மேலும் அறிய

‛வட சென்னை’ ஆண்ட்ரியா பாதி... புலிகுத்தி பாண்டி லட்சுமி மேனன் மீதி... 3 ஆண்டு காத்திருந்து பழிதீர்த்த பெண்!

தனது கணவரின் மரணத்திற்கு பழிதீர்ப்பதற்காக மூன்று ஆண்டுகள் காத்திருந்து, பெண் ஒருவர் தன் கணவரை கொன்றவனை திருமணம் செய்து துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் நாட்டில் பாஜோர் மாவட்டத்தில் அமைந்துள்ள இனாயத்கலி. இந்த பகுதியில் வசித்து வருபர் தனது மனைவியுடன் வசித்து வந்தார் குலிஸ்தான். இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென அலறல் சத்தத்துடன் குலிஸ்தான் மனைவி தனது கணவரை யாரோ சுட்டுக்கொன்று விட்டார்கள் என்று கதறிக்கொண்டே வெளியே வந்துள்ளார். இதையடுத்து, அக்கம் பக்த்தினர் குலிஸ்தான் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும், இதுதொடர்பாக உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

குலிஸ்தான் உடலை பிரதே பரிசோதனைக்கு அனுப்பிய லூசிம் காவல் நிலையத்தினர் சம்பவ இடத்தில் விசாரணையை மேற்கொண்டனர். கணவரை இழந்த குலிஸ்தான் மனைவிக்கு ஆறுதல் கூறிய போலீசார் அவரிடமும் விசாரணை நடத்தினர். குலிஸ்தான் மனைவியின் பதில்கள் சற்று முன்னுக்கு பின் முரணாக இருந்துள்ளது. இதனால், சந்தேகம் அடைந்த போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினார். இதையடுத்து, குலிஸ்தானை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றதை அவரது மனைவி ஒப்புக்கொண்டார்.

குலிஸ்தானை கொலை செய்ததற்காக அவரது மனைவி கூறிய காரணம் போலீசார் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அவர் அளித்த வாக்குமூலத்தில், “ ஆப்கானிஸ்தானில் இருந்து அகதியாக வந்தவர் ஷா ஷமீத். ஆப்கானிஸ்தானின் குனார் மாகாணத்தைச் சேர்ந்தவர் அவர்தான் எனது முதல் கணவர். பெஷாவர் நகரத்தில் பணிபுரிந்து வந்த அவருடன் நான் மிகுந்த மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருந்தேன். எங்களுக்கு ஒரு மகள் உள்ளது.

‛வட சென்னை’ ஆண்ட்ரியா பாதி... புலிகுத்தி பாண்டி லட்சுமி மேனன் மீதி... 3 ஆண்டு காத்திருந்து பழிதீர்த்த பெண்!

உயிரிழந்த குலிஸ்தான் எனது கணவர் ஷாஷமீத்தின் நெருங்கிய நண்பர். அவர் மீது எனது கணவர் ஷா ஷமீத் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார். என் கணவர் அவர் உழைத்த பணம் அனைத்தையும் குலிஸ்தானிடம் கொடுத்து வைத்திருந்தார். தேவைப்படும்போது அவரிடம் இருந்து பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என்பார்.   

மூன்று வருடங்களுக்கு முன்பு எனது கணவர் ஷா ஷமீத்திற்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால், தனது சிகிச்சைக்காக பணம் தேவைப்படுகிறது. பணத்தை திருப்பித் தருமாறு குலிஸ்தானிடம் கேட்டுள்ளார். ஆனால், குலிஸ்தான் தன்னிடம் பணம் இப்போது இல்லை என்று கூறியதுடன், தானே மருந்து வாங்கித் தருவதாகவும் கூறினார்.

மருந்துகளும், ஊசிகளும் வாங்கி வந்த குலிஸ்தான் எனது கணவருக்கு நதிக்கரை ஓரத்தில் ஊசியை செலுத்தியுள்ளார். இந்த ஊசியை செலுத்திக்கொண்டால் உடல்நிலை சரியாகிவிடும் என்ற குலிஸ்தான் பேச்சை ஷா ஷமீத்தும் நம்பி ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், மற்றொரு ஊசியை கொடுத்து வீட்டுக்கு சென்று இந்த ஊசியை செலுத்திக் கொள் என்றும் கூறியுள்ளார்.

