விமான நிலையத்தில் அறிவிப்பு வெளியிடும் திரையில் ஆபாசப் படம்.... விறுவிறுவென நடையை கட்டிய பயணிகள்!
விமான நிலையத்தில் விமான அறிவிப்புகள் மற்றும் விளம்பரங்கள் திரையிடப்படும் ஸ்க்ரீனில் திடீரென ஆபாசப் படம் திரையிடப்பட்டுள்ளது.
பிரேசில் விமான நிலையத்தில் விமான அறிவிப்புகள் வெளியிடப்படும் திரையில் ஆபாசப் படம் திரையிடப்பட்ட நிகழ்வு பயணிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
பிரேசிலின் முக்கிய விமான நிலையம்
வெளிநாட்டு பயணிகள் அதிகம் வந்து செல்லும் பிரேசிலின் மிக முக்கிய நகரம் ரியோ டி ஜெனிரோ. இங்குள்ள சர்வதேச விமா சேண்டோஸ் டூமோண்ட் விமான நிலையம்.
நேற்று (மே.28) இந்த விமான நிலையத்தில் திடீரென விமான அறிவிப்புகள் மற்றும் விளம்பரங்கள் திரையிடப்படும் ஸ்க்ரீனில் ஆபாசப் படம் திரையிடப்பட்டுள்ளது.
பயணிகளை நெளிய வைத்த வீடியோ
இதனால் பயணிகள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளான நிலையில், தங்கள் குழந்தைகளின் முகங்களை மறைத்தும், சிரித்தவாறும் சுதாரித்து அந்த இடத்தைவிட்டு விறுவிறுவென நகர்ந்தனர்.
Brazil's airport operator has switched off advertisement screens at Rio de Janeiro's busiest terminal Santos Dumont airport after all billboards suddenly began showing porn videos.The private company that manages the billboards says their computers had been hacked.
— Paul Bakibinga (@PabloBach) May 27, 2022
விமான நிலைய நிர்வாகம் விளக்கம்
இந்நிலையில் இச்சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்துள்ள விமான நிலைய நிர்வாகம், ”விளம்பர உரிமை கொண்டுள்ள நிறுவனமே இதற்கு பொறுப்பு என்றும், திரையில் தோன்றும் செய்திகள், காட்சிகளுக்கு அவர்களே பொறுப்பு என்றும் விளக்கம் அளித்துள்ளது.
மேலும் விளம்பரத் திரை ஹேக் செய்யப்பட்டுவிட்டது என்றும், அதனைத் தொடர்ந்து தாங்கள் உடனே திரையிடுவதை நிறுத்தி விட்டதாகவும் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: Vladimir Putin: “5 முறை கொலை முயற்சி; ரஷ்ய பிரதமர் புதினின் வாழ்நாள் இன்னும் சில காலம்தான்” - உக்ரைன் உளவுத் துறை அதிகாரி
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்