Canada : 30,000 ஆண்டுகள் பழமை.. தங்கச் சுரங்கத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மம்மூத் மம்மி!
கனடாவின் க்ளோண்டிக் தங்க வயல்களில் பணிபுரியும் ஒரு சுரங்கத் தொழிலாளி ஒருவர், அரிய மற்றும் அழிந்த மம்மூத் உயிரினத்தின் மம்மிகளை கண்டு பிடித்துள்ளனர்.
கனடாவின் க்ளோண்டிக் தங்க வயல்களில் பணிபுரியும் ஒரு சுரங்கத் தொழிலாளி ஒருவர், அரிய மற்றும் அழிந்த மம்மூத் உயிரினத்தின் மம்மிகளை கண்டு பிடித்துள்ளனர்.
பனிக்காலத்தை சேர்ந்த இந்த மம்மூத் 30,000 ஆண்டுகள் முன் வாழ்ந்ததாக இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, உள்ளூரில் வசிக்கும் பழங்குடியின மக்கள் இந்த மம்மூத் கன்றுக்கு 'நன் சோ கா’ என்று பெயரிட்டுள்ளனர், அதாவது ஹான் மொழியில் "பெரிய குழந்தை விலங்கு" என்பது பொருள்.
இதுதொடர்பாக பழங்காலவியல் நிபுணர் கிராண்ட் ஜாசுலா, மம்மூத் தோலையும் முடியையும் சேகரித்து கொண்டு, " இந்த மம்மூத் அழகானது மற்றும் உலகில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட நம்பமுடியாத மம்மியாகும். மேலும் பனியுக விலங்குகளில் இது ஒருவகை விலங்கு" என்றார். தொடர்ந்து இந்த மம்மூத் பற்றி அறிந்து கொள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்," என்று தெரிவித்துள்ளார்.
Being part of the recovery of Nun cho ga, the baby woolly mammoth found in the permafrost in the Klondike this week (on Solstice and Indigenous Peoples’ Day!), was the most exciting scientific thing I have ever been part of, bar none. https://t.co/WnGoSo8hPk pic.twitter.com/JLD0isNk8Y
— Prof Dan Shugar (@WaterSHEDLab) June 24, 2022
The most incredible thing about Nun cho ga is the preservation…toe nails, hide intact, hair, trunk, intestines… pic.twitter.com/A8sY0ztsNF
— Prof Dan Shugar (@WaterSHEDLab) June 24, 2022
30,000 ஆண்டுகளுக்கு முன்பு கம்பளி மம்மூத் இந்த பகுதியில் காட்டு குதிரைகள், குகை சிங்கங்கள் மற்றும் ராட்சத புல்வெளி காட்டெருமைகளுடன் சுற்றித் திரிந்துள்ளது. தற்போது கண்டறியப்பட்ட இந்த குட்டி மம்மூத் பெண் என்று ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.
1948 ஆம் ஆண்டு அலாஸ்காவின் உட்புறத்தில் உள்ள ஒரு தங்கச் சுரங்கத்தில் எஃபி என்ற பெயருடைய ஒரு பகுதி மம்மூத் கன்று கண்டுபிடிக்கப்பட்டது.
லியூபா எனப்படும் 42,000 ஆண்டுகள் பழமையான மம்மி செய்யப்பட்ட குழந்தை கம்பளி மம்மூத், 2007 இல் சைபீரியாவில் கண்டுபிடிக்கப்பட்டது. யூகோன் அரசாங்கத்தின் படி, லியூபா மற்றும் நன் சோ கா ஆகியவை தோராயமாக ஒரே அளவில் உள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்