விழுப்புரம் மாவட்டம் தொழில் முன்னேற்றத்தில் மிகவும் பின் தங்கியுள்ளது - ஆட்சியர் பழனி
தொழில் முனைவோர்கள் தொழில் தொடங்க வங்கிகளும் அவர்களுக்கு கடன் வழங்குவதில் உறுதுணையாக இருக்க வேண்டும் - மாவட்ட ஆட்சியர் பழனி
![விழுப்புரம் மாவட்டம் தொழில் முன்னேற்றத்தில் மிகவும் பின் தங்கியுள்ளது - ஆட்சியர் பழனி Villupuram district lags far behind in industrial development Collector Palani TNN விழுப்புரம் மாவட்டம் தொழில் முன்னேற்றத்தில் மிகவும் பின் தங்கியுள்ளது - ஆட்சியர் பழனி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/29/64ea9a6a22e67d371070288cae7865a11693300088373113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் தொழில் முன்னேற்றத்தில் மிகவும் பின் தங்கி உள்ளதாக தொழில் முனைவோருக்கு கடன் வழங்கும் நிகழ்வில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி வேதனை தெரிவித்தார்.
விழுப்புரம் நான்கு முனைசந்திப்பில் உள்ள தனியார் விடுதியில் தொழில் முனைவோர்களுக்கு டிக் நிறுவனம் மூலம் வங்கி கடன் வழங்கும் நிகழ்வு ஆட்சியர் பழனி தலைமையில் நடைபெற்றது. கடன் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு மேடையில் பேசிய ஆட்சியர் பழனி, விழுப்புரத்தில் படித்த இளைஞர்கள் அதிகளவில் உள்ளதாகவும் அவர்கள் பணிக்காக சென்னை கோயம்புத்தூர் போன்ற பல்வேறு மாவட்டங்களுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளதால் தொழில் முனைவோர்கள் விழுப்புரம் மாவட்டத்தில் தொழில் தொடங்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
மேலும் தமிழகத்திலுள்ள மற்ற மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்து வசதிகளும் உள்ளதாகவும் குறைந்த விலையில் தொழில் தொடங்குவதற்கான இடங்கள் கிடைப்பதால் விழுப்புரம் மாவட்டத்தில் தொழில் முனைவோர்கள் தொழில் தொடங்க வங்கிகளும் அவர்களுக்கு கடன் வழங்குவதில் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் விழுப்புரம் மாவட்டம் தொழில் முன்னேற்றத்தில் மிகவும் பின் தங்கி உள்ளதாக வேதனை தெரிவித்தார்.
விழுப்புரம் மாவட்ட செய்திகள் :
துர்நாற்றத்தில் மூழ்கி இருக்கும் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம்; கண்டுகொள்ளாத அதிகாரிகள்
புதுச்சேரி, விழுப்புரம், கள்ளகுறிச்சி பகுதியில் உள்ள பொதுமக்களின் பிரச்சனைகளை தெரிவிக்க +918508008569 என்கின்ற எண்ணில் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)