மேலும் அறிய

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: பாமக - திமுக மோதல்... உச்சகட்ட பரபரப்பில் விக்கிரவாண்டி

திமுகவினர் மக்களை பணம் கொடுத்து திமுக கட்சி அலுவலகத்தில் அடைத்து வைத்தாக கூறி பாமகவினரும் திமுகவினரும் வாக்குவாதம்.

விழுப்புரம்: விக்கிரவாண்டி தொகுதியில் சட்டவிரோதமாக பொதுமக்களை திமுக அடைத்து வைத்துள்ளதாக கூறி பாமக எம்எல்ஏ அருள் தலைமையிலான பாமகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதே போன்று சானிமேடு பகுதியில் திமுகவினருக்கு பாமகவினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காணை ஒன்றியத்திலுள்ள கடையம் கிராமத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும், ராஜ்யசபா எம்பியுமான அன்புமணி ராமதாஸ் தலைமையில், பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அன்புமணியை ஆதரித்து பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

இந்நிலையில், திமுகவை சேர்ந்தவர்கள் வேண்டுமென்றே பொதுக்கூட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்க கூடாது என்பதற்காக பொதுமக்கள் அனைவரையும் பணம் கொடுத்து வேறொரு பகுதிக்கு அழைத்துச் சென்று சட்ட விரோதமாக அடைத்து வைத்ததாக கூறியும், அவர்களை உடனடியாக கடையம் கிராமத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கூறியும் பாட்டாளி மக்கள் கட்சியின் சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதியின் உறுப்பினர் அருள் தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட தொண்டர்கள் 100க்கும் மேற்பட்டோர், திமுகவை கண்டித்து அரை மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதே போன்று கடையம் பகுதியில் பாமக அன்புமணி ராமதாஸ் வருகைக்கு முன் திமுகவினர் மக்களை பணம் கொடுத்து திமுக கட்சி அலுவலகத்தில் அடைத்து வைத்தாக கூறி பாமகவினரும் திமுகவினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது ஒருவரை ஒருவர் தாக்கி கொள்ள முயன்றதால் தள்ளு முள்ளு ஏற்பட்டதையடுத்து இரு தரப்பினரை கலைத்தனர். இதனால் சாணிமேடு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தலைப்பு செய்திகள்

மதுரையை மிஞ்சும் திண்டிவனம் மல்லி: சிப்காட்டில் உருவாகுமா வாசனை திரவிய சாம்ராஜ்யம்?
மதுரைக்கு செக் வைத்த திண்டிவனம்! மல்லிகை காட்டில் வாசனை புரட்சி வரப்போகுதா?
தொகுதி மறுவரையறை தென்னிந்தியாவிற்கே மிகப்பெரிய பேராபத்து: அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை!
தொகுதி மறுவரையறை தென்னிந்தியாவிற்கே மிகப்பெரிய பேராபத்து: அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை!
தோளில் மனைவி... மனதில் காதல்! புதுச்சேரி ஆடித் திருவிழாவில் வைரலாகும் விநோதப் போட்டி!
தோளில் மனைவி... மனதில் காதல்! புதுச்சேரி ஆடித் திருவிழாவில் வைரலாகும் விநோதப் போட்டி!
ஆளுநர்கள் மூலம் இரட்டை ஆட்சியா? ஒன்றிய அரசுக்கு எதிராக ஆகஸ்ட் 15 வரை சிபிஐ நடைபயணம்!
ஆளுநர்கள் மூலம் இரட்டை ஆட்சியா? ஒன்றிய அரசுக்கு எதிராக ஆகஸ்ட் 15 வரை சிபிஐ நடைபயணம்!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Zelensky Serbia Weapons: பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
Best Selling Midsize SUV: எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
Embed widget