கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மாமியார்; மருமகள் செய்த கொடூர செயலால் மக்கள் அதிர்ச்சி
சுவேதா தனது கள்ளக்காதலுடன் இணைந்து ரமணியை கொலை செய்ததும், கல்லூரி காலத்திலிருந்தே சுவேதா பலருடன் தொடர்பில் இருந்தது விசாரணையில் தெரியவந்தது.
விழுப்புரம்: கண்டமங்கலம் அருகேயுள்ள என்.ஆர் பளையத்தில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மாமியாரை கள்ளக்காதலனுடன் சேர்ந்து பெட்ரோல் ஊற்றி எரித்த மருமகள் மற்றும் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகேயுள்ள என்.ஆர் பாளையத்தை சார்ந்த கருணாமூர்த்தி மற்றும் பன்ருட்டி பாலூரை சார்ந்த சுவேதா என்ற இருவரும் காதலித்து கடந்த 2024 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு கணவர் கருணாகரன் பணி நிமித்தமாக சென்னைக்கு சென்று விடுமுறை தினங்களில் மட்டுமே வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். இந்நிலையில் சுவேதாவிற்கு அவர் வீட்டிற்கு எதிர் வீட்டில் வசிக்கும் சதீஷ் குமாருடன் கடந்த இரு மாதங்களுக்கு முன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. கள்ளகாதலில் சுவேதாவும், சதீஷ்குமாரும் அடிக்கடி திருமணத்தை மீறிய உறவில் இருந்துள்ளனர்.
சுவேதா கள்ளக்காதலில் இருந்ததை அறிந்த அவரது மாமியார் ரமணிக்கு தெரிந்து மருமகளை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுவேதா தனது கள்ளக்காதலுடன் இணைந்து கடந்த 30.10.2024 ஆம் தேதி மாமியார் ரமணி தூங்கி கொண்டிருந்தபோது வீட்டில் பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர். வீட்டில் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்க்கத்தினர் ரமணியை மீட்டு ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்தபோது 31 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி ரமணி உயிரிழந்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த ரமணியின் இரண்டாவது மகன் தட்சிணாமூர்த்தி கண்டமங்கலம் காவல் நிலையத்தில் தனது தாய் இறப்பில் சந்தேகம் இருப்பதாக புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ததில், சுவேதா தனது கள்ளக்காதலுடன் இணைந்து ரமணியை கொலை செய்ததும், கல்லூரி காலத்திலிருந்தே சுவேதா பலருடன் தொடர்பில் இருந்தது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து கண்டமங்கலம் போலீசார் சுவேதா மற்றும் சதீசை கைது செய்து சிறையிலடைத்தனர்.
முதல் தகவல் அறிக்கையின் சுருக்கம்
எனது அண்ணன் கருணாமூர்த்தி என்பவரும் அவரது சுவேந்த என்பவரும் எனது அம்மா ரமணியுடன் வாழ்ந்துவருகிறார்கள். நான் கொங்கரநாயனூரில் உள்ள எனது பெரியம்மா வீட்டில் இருந்து கொண்டு கல்லூரி படித்துக்கொண்டு வருகிறேன். எனது அண்ணன் கருணாமூர்த்தி மதுராந்தகத்தில் தங்கி தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வசூலிக்கும் வேலை செய்துக்கொண்டு வருகிறார். 30/10/2024 தேதி நாங்கள் இருவரும் வீட்டில் இல்லாததால் எனது அம்மா வீட்டில் நின்றுக்கொண்டிருந்த எனது அண்ணன் கருணாமூர்த்தியின் இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் போடுவதற்காக பிளாஸ்டிக் பாட்டிலில் 1 – லிட்டர் பெட்ரோல் வாங்கி வீட்டில் உள்ள பிரிட்ஜ் அருகில் வைத்துவிட்டு தூங்கி விட்டார். இரவு சுமார் 10 மணிக்கு திடீரென தீ பிடித்து எனது அம்மாவின் மேல் தீ பரவி தீக்காயம் ஏற்பட்டு அலறி சத்தம் போட்டுள்ளார். எனது பக்கத்து வீட்டில் இருந்த எனது சித்தப்பா குமரவேல் ஓடி வந்து பார்த்து தீயை அனைத்து 108 ஆம்பென்ஸ் மூலமாக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்து பின்பு மேல்சிகிச்சைகாக புதுச்சேரி ஜிக்மர் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சையில் இருப்பதாக எனது சித்தப்பா தகவல் தெரிவித்தார். பின்பு மருத்துவமனை சென்று அம்மாவுடன் சிகிச்சைக்காக உதவியாக இருந்தேன். சிகிச்சை பலனின்றி 31/10/2024 அன்று காலை சுமார் 8:25 மணிக்கு அம்மா இறந்து விட்டார் என்று மருத்துவர் கூறியதை அடுத்து நான் அம்மாவின் பிரேதத்தை நல்லடக்கம் செய்ய வேண்டி உள்ளதால் தங்களிடம் புகார் அளிக்கிறோன். நடவடிக்கை எடுத்து பிரேத பரிசோதனை செய்து கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மேற்கண்ட புகார் மனுவை பெற்று கண்டமங்கலம் காவல் நிலைய குற்ற எண். 455/2024 U/S 194 (1) BNSS ன் படி வழக்கு பதிவு செய்தும் இதன் அசலுடன் வாதியின் புகார் மனுவினையும் இணைத்தும் கனம் JM- II நீதிமன்றம் விழுப்புரம் அவர்களுக்கும் இரண்டாவது நகலை விசாரணைக்காக நிலைய காவல் ஆய்வாளரின் பார்வைக்கும் இதர நகல்களை சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்கும் முறையே பணிந்து சமர்பிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் குறிபிட்டுள்ளது.
போலீசார் விசாரனை
மேலும் போலீசார் விசாரனையில், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மாமியாரை கள்ளக்காதலனுடன் சேர்ந்து பெட்ரோல் ஊற்றி எரித்த மருமகள் மற்றும் கள்ளக்காதலனை கண்டமங்கலம் போலீசார் கைது செய்தனர்.