மேலும் அறிய

விரைவில் திமுக அமைச்சர்கள் சிறை செல்வார்கள் - சி.வி.சண்முகம்

எத்தனை வழக்கு போட்டாலும் சந்திக்க அதிமுக தயாராக உள்ளது. சிறைக்கு செல்ல தயாராக உள்ளோம் - சி.வி. சண்முகம்

தமிழகத்தில் உயர்த்தப்பட்டுள்ள மின் கட்டண உயர்வை கண்டித்து விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம் தலைமையில் நடைபெற்றது. கண்டன ஆர்ப்பாட்டத்தில், மின் கட்டண உயர்வுக்கு எதிராக எதிராக கண்டன முழக்கம் எழுப்பப்பட்டது. 

ஆர்பாட்டத்தில் சிவி.சண்முகம் பேசியதாவது :-  

திமுக அரசுக்கு இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலம் மற்றொரு செய்தி சொல்கிறோம். இன்றைக்கு அதிமுகவில் மூன்று முறை முதல்வர் பதவியை அனுபவித்துவிட்டு, கட்சி அலுவலகத்தை எட்டி உதைத்து, அலுவலகத்தை சூறையாடி பத்திரம் உள்ளிட்ட அனைத்தையும் திருடி சென்றுவிட்டனர். அதிமுகவில் உள்ள எட்டப்பர்களை வைத்து அதிமுகவை முடக்கிவிடலாம் என நினைக்கும் ஸ்டாலினின் கனவு பலிக்காது. ஓ.பன்னீர்செல்வம் தொண்டர்களை நம்பியுள்ளேன் என கூறி வருகிறார். ஆனால் தொண்டர்கள் எங்கள் பக்கம் உள்ளனர். அவர் பக்கம் ரவுடிகளும், குண்டர்களுமே உள்ளனர். தொண்டர்கள் உள்ளவரை யார் வந்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது. நூறு பன்னீர்செல்வம் வந்தாலும் அதிமுகவை எதுவும் செய்ய முடியாது, நூறு துரோகிகளை அதிமுக பார்த்துள்ளது. பன்னீர்செல்வம் போன்று சின்னத்தையும், கட்சியையும் முடக்க நினைத்தவருக்கு மீண்டும் துணை முதல்வர் பதவி வழங்கியவர் எடப்பாடி பழனிசாமி.

இன்றைக்கு மின்சார கட்டணம் மட்டும் உயர்த்தப்படவில்லை, ஆண்டுக்கு 6 சதவீதம் கட்டணம் உயர்த்தப்படும். விவசாயிகள் பெறும் இலவச மின்சாரத்திற்கும் மீட்டர் பொருத்தப்படவுள்ளது. அதிமுக அமைச்சர்கள் மீது வழக்கு போட்டால் நாங்கள் பயந்துவிடுவோமா. திமுகவின் 13 அமைச்சர்கள் மீது வழக்கு உள்ளது. விரைவில் திமுக அமைச்சர்கள் சிறை செல்வார்கள். முதலில் மின்சாரத்துறை அமைச்சர் நிச்சயம் சிறை செல்வது உறுதி. அதனை தொடர்ந்து ம.சுப்ரமணியம் உட்பட அனைத்து அமைச்சர்களும் சிறைக்கு செல்வர்.

எத்தனை வழக்கு போட்டாலும் சந்திக்க அதிமுக தயாராக உள்ளது. சிறைக்கு செல்ல தயாராக உள்ளோம் என பேசினார். நாங்கள் சிறைக்கு செல்வது ஒன்னும் புதிதல்ல. ஏற்கனவே நங்கள் ஏழு, எட்டு முறை சிறைக்கு சென்றுள்ளோம். இனி ஆறு மாதம் சிறைக்கு சென்றாலும் அதை பற்றி எங்களுக்கு கவலை இல்லை என சிவி.சண்முகம் பேசினார்.

திண்டிவனத்தில் மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகம் ஆய்வு :

விழுப்புரம் : திண்டிவனம் பகுதியில் சாலையின் நடுவே இருக்கின்ற மரத்தை அகற்றாமல் சாலை போடும் பணி நடைபெற்றுகிறது, இதனை மாநிலங்களவை உறுப்பினர் சிவி.சண்முகம் இதுதான் திராவிட மாடலா என கேள்வி.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் இருந்து மரக்காணம் செல்லும் நெடுஞ்சாலை தற்போது  இருவழி சாலையாக உள்ளது. இதனை இருபுறமும் விரிவுபடுத்தி நான்கு வழி சாலையாக மாற்றுவதற்காக ரூபாய் 320 கோடி ரூபாயில் திட்டம் தீட்டப்பட்டு அடிக்கல் நாட்டுப்பட்டு தற்போது பணிகள் துவங்கி நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், திண்டிவனம்- மரக்காணம்  சாலையில் சாலையின் நடுவில் இருக்கின்ற மரங்களை அப்புறப்படுத்தாமலும், மின்கம்பங்களை அப்புறப்படுத்தாமலும், இதே போன்று தரமற்ற கட்டுமான பொருட்களைக் கொண்டு சாலை அமைக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து தகவல் அறிந்த மாநிலங்களவை உறுப்பினரும், முன்னாள் சட்டத்துறை அமைச்சருமான  சிவி சண்முகம் சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்தார்.

