TN Rain: கடல் சீற்றத்தால் விழுப்புரம் மாவட்ட 19 மீனவ கிராம மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
விழுப்புரம் மாவட்டத்தில் அதிகப்படியாக மரக்காணத்தில் 8 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
விழுப்புரம்: விழுப்புரம், செஞ்சி, திண்டிவனம், வானூர், மரகாணம் என மாவட்டத்தில் முழுவதும் கனமழை பெய்து வருவதால், தொடர் மழை காரணமாக இன்று பள்ளி, கல்லூரிகளுகு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், விழுப்புரம் மாவட்டத்தில் தாழங்காடு குப்பம், அழகன்குப்பம், எக்கியர்குப்பம், அனுமந்தைகுப்பம், கூனிமேடுகுப்பம், நடுக்குப்பம் உள்பட 19 மீனவ கிராமங்களில் உள்ள மீனவர்கள் இன்று கடலுக்கு செல்ல வேண்டாம் என மாவட்டம் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இதனால் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. மேலும் மீனவர்கள் தங்கள் படகுகள், வலைகளை பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். தொடர் கனமழை காரணமாக அலுவலகம் செல்வோர், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆலாகியுள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் அதிகப்படியாக மரக்காணத்தில் 8 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
மழை நிலவரம்
விழுப்புரம்: 1 செ.மீ
வானூர்: 6 செ.மீ
திண்டிவனம்: 6 செ.மீ
மரக்காணம்: 8 செ.மீ
செஞ்சி: 2 செ.மீ
கோலியனூர்: 5 செ.மீ
வளவனூர்: 5 செ.மீ
முண்டியம்பாக்கம்: 6 செ.மீ
கஞ்சனுர்: 3 செ.மீ
சூரப்பட்டு: 4 செ.மீ
மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் சராசரியாக 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு:
இதுதொடர்பான அறிக்கையில்,
14.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், வேலூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகள்:
14.11.2023: தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் இலங்கை கடலோர பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வங்க கடல் பகுதிகள்:
14.11.2023: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
15.11.2023: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
16.11.2023: மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள் அதை ஒட்டிய மத்தியகிழக்கு-தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
17.11.2023: மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்” என மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.