மேலும் அறிய
Advertisement
செங்கல்பட்டு பாமக நகர செயலாளர் கொலை வழக்கின் முக்கிய நபர் விழுப்புரம் நீதிமன்றத்தில் சரண்
Chengalpattu Murder : செங்கல்பட்டு பாமக நகர செயலாளர் கொலை வழக்கில் முக்கிய நபர் அன்வர் உசேன் விழுப்புரம் நீதிமன்றத்தில் சரண்.
பாமக நகரச் செயலாளர் நாகராஜ் கொலை
செங்கல்பட்டு நகரில், மணிகூண்டு அருகே பூ வியாபாரம் செய்து வந்தவர், நாகராஜ். இவர் பாமக நகர செயலாளர் இருந்து வந்தார். இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணியளவில், மர்ம நபர்களால் கொடூரமாக வெட்டப்பட்டதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த படுகொலை சம்பவம் குறித்து தகவல் தெரிந்த, செங்கல்பட்டு நகர காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, சென்று உடலை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உறவினர்கள் மற்றும் பாமகவினர் படுகொலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து , நள்ளிரவில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ரகசிய தகவலின் அடிப்படையில்..
இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர், உடனடியாக இச்சம்பவம் குறித்து 8 தனிப்படைகள் அமைத்து தேடுதல் வேட்டையின்போது, கொலை குற்றவாளிகள் பரனூர் வழியாக சென்றதாக, வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது புலிபாக்கம் பகுதியில் ரயில்வே பாதை அருகே சந்தேகத்துக்கிடமான நபர் செல்வதாக, அறிந்து காவல்துறை அந்த நபரை கைது செய்ய முயன்ற போது, காவல்துறையை தாக்க முயற்சித்த செங்கல்பட்டு, சின்ன நத்தம் பகுதியை சேர்ந்த அஜய் என்கிற நபரை காவல்துறை துப்பாக்கியால் இடது கால் பகுதியில் சுட்டனர்.
கால்களில் மாவு கட்டு
இதனால் நிலை தடுமாறிய அஜயை காவல்துறையினர் கைது செய்து சிகிச்சைக்காக, காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் கார்த்திக் என்பவரை கைது செய்த போலீசார் நேற்று நீதிமன்றத்தில், ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்த நிலையில் சூர்யா மற்றும் விஜயகுமார் ஆகியோர், பாலூர் பகுதியில் மறைந்திருப்பதாக ரகசிய தகவலின் பெயரில் தனிப்படை போலீசார் சென்றுள்ளனர். போலீசார் வருவதைக் கண்டு சூர்யா மற்றும் விஜயகுமார ஆகியோர் இருசக்கர வாகனத்தில் தப்ப முயன்றுள்ளனர். அதிவேகமாக சென்றதால், நிலை தடுமாறி இருசக்கர வாகனம் கீழே விழுந்து உள்ளது. இதனால் சூர்யா மற்றும் விஜயகுமாருக்கு கால் முறிவு ஏற்பட்டு இருவரும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
மேலும் ஒருவரை தேடும் பணி
மேலும் தினேஷ் மற்றும் மாரியை கைது செய்து, இருவரை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதுவரை இந்த வழக்கு தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றொரு நபரான அன்வரை கைது செய்ய போலீசார் தீவிரமாக தேடி வந்தானர். முன்னதாக குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என செங்கல்பட்டு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் பாமகவினர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது .
முக்கிய குற்றவாளி விழுப்புரம் நீதிமன்றத்தில் சரண்
இக்கொலை வழக்கில் முக்கிய நபரான அன்வர் உசேன் என்பவர் விழுப்புரம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தார். இவ்வழக்கில் சரணடைந்த அவருக்கு நீதிபதி அகிலா 17 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையிலடைக்க உத்தரவிட்டார். அந்த உத்தரவின் பேரில் அன்வர் உசேன் வேடம்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion