காலி மது பாட்டில்களை வாங்க முடியாது; டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம் அறிவிப்பு
டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தி அக்டோபர் 9 ஆம் தேதி தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் அறிவிப்பு

விழுப்புரம்: டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தி அக்டோபர் 9 ஆம் தேதி தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும், காலி மதுபாட்டில்களை பெற தனிமுகமை ஏற்படுத்தி தரவேண்டுமென டாஸ்மாக் பணியாளர் சங்க தலைவர் பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
காலி மது பாட்டில்கள் திரும்பப்பெறும் திட்டம்
தமிழக அரசு, காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெறுவதற்கான திட்டத்தை டாஸ்மாக் (TASMAC) கடைகள் மூலம் செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டம், சுற்றுச்சூழல் பாதுகாப்பை நோக்கமாகக் கொண்டது. மது பாட்டில் வாங்கும்போது, அதன் அதிகபட்ச சில்லறை விலையுடன் (MRP) சேர்த்து ₹10 வசூலிக்கப்பட்டு, காலி பாட்டிலை கடையில் திரும்ப ஒப்படைக்கும்போது இந்த ₹10 திரும்ப வழங்கப்படும். செப்டம்பர் 1, 2025 முதல் இந்த திட்டம் தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது
தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம்
டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தி அக்டோபர் 9 ஆம் தேதி தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும், காலி மதுபாட்டில்களை பெற தனிமுகமை ஏற்படுத்தி தரவேண்டுமென டாஸ்மாக் பணியாளர் சங்க தலைவர் பால சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்தில் உள்ள தனியார் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்த அரசு டாஸ்மாக் பணியாளர் சங்க தலைவர் கு. பால சுப்பிரமணியம்.,
டாஸ்மாக் நிறுவனம் தமிழகத்தில் கடந்த 23 ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றது இதில் பணியாற்றுபவர்களுக்கு காலமுறை ஊதியம், பணிநிரந்தரம் வழங்கவில்லை என்றும் திமுக தேர்தல் அறிக்கையில் பத்தாண்டு காலம் அரசு அலுவலகங்களில் பணியாற்றினால் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என அறிவித்தனர் ஆனால் அதனை செய்யவில்லை என குற்றஞ்சாட்டினார். பணி நிரந்தர விவகாரத்தில் மத்திய அரசு மாநில அரசு என எடுத்து கொள்ள முடியாது தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற நான்க்கரை ஆண்டுகளில் பணிநிரந்தரம் செய்யவில்லை என தெரிவித்தார்.
காலி பாட்டில்களை வாங்க தனி ஆட்களை நியமிக்க வேண்டும்
காலி பாட்டில் வாங்கும் திட்டத்தினால் பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் காலி பாட்டில்கள் பெறுவதில் தனி முகமை ஏற்படுத்தி காலி பாடில்களை வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், டாஸ்மாக் பணியாளர்களின் கோரிக்கையை வலியுறுத்தி வரக்கூடிய 9.10.2025 ஆம் தேதி சென்னை கோட்டையை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
நீதிமன்றம் காலி பாட்டில்களை பெற நல்ல உத்தரவை பிறப்பித்துள்ளது. ஆனால் மாநில நிர்வாகம் அதற்கென தனியாக பணியாளர்களை நியமித்து செய்ய வேண்டும், டாஸ்மாக் பணியாளர்களுக்கு கால முறை ஊதியம் பணிநிரந்தரம் செய்ய வேண்டும் டாஸ்மாக் நிறுவனம் லாபத்தில் தான் செல்கிறது அதனால் ஊழியர்களுக்கு போனஸ் 30 சதவிகிதம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.






















