7 கிலோ உணவை ஒரு மணிநேரத்தில் சாப்பிட முடியுமா? இதோ ஒரு ரெஸ்டாரன்ட் கொடுக்கும் சவால்..!
சாப்பாட்டுக்குப் போட்டி என்றாலே சமகாலத்தில் பரோட்டோ சூரிதான் நினைவுக்கு வருவார். 50 பரோட்டாவுக்கு 100 ரூபாய் பெட் காமெடி தமிழ்த் திரைப்படத்தில் மிகவும் பிரபலம்.
சாப்பாட்டுக்குப் போட்டி என்றாலே சமகாலத்தில் பரோட்டோ சூரி தான் நினைவுக்கு வருவார். 50 பரோட்டாவுக்கு 100 ரூபாய் பெட் காமெடி தமிழ்த் திரைப்படத்தில் மிகவும் பிரபலம்.
அப்படி ஒரு போட்டியைத் தான் அறிவித்துள்ளது லண்டனில் உள்ள இந்திய உணவகம் ஒன்று. லண்டன் நகரின் கிரேட்டர் மேன்சஸ்டர் பகுதியில் அமைந்துள்ள அந்த உணவகத்தின் பெயர் லில்லிஸ் வெஜிடேரியன் இந்தியன் க்யூசைன். அங்கே போட்டியாளர்களாக வருபவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள டாஸ்க் இதுதான்.
கிராண்ட் தாலியை "Grand Thali" ஒரு மணிநேரத்தில் முடிக்கவேண்டும். தாலி என்றால் இந்தியில் தட்டு என்று பொருள். இந்தத் தாலியில் 50 வகையான சைவ உணவுகள் இருக்கும். உணவின் மொத்த எடை 7 கிலோ. 24 இன்ச் அளவு தாலியில் 50 வகையிலான உணவை வைத்திருப்பர். அந்த தாலியில் உள்ள உணவை சரியாக ஒரு மணி நேரத்தில் முடித்துவிட வேண்டும். அப்படி முடித்தால் உணவுக்கான பணத்தைத் தர வேண்டாம். இல்லாவிட்டால் பணத்தைக் கொடுத்துவிட்டு, மீதியுள்ள உணவை வீட்டுக்கு எடுத்துச் சென்றுவிடலாம். இல்லை அங்கேயே நண்பர்களோடோ குடும்பத்தினரடோ பகிர்ந்து உண்ணலாம்.
தாலியின் விலை இந்திய மதிப்பில் ரூ.3611. பிரிட்டன் யூரோவில் 35 யூரோக்கள்.
போட்டிக்கான அந்தத் தாலியில் ரோட்டி எனப்படும் சப்பாத்தி போன்ற உணவு மட்டுமே 8 வகைகளில் உள்ளது. மூன்று வகை அரிசி உணவுகள், 16 வகை கிரேவி வகைகள், சப்ஜி, மூன்று தொட்டுக்கொள்ளும் சாஸ் வகையிலான் டிப்கள், 6 வகையான உணவுக்குப் பிந்தைய டெஸர்ட்கள், 2 வகையிலான லஸ்ஸி மற்றும் சேவரி ஐட்டம் எனப்படும் நொறுக்குத் தீனி வகைகள் இடம் பெற்றிருந்தன.
யார் ஜெயித்தது?!
இந்தப் போட்டியில் பங்கேற்க கடந்த 4 ஆம் தேதி மூன்று பேர் உணவகத்துக்குச் சென்றுள்ளனர். ஜோஷ் சாண்டர்ஸ். வயது 39. இவர் லில்லிஸ் உணவகத்தின் வாடிக்கையாளர். இவர் விரும்பி உவந்து இந்தப் போட்டியில் பங்கேற்றார். ஆனால், 3 கிலோ உணவை மட்டுமே முடித்த நிலையில் தனது தோல்வியை ஒப்புக் கொண்டார். அடுத்ததாக களமிறங்கிய டாம் ஈஸ்தாமும் மூன்றாவது போட்டியில் பங்கேற்ற லேக் ட்ரெனனும் கூட தோல்வியை ஒப்புக் கொண்டனர்.
அந்தப் போட்டிக்குப் பின்னர் ட்ரெனன் தனது முகநூலில், நான் இன்று ல்லிலிஸ் உணவகம் அறிவித்த போட்டியில் ஜெயிக்கவில்லை. இருப்பினும் எனக்கு ஆதரவு அளித்து ஊக்கப்படுத்திய அனைவருக்குமே நன்றி. போட்டியில் வெற்றி பெறாவிட்டாலும் கூட இதற்கு முந்தைய விளையாட்டுப் போட்டிகளுடன் ஒப்பிடுகையில் நான் நல்ல முறையில் பங்களிப்பு செய்துள்ளேன். அந்தத் தாலியில் இருந்த உணவு மிகவும் ருசியாக இருந்தது. நானும் நண்பர் ஆண்டி வெஸ்டர்னும் உணவை திருப்திகரமாக முடித்தோம். எந்த ஒரு உணவு வகையும் வீணடிக்கப்படவில்லை என்று பதிவிட்டுள்ளார்.
போட்டியை அறிவித்த கடையின் உரிமையாளர் ப்ரீத்தி சச்தேவ் கூறுகையில், ஒரு நாள் கடையில் சும்மா உட்கார்ந்திருக்கும்போது இந்தப் போட்டி யோசனை வந்தது. இதுதான் எங்கள் உணவகம் அறிவித்துள்ள முதல் போட்டி. ஆனால், நாங்கள் எதிர்பார்த்ததைவிட மிகவும் மகிழ்ச்சியானதாக இந்தப் போட்டி இருந்தது. போட்டியில் பங்கேற்ற போட்டியாளர்கள் அனைவருமே குறிப்பிட்ட ஒரு மணி நேரத்தில் எவ்வளவு முடியுமோ அதை உண்கின்றனர். மீதமுள்ள உணவை வீட்டுக்கு எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.