மேலும் அறிய

கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு: பெற்றோரிடம் ஜிப்மர் மருத்துவக்குழுவின் ஆய்வறிக்கையை வழங்க நீதிமன்றம் மறுப்பு

மாணவி ஸ்ரீமதியின் பெற்றோரிடம் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக்குழுவின் ஆய்வறிக்கையை வழங்க விழுப்புரம் நீதிமன்றம் மறுத்து அதிரடி உத்தரவு

சென்னை உயர்நீதிமன்றத்தில் கள்ளக்குறிச்சி மாணவியின் தந்தை ரிட் மனுதாக்கல் செய்துள்ள வழக்கு விசாரணை வரும் 29ஆம் தேதி விசாரனைக்கு வருவதால் மாணவியின் மர்ம மரணம் தொடர்பான ஜிப்மர் மருத்துவ குழுவின் ஆய்வறிக்கையை வழங்க மறுப்பு தெரிவித்து விழுப்புரம் நீதிமன்ற நீதிபதி புஷ்பரானி உத்தரவிட்டார். 

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி மர்ம மரணம் தொடர்பாக 2 பிரேத பரிசோதனை அறிக்கைகள் ஜிப்மர் மருத்துவமனை மருத்துவ குழுவினர் ஆய்வு  செய்து அந்த அறிக்கையை, ஜிப்மர் மருத்துவ குழு கடந்த 22ம் தேதி விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அவ்வாறு தாக்கல் செய்யப்பட்ட ஆய்வறிக்கையின் நகலினை தங்களுக்கு வழங்குமாறு மாணவியின் தாயார் செல்வி தரப்பில் வழக்கறிஞர் காசி விஸ்வநாதன் நேற்று முன்தினம் விழுப்புரம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு மீதான விசாரணை கடந்த திங்கட் கிழமை தொடங்கிய நிலையில்  ஆய்வறிக்கை நேற்று முன்தினம்  நீதிபதி வழங்குவதாக மாணவியின் தாயார் தரப்பு வழக்கறிஞர் காசி விஸ்வநாதன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் மாணவி மரணம் தொடர்பான ஆய்வறிக்கையை பெற்றுக்கொள்ள மாணவியின் வழக்கறிஞர்கள் காசி விஸ்வநாதன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தலைமையிலான வழக்கறிஞர்கள் குழு நேற்று விழுப்புரம் நீதிமன்றத்திற்கு வருகை தந்து முறையிட்டனர்.

மனுவின் மீது விசாரனை செய்த புஷ்பராணி வழக்கு  விசாரணை நிலுவையில் இருப்பதாலும், சி.பி.சி.ஐ.டி கிரைம் எண் மாற்றப்படாமல் உள்ளதாலும் 29ம் தேதி மாணவியின் தந்தை  ரிட் மனு தாக்கல் செய்தது சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருவதால் இரண்டு உடற்கூறு பரிசோதனை அறிக்கைகள் மட்டுமே தங்களிடம் வழங்குவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளதாகவும் இவ்வழக்கில் சி.பி.சி.ஐ.டி விசாரணை செல்வதாலும் ஜிப்மர் ஆய்வறிக்கையை பெற்றோர் தரப்பிற்கு வழங்க உத்தரவிடவில்லை என்றும் 29ம் தேதி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து ஜிப்மர் ஆய்வறிக்கையை பெற்றுக்கொள்ளுமாறு கூறியும் தற்போது ஆய்வறிக்கையை தங்களுக்கு வழங்க இயலாது என மறுப்பு தெரிவித்து தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி புஷ்பராணி உத்தரவிட்டார். மேலும் தொழில்துறை அமைச்சர் சிவி கணேசன் தமிழக முதல்வரை நேரில் சந்திக்க 27ம் தேதி அனுமதி பெற்று தருவதாக கூறியுள்ளதால் மாணவியின் தாயார்  மேற்கொள்ள இருந்த நடைபயணம் ரத்து செய்யப்படுவதாக வழக்கறிஞர் காசிவிஸ்வநாதன் கூறியுள்ளார். 