ஆனால், குலிஸ்தான் செலுத்திய ஊசியால் எனது கணவர் ஷா ஷமீத்தின் உடல்நிலை மிகவும் மோசம் அடைந்தது. உடல்நலக்குறைவால் தரையில் விழுந்து கிடந்த எனது கணவரை அருகில் இருந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், எனது கணவரை சடலமாகதான் வீட்டிற்கு கொண்டு வந்தனர். குலிஸ்தான்தான் எனது கணவருக்கு ஊசி செலுத்தியதாக நதிக்கரையில் பார்த்த சிலர் என்னிடம் கூறினர்.

‛வட சென்னை’ ஆண்ட்ரியா பாதி... புலிகுத்தி பாண்டி லட்சுமி மேனன் மீதி... 3 ஆண்டு காத்திருந்து பழிதீர்த்த பெண்!

இதனால், எனது கணவரை கொன்ற குலிஸ்தானை கொலை செய்யத் திட்டமிட்டேன்.  அவரை பழிவாங்க வேண்டும் என்று சுமார் 6 மாதங்கள் முயற்சி செய்தேன். ஆனால், முடியவில்லை. ஏற்கனவே திருமணமாகி ஒரு மகன் இருந்த குலிஸ்தானை, என்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தினேன். என்னிடம் பணம் இருக்கிறது. நீங்கள் ஒரு காரை வாங்கி அதில் ஊர் சுற்றலாம். நீங்கள் தொழில் செய்யலாம். நாம் சுகமாக வாழலாம் என்று ஆசையை தூண்டினேன்.

கடந்தாண்டு ஈத் பண்டிகைக்கு முன்பு, குலித்கானை திருமணம் செய்து கொண்டேன்.  ஆறு மாதங்கள் ஒரு வீட்டிலும், சில சமயங்கள் அவரது சகோதரி வீட்டிலும் வசித்து வந்தோம். பின்னர், வாடகைக்கு ஒரு வீடு எடுத்து வசிக்கலாம் என்று கூறி, இனாயத் கலி பகுதியில் வாடகைக்கு ஒரு வீடு எடுத்தோம். அந்த வீட்டில் நாங்கள் தனியாக வசதிப்பதால் பாதுகாப்பிற்காக ஒரு துப்பாக்கி வேண்டும் என்று குலிஸ்தானிடம் கூறினேன். குலிஸ்தானும் ரூபாய் 13 ஆயிரத்து 500ல் ஒரு துப்பாக்கி வாங்கினார். எனது கணவரின் மரணத்திற்கு பழிவாங்க அந்த கைத்துப்பாக்கியை பயன்படுத்துவது என்று முடிவு செய்தேன்.

‛வட சென்னை’ ஆண்ட்ரியா பாதி... புலிகுத்தி பாண்டி லட்சுமி மேனன் மீதி... 3 ஆண்டு காத்திருந்து பழிதீர்த்த பெண்!

சம்பவம் நடைபெற்ற அன்றிரவு, நள்ளிரவு ஒரு மணியளவில் மற்றொரு அறையில் இருந்த துப்பாக்கியில் தோட்டாக்களை நிரப்பிக்கொண்டு தூங்கிக்கொண்டிருந்த குலிஸ்தானிடம் சென்றேன். கணவரின் மரணத்திற்கு பழிதீர்க்க துப்பாக்கியால் சுட்டேன். ஆனால், துப்பாக்கி வேலை செய்யவில்லை. உடனடியாக, வேறு அறைக்கு சென்று துப்பாக்கியை சரிபார்த்தேன்.

மீண்டும் தூங்கிக்கொண்டிருந்த குலிஸ்தானின் தலையில் துப்பாக்கியால் சுட்டேன். பின்னர், குலிஸ்தானின் உடலில் வலது பக்கத்திலும் சுட்டேன். விடியும் வரை குலிஸ்தான் சடலத்தின் அருகிலே அமர்ந்திருந்தேன். பின்னர், நானே வெளியே வந்து தன் கணவரை யாரோ சுட்டுவிட்டதாக கூறினேன்.”

இவ்வாறு அவர் கூறினார். பின்னர் அந்த பெண்ணை சிறையில் அடைத்தனர். தன் கணவரை கொன்றவனை கொல்வதற்காக, அவனையே திருமணம் செய்து மூன்று ஆண்டுகள் காத்திருந்து பழங்குடியின பெண் கொலை செய்த சம்பவம் அந்த நாட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.   