பின்பு செய்தியாளர் சந்திப்பில் எம்பி சிவி சண்முகம் கூறியதவது :-

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தற்பபோதைய  திமுக ஆட்சியில் சாலை அமைக்கும் பொழுது சாலையில் உள்ள ஜீப்பை  அகற்றாமலும், அடிப்பம்பை அகற்றாமலும், குடிநீர் அடி பம்பை அகற்றாமலும் சாலைகள் அமைக்கப்பட்டது செய்திகளிலும், சமூக வலைதளங்களிலும் பொதுமக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இவற்றிற்கெல்லாம் சிகரம் வைத்தார் போன்று   இந்த பகுதியில் சாலையின் நடுவில் இருக்கின்ற மரங்களை அகற்றாமல், அதே போன்று மின்கம்பங்களை அகற்றாமல், தரமற்ற சிமெண்ட்டுகளைக் கொண்டு சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றது.

தங்களுக்கு 18% கமிஷன் மட்டும் வந்தால் போதும் என்று தரமற்ற மற்றும் பொதுமக்கள் முகம் சுளிக்கும் வகையில் நடைபெறுகின்ற இத்தகைய பணிகளை தமிழக அரசும், நெடுஞ்சாலை துறையும் கண்டும் காணாமல் இருக்கின்றது. இதுதான் திராவிட மாடல் ஆட்சியா ? என்று மாநிலங்களை உறுப்பினர் சி.வி சண்முகம் கேள்வி எழுப்பினார். நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் அர்ஜுனன் மற்றும் சக்கரபாணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone LIVE: புதுச்சேரியில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் உத்தரவு
Fengal Cyclone LIVE: புதுச்சேரியில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் உத்தரவு
விமானப் பயணிகள் கவனத்திற்கு! விடாது பெய்யப்போகும் மழை! விமான நிலையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
விமானப் பயணிகள் கவனத்திற்கு! விடாது பெய்யப்போகும் மழை! விமான நிலையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
"அச்சத்தில் மக்கள்" புதிய பாம்பன் பாலத்தில் பாதுகாப்பு குறைபாடுகள்.. ரயில்வே அமைச்சருக்கு பறந்த கடிகம்!
கரூரில் விமான நிலையம் எப்போது வரும்?  -  அமைச்சர் செந்தில் பாலாஜி கொடுத்த சூப்பர் அப்டேட்
கரூரில் விமான நிலையம் எப்போது வரும்? - அமைச்சர் செந்தில் பாலாஜி கொடுத்த சூப்பர் அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Father Crying : ’’FOOTBOARD அடிக்காதீங்க பா'’காலில் விழுந்து கதறிய தந்தை தேம்பி அழுத மாணவர்கள்BJP Councillor : ’’உதயநிதி பிறந்தநாளுக்கா?’’ SWEET கொடுத்த பாஜக கவுன்சிலர்!திமுக கவுன்சிலர் THUGLIFEKarur Drunken Girl | ”மூடிட்டு போங்க டி...” போலீஸை மிரட்டிய பெண் மதுபோதையில் ATROCITY! | MK Stalinவிஜய்யை தாக்கிய வெற்றிமாறன்! பின்னணியில் திமுக? கொந்தளிக்கும் தவெகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone LIVE: புதுச்சேரியில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் உத்தரவு
Fengal Cyclone LIVE: புதுச்சேரியில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் உத்தரவு
விமானப் பயணிகள் கவனத்திற்கு! விடாது பெய்யப்போகும் மழை! விமான நிலையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
விமானப் பயணிகள் கவனத்திற்கு! விடாது பெய்யப்போகும் மழை! விமான நிலையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
"அச்சத்தில் மக்கள்" புதிய பாம்பன் பாலத்தில் பாதுகாப்பு குறைபாடுகள்.. ரயில்வே அமைச்சருக்கு பறந்த கடிகம்!
கரூரில் விமான நிலையம் எப்போது வரும்?  -  அமைச்சர் செந்தில் பாலாஜி கொடுத்த சூப்பர் அப்டேட்
கரூரில் விமான நிலையம் எப்போது வரும்? - அமைச்சர் செந்தில் பாலாஜி கொடுத்த சூப்பர் அப்டேட்
TNUHDB : “90% காலி, 100% காலி” தள்ளாடும் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்..!
TNUHDB : “90% காலி, 100% காலி” தள்ளாடும் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்..!
Dhanush Aishwarya : தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து வாங்கியாச்சு...குழந்தைகள் நிலைமை என்ன?
Dhanush Aishwarya : தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து வாங்கியாச்சு...குழந்தைகள் நிலைமை என்ன?
காதலர் கொடுத்த மன உளைச்சல்: அசைவ உணவுக்காக உயிரை விட்ட பெண் விமானி? என்ன நடந்தது?
காதலர் கொடுத்த மன உளைச்சல்: அசைவ உணவுக்காக உயிரை விட்ட பெண் விமானி? என்ன நடந்தது?
Fengal Cyclone Update: ’’வரும்.. ஆனா வராது..’’ ஃபெங்கல் புயலாக கரையை கடக்காது; என்ன காரணம் தெரியுமா?
Fengal Cyclone Update: ’’வரும்.. ஆனா வராது..’’ ஃபெங்கல் புயலாக கரையை கடக்காது; என்ன காரணம் தெரியுமா?
Embed widget