Villupuram: திருமாவளவன் குறித்து அவதூறு கருத்து; விக்கிரவாண்டியில் விசிகவினர் சாலை மறியல்
திருமாவளவன் குறித்து சமூக வளைதளங்களில் அவதூறு கருத்து பதிவிட்ட நபரை கைது செய்யக்கோரி விசிகவினர் சாலை மறியல்
![Villupuram: திருமாவளவன் குறித்து அவதூறு கருத்து; விக்கிரவாண்டியில் விசிகவினர் சாலை மறியல் Villupuram vck people blocked the road to arrest the person who posted defamatory comments about Thirumavalavan on social media TNN Villupuram: திருமாவளவன் குறித்து அவதூறு கருத்து; விக்கிரவாண்டியில் விசிகவினர் சாலை மறியல்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/19/018dc3104e811c597e4cfef10e0d71261689743452174113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே திருமாவளவன் குறித்து சமூக வளைதளங்களில் அவதூறு கருத்து பதிவிட்ட நபரை கைது செய்யக்கோரி விசிகவினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் அடுத்த பகண்டை கிராமத்தைச் சேர்ந்த முருகவேல் என்பவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் குறித்து தரக்குறைவாக பேசி சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது இருப்பினும் காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காததை தொடர்ந்து விழுப்புரத்திலிருந்து திருக்கனூர் செல்லும் சாலையில் தொரவி கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மறியல் காரணமாக விக்கிரவாண்டி திருக்கனூர் சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)