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஃபெங்கல் புயலால் சேதமடைந்த புத்தம் புது பாலம்; ஏன்? - காரணத்தை கூறும் தமிழக அரசு 
ஃபெங்கல் புயலால் சேதமடைந்த புத்தம் புது பாலம்; ஏன்? - காரணத்தை கூறும் தமிழக அரசு 
TN Rain: 12 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு - வானிலை மையம் அறிவிப்பு.!
TN Rain: 12 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு - வானிலை மையம் அறிவிப்பு.!
இதுதான் தீர்வா? - திமுகவை சரமாரியாக சாடி தோழர்களுக்கு வேண்டுகோள் வைத்த விஜய் 
இதுதான் தீர்வா? - திமுகவை சரமாரியாக சாடி தோழர்களுக்கு வேண்டுகோள் வைத்த விஜய் 
தமிழகத்துக்கு ஒரு ரூபாய் கூட நிதி வழங்காத மத்திய அரசு! - பாஜக மாநிலங்களுக்கு எவ்வளவு? வெளியான பரபரப்பு தகவல்!
தமிழகத்துக்கு ஒரு ரூபாய் கூட நிதி வழங்காத மத்திய அரசு! - பாஜக மாநிலங்களுக்கு எவ்வளவு? வெளியான பரபரப்பு தகவல்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay  : ”நேர்ல வர முடியாதா விஜய்? CM சீட் மட்டும் வேணுமா!” திட்டித் தீர்க்கும் மக்கள்DMK Cadre vs Women : நிவாரணம் வழங்கிய உதயநிதி! முண்டியடித்து வந்த பெண்கள்..அத்துமீறிய திமுக நிர்வாகிAnnamalai vs ADMK: இரண்டாக உடையும் அதிமுக?அண்ணாமலையின் புது ரூட்! கலக்கத்தில் EPSTiruvannamalai Landslide : ”ஒரு SECOND தான் மொத்தமா புதைஞ்சிருப்போம்” மண்சரிவில் தப்பிய பெண் திக்திக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஃபெங்கல் புயலால் சேதமடைந்த புத்தம் புது பாலம்; ஏன்? - காரணத்தை கூறும் தமிழக அரசு 
ஃபெங்கல் புயலால் சேதமடைந்த புத்தம் புது பாலம்; ஏன்? - காரணத்தை கூறும் தமிழக அரசு 
TN Rain: 12 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு - வானிலை மையம் அறிவிப்பு.!
TN Rain: 12 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு - வானிலை மையம் அறிவிப்பு.!
இதுதான் தீர்வா? - திமுகவை சரமாரியாக சாடி தோழர்களுக்கு வேண்டுகோள் வைத்த விஜய் 
இதுதான் தீர்வா? - திமுகவை சரமாரியாக சாடி தோழர்களுக்கு வேண்டுகோள் வைத்த விஜய் 
தமிழகத்துக்கு ஒரு ரூபாய் கூட நிதி வழங்காத மத்திய அரசு! - பாஜக மாநிலங்களுக்கு எவ்வளவு? வெளியான பரபரப்பு தகவல்!
தமிழகத்துக்கு ஒரு ரூபாய் கூட நிதி வழங்காத மத்திய அரசு! - பாஜக மாநிலங்களுக்கு எவ்வளவு? வெளியான பரபரப்பு தகவல்!
Shalini Ajith: ரேஸ் கார் ஓட்டிய ஷாலினி! தல-யை பார்த்து என்ன சொன்னாங்க தெரியுமா? அஜித்தின் தோழி பகிர்ந்த தகவல்!
Shalini Ajith: ரேஸ் கார் ஓட்டிய ஷாலினி! தல-யை பார்த்து என்ன சொன்னாங்க தெரியுமா? அஜித்தின் தோழி பகிர்ந்த தகவல்!
பேரிடர்களுக்கு இனி இயற்கையை குறை சொல்ல முடியாது; நாமே காரணம் - சென்னை உயர்நீதிமன்றம் சொன்னது என்ன? 
பேரிடர்களுக்கு இனி இயற்கையை குறை சொல்ல முடியாது; நாமே காரணம் - சென்னை உயர்நீதிமன்றம் சொன்னது என்ன? 
School Colleges Leave: நாளை 2 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.!
School Colleges Leave: நாளை 2 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.!
''இது நியாயமா? புயல் பாதிப்புக்கு மத்தியில் தேர்வா?'' அரசிடம் கல்வியாளர்கள் கேள்வி
''இது நியாயமா? புயல் பாதிப்புக்கு மத்தியில் தேர்வா?'' அரசிடம் கல்வியாளர்கள் கேள்வி
Embed widget