கழுவெளி மற்றும் ஊசுடு ஏரி பறவைகள் சரணாலயத்தில் மாதிரி கணக்கெடுப்புபணி தொடங்கியது
கழுவெளி மற்றும் ஊசுடு ஏரி பறவைகள் சரணாலயத்தில், நீர்ப் பறவைகள் மாதிரி கணக்கெடுப்புபணியினை மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி துவக்கி வைத்தார்.
விழுப்புரம் மாவட்டம், வானூர் ஊராட்சி ஒன்றியம், ஊசுடு ஏரியில், திண்டிவனம் வனச்சரகத்திற்குட்பட்ட கழுவெளி மற்றும் ஊசுடு ஏரி பறவைகள் சரணாலயத்தில், நீர்ப் பறவைகள் மாதிரி கணக்கெடுப்பு - 2024 பணியினை மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி இன்று (27.01.2024) துவக்கி வைத்தார். மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வனச்சரகத்திற்குட்பட்ட கழுவெளி மற்றும் ஊசுடு ஏரி பறவைகள் சரணாலயப் பகுதிகளில், நீர்ப் பறவைகள் மாதிரி கணக்கெடுப்பு துவக்க விழா இன்றைய தினம் துவக்கி வைக்கப்பட்டது. தமிழ்நாடு வனத்துறையின் மூலம் நீர்ப்பறவைகள் கணக்கெடுப்பானது, தமிழ்நாடு முழுவதும் ஒரே நேரத்தில் பறவை ஆர்வலர்கள், தன்னார்வலர்கள் மற்றும் மாணவர்களைக் கொண்டு பறவைகள் கணக்கெடுப்பு நடைபெறவுள்ளது.
கடந்த வருடம் விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் 20 இடங்களில் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. கழுவெளி மற்றும் ஊசுடு ஏரி பறவைகள் சரணாலயப்பகுதிகளில் சுமார் 27,000-த்திற்கும் மேற்பட்ட பறவைகள். 120-க்கும் அதிகமான பறவை இனங்கள் கண்டறியப்பட்டன. இந்நிலையில் இந்த வருடம் கழுவெளி மற்றும் ஊசுடு பறவைகள் சரணாலயப்பகுதிகளில் 12 இடங்களில் பறவைகள் கணக்கெடுப்பு 27.01.2024 -ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது.
கழுவெளி மற்றும் ஊசுடு பறவைகள் சரணாலயத்தில் காணப்படும் பறவைகள், ஸ்பாட் பில்ட் பெலிகன், டார்டர், கார்மோரண்ட்ஸ், ஹெரான்ஸ், ஈக்ரெட்ஸ், ஸ்டோர்க்ஸ், பிளாக் ஐபிஸ், ஸ்பூன்பில், பிளமிங்கோ, ஸ்பாட் பில்ட் வாத்து, கர்கனி, காமன் போச்சார்ட், சாண்ட்பைப்பர்ஸ், ஷங்க்ஸ், கூட்ஸ், கிரீப்ஸ் மற்றும் டெர்ன்ஸ் ஆகியவை அடங்கும். இது பல ஊர்வன இனங்களின் தாயகமாகும். இந்திய கருப்பு ஆமை, டெர்மைட் ஹில் கெக்கோ, ரெட் சாண்ட் போவா, இந்திய டிரிங்கெட் பாம்பு, பொதுவான வெண்கல முதுகு மர பாம்பு, காமன் க்ரெய்ட், கண்ணாடி நாகம், ரசல்ஸ் விப்பர் போன்றவை உட்பட 14 க்கும் மேற்பட்ட ஊர்வன இனங்கள் பதிவாகியுள்ளன, ஈரநிலத்தின் முக்கியமான பாலூட்டிகள் சிறியவை. இந்திய சிவெட், காமன் பனை சிவெட், ரட்டி முங்கூஸ், குள்ளநரி, குட்டை மூக்கு பழ வெளவால், கருப்பு முயல், பாம்புதாரை போன்ற பறவைகளை இங்கு அதிகம் பார்க்க முடியும்.
இப்பகுதிகளானது பறவைகளுக்கு ஒரு நல்ல இடமாக இருக்கிறது. காரணம் என்னவென்றால், அப்பறவைகளுக்கு ஏற்றதான காலநிலை, உணவு ஆகிய இந்த இடத்தில் சரியாக அமைந்துவிடுகின்றன. இங்கு வரும் பறவைகள், விவசாய நிலங்களில் காணப்படும் தீமை தரக்கூடிய பூச்சி மற்றும் புழுக்களை சாப்பிட்டு விடும். அந்த பறவைகளின் எச்சம் மிகப்பெரிய உரமாக தாவரங்களுக்கு அமைகிறது. இப்படியாக பல தகவல்களை சொல்லிக்கொண்டே போகலாம்.
இப்பகுதியினை சரணாலயமாக அறிவித்ததன் மூலம் அந்த ஏரி பாதுகாக்கப்படும். யாராலும் எளிதில் ஆக்கிரமிப்பு செய்ய முடியாது. அங்கு வரும் பறவைகளுக்கு பாதுகாப்பு என்பது அதிகமாக இருக்கும். சுற்றுலாத் தலமாக மாறும் வாய்ப்பு இருக்கிறது. அதன் மூலம் இப்பகுதி மக்களுக்கு வேலை வாய்ப்பும் அதிகமாக கிடைத்திட வாய்ப்புள்ளது. மேலும், இன்றைய நாளின் சிறப்பம்சமாக ‘birds of eye” என்ற பறவைகளின் கண்களை உள்ளடக்கிய போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி.பழனி,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.