(Source: ECI/ABP News/ABP Majha)
சுற்றுலாத் தொழில் முனைவோருக்கு தமிழ்நாடு விருது... விண்ணப்பிக்கும் வழிமுறை உள்ளே!
விருதுகள் சுற்றுலாத் தொழில் முனைவோரையும், சுற்றுலா தொடர்புடைய செயல்பாடுகளை செயல்படுத்தும் சுற்றுலாத் தொழில் புரிவோரையும் உக்குவிக்கும்.
தமிழ்நாடு சுற்றுலாத்துறை, உலக சுற்றுலா தினக்கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஆண்டுதோறும் பல்வேறு சுற்றுலாத் தொழில் முனைவோருக்கு, தமிழ்நாடு சுற்றுலா விருதுகளை வழங்கவுள்ளது. இந்த விருதுகள் சுற்றுலாத் தொழில் முனைவோரையும், சுற்றுலா தொடர்புடைய செயல்பாடுகளை செயல்படுத்தும் சுற்றுலாத் தொழில் புரிவோரையும் உக்குவிக்கும்.
இந்த விருதுகள் பல்வேறு சுற்றுலா ஆபரேட்டர்கள், விமான நிறுவனங்கள், ஓட்டல்கள், சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் மாநிலத்தின் சுற்றுலாவை மேம்படுத்துவதில் சாதகமாக பங்களிக்கும் பிற சுற்றுலா நிறுவனங்களுக்கு வழங்கப்படும். விருதுகள் வருகிற செப்டம்பர் 27ஆம் தேதி 17 வெவ்வேறு பிரிவுகளில் வழங்கப்படும்.
அதன்படி, வெளிநாட்டினருக்கான சுற்றுலா ஆப்ரேட்டர், உள்நாட்டு சுற்றுலா ஆப்ரேட்டர், சிறந்த பயண பங்குதாரர், சிறந்த விமான பங்குதாரர், சிறந்த தங்குமிடம், சிறந்த உணவகம், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழக விடுதி, சிறந்த முக்கிய சுற்றுலா ஆப்ரேட்டர். சிறந்த சாகச சுற்றுலா மற்றும் முகாம்தள ஆப்ரேட்டர், சிறந்த கூட்டங்கள், மாநாடு மற்றும் கண்காட்சி அமைப்பாளர், சிறந்த சமூக ஊடக செல்வாக்கு செலுத்துபவர், சிறந்த சுற்றுலா வழிகாட்டி, தமிழ்நாட்டின் சிறந்த விளம்பரம், சிறந்த சுற்றுலா கையேடு, சிறந்த சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் கல்வி நிறுவனம் என 17 வகை விருதுகள் வழங்கப்படுகிறது.
எனவே, விழுப்புரம் மாவட்டத்திலுள்ள அனைத்து சுற்றுலாத்தொழில் முனைவோரும். இந்த விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த விருதுகள் உலக சுற்றுலா தினமான வருகிற செப்டம்பர் 27ஆம் தேதி, சென்னையில் வழங்கப்படும். அதற்கான இடம் பின்னர் அறிவிக்கப்படும். விண்ணப்பங்களை www.tntourismawards.com இணையத்தில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து, வருகிற ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி தெரிவித்துள்ளார்.