Radha Iyengar: அமெரிக்க உயர் பதவியில் இந்திய வம்சாவளி பெண்.. ஜோ பைடன் கொடுத்த க்ரீன் சிக்னல்..!
அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனில் உள்ள சார்பு செயலர் பதவிக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவரை அந்த நாட்டின் அதிபர் ஜோ பைடன் பரிந்துரைத்துள்ளார். யார் அவர் பார்க்கலாம்..?
அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனில் உள்ள சார்பு செயலர் பதவிக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவரை அந்த நாட்டின் அதிபர் ஜோ பைடன் பரிந்துரைத்துள்ளார். யார் அவர் பார்க்கலாம்..?
US President #JoeBiden nominates #indianamerican Radha Iyengar Plumb for the post of Dy Under Secretary of Defense for Acquisition & Sustainment. She is currently serving as the Chief of Staff to the Deputy Secretary of #defense #IndiansinUS #Diaspora #Indian pic.twitter.com/Ltpu8JvoJq
— TheSouthAsianTimes (@TheSATimes) June 16, 2022
இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ராதா அய்யங்கார் பிளம்ப். இவர் அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் பல்கலைகழகத்தில் பொருளாதாரத்தில் இளங்கலை பட்டமும், அதனைத்தொடர்ந்து பிரின்ஸ்டன் பல்கலைகழகத்தில் பொருளாதாரத்தில் முதுகலை மற்றும் முனைவர் பட்டமும் பெற்றார்.
அதன் பின்னர் லண்ட பொருளாதார பள்ளியில் பேராசிரியராக பணியாற்றிய அவர் கூகுள், பேஸ்புக் போன்ற பெரிய நிறுவனங்களின் கொள்கைப் பிரிவு இயக்குநராக பணியாற்றியுள்ளார். அதன் பின்னர் அவருக்கு அமெரிக்க அரசில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. அரசுப்பணியில் ராணுவம், எரிசக்திதுறை மட்டுமல்லாமல் வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் பல உயர்பதவிகளையும் வகித்துள்ளார்.
தற்போது அமெரிக்க ராணுவ துணை அமைச்சரின் அலுவலக பணியாளர்கள் பிரிவுத்தலைவராக பணியாற்றி வரும் இவரைத்தான் தற்போது ராணுவ தலைமையகமான பென்டகனில் சார்பு செயலர் என்ற உயர் பதவியில் நியமிக்க அதிபர் ஜோ பைடன் பரிந்துரைத்துள்ளார்.