Texas US Mall : அமெரிக்காவின் டெக்சாஸில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இந்தியப் பெண்.. சோகத்தில் தெலுங்கானா
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் பிரபல வணிக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இந்தியாவைச் சேர்ந்த 27 வயது இளம் பெண் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் பிரபல வணிக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இந்தியாவைச் சேர்ந்த 27 வயது இளம் பெண் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸில் பிரபல வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது. மிகவும் பரபரப்பாக இருக்கும் இந்த இடத்தில் மக்கள் கூட்டம் எப்போது அதிகமாக இருக்கும். இந்நிலையில் சம்பவத்தன்று, வழக்கமாக வணிக வளாகத்தில் மக்கள் பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தனர். அப்போது வணிக வளாகத்திற்குள் மர்ம நபர் ஒருவர் முகமூடி அணிந்து உள்ளே நுழைந்துள்ளார்.
இதனையடுத்து, அமெரிக்காவின் உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை மாலை 3.30 மணிக்கு அந்த மர்ம நபர் தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அங்கிருந்து பொதுமக்களை மிரட்டியுள்ளார். பின்னர், அந்த மர்ம நபர் பொதுமக்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதனால் பலர் அங்கிருந்து அலறியடித்து ஓடியதோடு, பலர் அங்கிருந்த இடங்களில் பதுங்கி இருந்தனர். இதனை பொருட்படுத்தாமல் அந்த நபர் தொடர்ந்து பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார். இந்த துப்பாக்கிச் சூட்டில் அப்பாவி மக்கள் 9 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சிலர் படுகாயமடைந்துள்ளார்.
உடனே இதனை அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அப்போது துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை பிடிக்க முயன்றனர். அவர் தப்பியோட முயன்றபோது போலீசார் அந்த மர்ம நபரை துப்பாக்கியால் சூட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
அமெரிக்காவில் தொடரும் சோகம்:
இதுபற்றி டெக்சாஸ் ஆளுநர் கிரெக் அபோட் கூறுகையில், "இது மிகவும் கொடூரனமான சம்பவம். வெளியில் சொல்ல முடியாத சோகம் என வருத்தம் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து, இந்த சம்பவம் பற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபர் யார்? என்ன காரணம் என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதன்படி, கடந்த 2021ஆம் ஆண்டு 49 ஆயிரம் பேரும், 2020ஆம் ஆண்டு 45 ஆயிரம் பேரும் துப்பாக்கிச்சூ சம்பவத்தில் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இந்த ஆண்டு இதுவரை 195க்கும் மேற்பட்டவர்கள் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தெலுங்கானா பெண்:
இந்நிலையில் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் அமெரிக்காவில் பணியாற்றி வந்த தெலுங்கானாவைச் சேர்ந்த ஐஸ்வர்யா தட்டிக்கோண்டா பலியானார். இவர் மெக்கின்னி பகுதியில் வசித்துவந்தார். தனது நண்பருடன் ஷாப்பிங் வந்த அவர் உயிரிழந்த சோகம் அவர் சொந்த மாநிலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
டெக்சாஸ் துப்பாக்கிச் சூட்டில் அவர் உயிரிழந்ததை இந்திய தூதரகமும் உறுதி செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவரது உடலை இந்தியாவுக்கு கொண்டுவர குடும்பத்தினர் முயற்சி செய்து வருகின்றனர்.