், க்ளோபல் பேமண்ட்ஸ் டெக்னாலஜி நிறுவனம் (global payments technology company Visa Inc.) கடந்த வெள்ளிக்கிழமை, ஒன் பில்லியன் மீல்ஸ் ஒரு மில்லியன் டிரிஹாம் (Dirham) தொகையை நன்கொடையாக வழங்கியுள்ளது. இந்த ‘ஒன் மில்லியன் மீல்ஸ்’ இயக்கத்தின் மூலம் உலக அளவில் 50க்கும் மேற்பட்ட நாடுகளில் உணவின்றி தவிப்போருக்கு உணவு அளிக்கப்பட இருக்கிறது.
இதேபோன்று கடந்த 2021 ஆம் ஆண்டு ரமலான் மாதத்தில் ஐக்கிய அரேபு நாடுகளில் 100 மில்லியன்ஸ் மீல்ஸ் என்ற நோக்கத்திற்காக நிதி திரட்டப்பட்டது. நிதி திரட்ட தொடங்கிய 10 நாட்களில், 100 மில்லியன் மீல்ஸ் என்ற இலக்கை அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.