நேற்று முன்தினம் செய்தியாளர்களை சந்தித்த மாணவியின் தாயார் கூறியதாவது :-  விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் மகளின் தோழிகள் இருவர் ஆஜராகி ரகசிய வாக்கு மூலம் அளித்துள்ளதால் அவர்கள் உண்மையிலையே  தோழிகள் தான் தங்களுக்கு தெரியவேண்டும் என்பதால் அவர்களின் புகைப்படமோ பெயரையோ தெரிவிக்க வேண்டும் எனவும் அப்படி தெரிவிக்கும் மாணவிகளின் பெயர்கள் ரகசியம் காக்கப்படுமென தெரிவித்த அவர் ஜிப்மர் ஆய்வறிக்கை நகலை உடனடியாக தங்களுக்கு வழங்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். மேலும் தனது மகள் எழுதிய கடிதம் என பள்ளி நிர்வாகத்தினரால் வழங்கபட்டுள்ளதால் அது அவர் கையெழுத்தில்லை என்றும் தனது மகளின் மரணத்தில் நீதி வேண்டும் என்பதால் தமிழக முதலமைச்சரை நேரில் சந்திக்க வேண்டும் என்பதால் வருகின்ற 26 ஆம் தேதி நெசலூர் கிராமத்திலிருந்து நடைபயணமாக சென்று தமிழக முதலமைச்சரை சந்தித்து நீதி கேட்டு மனு அளிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.


 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்" பொங்கலை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் போட்ட பதிவு!
"ரூ 1,000 கோடி நிலுவைத்தொகையை விடுவிங்க" உரிமையுடன் கேட்ட முதல்வர்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
சுனாமி எச்சரிக்கை.. ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்.. வெளியான அலர்ட்!
சுனாமி எச்சரிக்கை.. ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்.. வெளியான அலர்ட்!
"அனைவரையும் சமமாக பாருங்க.. அதுதான் சமூக நீதி" திமுக அரசை மீண்டும் சீண்டும் ஆளுநர் ரவி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP state executive: மாணவிக்கு பாலியல் தொல்லை.. தலைமறைவான BJP  நிர்வாகி! தட்டித்தூக்கிய காவல் துறை!Velumani Vs Munusamy | கே.பி.முனுசாமி Vs எஸ்.பி.வேலுமணி.. பிரிந்து நிற்கும் MLA-க்கள்! தலைவலியில் EPSVijay Vs Ajith : அஜித்தை கண்டுக்காத விஜய் TN BJP New Leader : சென்னை வரும் கிஷன் ரெட்டி தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்? பரபரக்கும் சீனியர்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்" பொங்கலை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் போட்ட பதிவு!
"ரூ 1,000 கோடி நிலுவைத்தொகையை விடுவிங்க" உரிமையுடன் கேட்ட முதல்வர்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
சுனாமி எச்சரிக்கை.. ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்.. வெளியான அலர்ட்!
சுனாமி எச்சரிக்கை.. ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்.. வெளியான அலர்ட்!
"அனைவரையும் சமமாக பாருங்க.. அதுதான் சமூக நீதி" திமுக அரசை மீண்டும் சீண்டும் ஆளுநர் ரவி!
Metro Time Table for Pongal; பொங்கல் விடுமுறை நாட்களில் மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்... வெளியான முக்கிய அறிவிப்பு
பொங்கல் விடுமுறை நாட்களில் மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்... வெளியான முக்கிய அறிவிப்பு
பிராமண தம்பதிகள் 4 குழந்தைகள் பெற்றால்... - பம்பர் பரிசை அறிவித்த அமைச்சர்! ம.பியில் சலுகை!
பிராமண தம்பதிகள் 4 குழந்தைகள் பெற்றால்... - பம்பர் பரிசை அறிவித்த அமைச்சர்! ம.பியில் சலுகை!
TN Rain: மக்களே உசார்.! சென்னை முதல் குமரி வரை;  இன்று இரவு 27 மாவட்டங்களில் மழை இருக்கு
TN Rain: மக்களே உசார்.! சென்னை முதல் குமரி வரை; இன்று இரவு 27 மாவட்டங்களில் மழை இருக்கு
பெரியாருக்கு நன்றி செலுத்தும் பெருநாளாக கொண்டாடுவோம் - வாழ்த்து செய்தியிலும் சீமானுக்கு திருமா பதிலடி!
பெரியாருக்கு நன்றி செலுத்தும் பெருநாளாக கொண்டாடுவோம் - வாழ்த்து செய்தியிலும் சீமானுக்கு திருமா பதிலடி!
Embed widget