Afghanistan Flood: தத்தளிக்கும் ஆப்கான்..! கட்டுக்குள் வராத காட்டாற்று வெள்ளம்..! 31 பேர் உயிரிழப்பு..!
ஆப்கானிஸ்தான் நாட்டில் கரைபுரண்டு ஓடும் காட்டாற்று வெள்ளத்தில் குழந்தைகள், பெண்கள் உள்பட 31 பேர் பரிதாபமாக உயிரிழந்த சோகம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டில் அமைந்துள்ளது பர்வான். இந்த பகுதியில் தற்போது கடந்த ஓரிரு தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, வடக்கு பர்வானில் நேற்று முதல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கனமழையால் ஏற்பட்டுள்ள இந்த வெள்ளத்தால் குழந்தைகள், பெண்கள் உள்பட சுமார் 31 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இவர்கள் தவிர 100க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர். இதுதவிர 17 பேர் காயமடைந்துள்ளனர். பர்வான் பகுதியில் உள்ள மூன்று மாவட்டங்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் வானிலை ஆய்வு மையம் அந்த நாட்டில் கனமழை தொடர்ந்து சில நாட்களுக்கு பெய்யும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த 19 மாதங்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தானில் 40 பேர் கனமழையால் பரிதாபமாக உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
فوری
— Bashir Ahmad Qasani (@AhmadQasani) August 14, 2022
سیلاب های ویرانگر چندین روستا را در دره غوربند پروان نابود کرده است.
باشندهای محل می گویند که دریای غوربند از اثر سیلاب ها بسته شد و در صورتی که آب این دریا مسیر داده نشود، چندین روستا در آب غرق خواهد شد.
بسیاری از مردم به کوه ها پناه برده اند. pic.twitter.com/qi1K3kKCha
#Floods continue in #Afghanistan.
— Osama Bin Javaid (@osamabinjavaid) August 13, 2022
Getting reports of at least 15 people killed due to flooding in Pul Alam, Charkh, Baraki Barak & Mohammad Agha districts of #Logar province.
We tried to enter but roads have been swept away and large parts are flooded.
Latest on @AJEnglish https://t.co/CfVdY18Zu8 pic.twitter.com/wIScq8TZO7
ஆப்கானிஸ்தானில் தற்போது தலிபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளும், மீட்பு பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
19 people killed, nearly 100 injured in flash floods in Parwan and Nangarhar provinces.@AfghanistanNDMA says #floods destroyed around 10,000 acer of agricultural land and blocked/damaged more that 100 Kilometer of paved roads in #Afghanistan pic.twitter.com/9gvqqfR9Sy
— Osama Bin Javaid (@osamabinjavaid) August 15, 2022
மேலும். மாயமானவர்களை மீட்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்