இது ரத்த பூமி தம்பி.! வீட்டுக்குள் பாய்ந்த ஏவுகணை! ஹாயாக ஷேவ் செய்த இளைஞர்!
பலரும் அந்த நபர் போர் பற்றி எல்லாம் கவலைப்படாமல் இயல்பான நாளை கொண்டாடிக் கொண்டிருப்பதாக கருத்து தெரிவித்துள்ளனர்.
உக்ரைனில் வீட்டில் ஏவுகணை ராக்கெட் பாய்ந்த நிலையில் இளைஞர் ஒருவர் ஷேவ் செய்துக் கொண்டிருந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா அந்நாட்டின் மீது கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி முதல் போர் தொடுத்து வருகிறது. இதில் இருநாட்டு தரப்பிலும் ஏராளமான உயிரிழப்புகள் நிகழ்ந்த நிலையில் போரை நிறுத்த சொல்லி உலக நாடுகள் கோரிக்கை விடுத்தும் ரஷ்யா அதனை ஏற்க மறுத்து விட்டது. ஆனால் உக்ரைன் போரின் நினைவுகள் உலக மக்களின் மனதை உலுக்கி எடுத்து விட்டது.
Ось такі «воєні об’єкти» високочастотними ракетами! #UkraineRussiaWar pic.twitter.com/OOy2Ko2mqk
— Вика Панькив (@Vikolda_anakond) June 26, 2022
இதனிடையே இன்றைய தினம் கிய்வின் மத்திய பகுதியில் நடந்த தாக்குதலில் அங்குள்ள குடியிருப்பு கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. ரஷ்ய ஏவுகணைத் தாக்குதலின் விளைவாக அந்த ஒன்பது மாடி குடியிருப்பு கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், இதில் கட்டிடத்தின் பாதியளவு சேதமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேசமயம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ரஷ்யாவிடம் இழந்த நகரங்களை மீண்டும் உக்ரைன் வெல்லும் என தெரிவித்துள்ளார்.
இந்த கலவரங்களுக்கு மத்தியில் உக்ரைனில் இருந்து வெளியான புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. அதில் ஒரு வீட்டின் சமையலறையில் நுழைந்த ராக்கெட் ஒன்று வெடிக்காமல் ஒரு மூலையில் மோதி நின்றது. ஆனால் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் அந்த வீட்டில் உள்ள இளைஞர் ஷேவ் செய்துக் கொண்டிருக்கிறார். இதனைப் பார்த்த பலரும் அந்த நபர் போர் பற்றி எல்லாம் கவலைப்படாமல் இயல்பான நாளை கொண்டாடிக் கொண்டிருப்பதாக கருத்து தெரிவித்துள்ளனர்.
❗Cherkasy, Ukraine. A Russian missile hits a dam across the Dnieper River. #Cherkasy #Ukraine #UkraineRussiaWar #Russia #russiaisaterrorisstate #EU #USA #StandWithUkraine #StopRussia pic.twitter.com/WUk7inTgxz
— We stand for Truth, Freedom, and Fairness🇺🇦 (@ActForUA) June 26, 2022
அதில் ஒருவர், என் வீட்டின் அறையில் சிலந்தி இருந்தாலே நான் உள்ளே செல்ல மாட்டேன் . இவர் என்னாடா என்றால் ராக்கெட் துண்டுகளுக்கு நடுவே தைரியமாக நிற்கிறார் என கிண்டல் செய்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்