மேலும் அறிய

ராஜீவ் படுகொலை குறித்த சர்ச்சை பேச்சால் வழக்கில் சிக்கிய சீமான்... நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்... வழக்கை ஒத்திவைத்த நீதிபதி

இந்திய ராணுவத்தை அமைதி படை என்ற பெயரில் அனுப்பி தமிழின மக்களை அழித்தொழித்த, தமிழின துரோகி ராஜீவ் காந்தியைத் தமிழ் மண்ணிலேயே கொன்று புதைத்தோம் இவ்வாறு பேசியுள்ளார்.

விழுப்புரம்: ராஜீவ் காந்தி கொலை குறித்த அவதூறு வழக்கில் விக்கிராவண்டி உரிமையியல் நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (அக்.18) நேரில் ஆஜரானார் . இதனை தொடர்ந்து வழக்கு விசாரணை அடுத்த மாதம் 4-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

கடந்த 2019-ஆம் ஆண்டு விக்கிரவாண்டியில் இடைத்தேர்தல் நடைபெற்றது. அப்போது கஞ்சனூர் அருகேயுள்ள நேமூர் கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய சீமான், “ஆமாம்... நாங்கதான் ராஜீவ் காந்தியைக் கொன்றோம். ஒருநாள் வரலாறு திரும்ப எழுதப்படும். அப்போது, இந்திய ராணுவத்தை அமைதி படை என்ற பெயரில் அனுப்பி தமிழின மக்களை அழித்தொழித்த, தமிழின துரோகி ராஜீவ் காந்தியைத் தமிழ் மண்ணிலேயே கொன்று புதைத்தோம் என வரலாறு எழுதப்படும்” என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

சீமானின் இந்த பேச்சு கடும் கண்டனங்கள் எழுந்தது. குறிப்பாக அப்போதைய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ராஜீவ் காந்தி படுகொலையை நியாயப்படுத்தியும் அதைச் செய்தவர்களை வரலாறு நிச்சயம் போற்றி பாராட்டும் என்றும் பயங்கரவாத வன்முறை செயலை சீமான் பகிரங்கமாக ஆதரித்துப் பேசியிருக்கிறார். இந்தியாவில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான விடுதலை புலிகளின் சட்டவிரோத நடவடிக்கைகளை ஆதரித்ததன் மூலம் தேசத்துரோகக் குற்றத்தை சீமான் செய்திருக்கிறார்” என்று தெரிவித்திருந்தார்.

இதையடுத்து ராஜீவ்காந்தி படுகொலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக சீமான் மீது காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் ரமேஷ் கஞ்சனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் பேரில் இந்த வழக்கு விக்கிரவாண்டி மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆஜரானார். இதைத் தொடர்ந்து இவ்வழக்கை விசாரித்த நீதிபதி சத்யநாராயணன், வழக்கு விசாரனையை 4.11.2024 தேதிக்கு ஒத்திவைத்து அன்றைய தினம் சீமான் ஆஜராக உத்தரவிட்டார்.

விக்கிரவாண்டியில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம்

விழுப்புரம் மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் தொடர்ந்து கட்சியிலிருந்து விலகி வந்தனர். இதனால் நாம் தமிழர் கட்சியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும் 200 பேர் கட்சியில் இருந்து விலகப் போவதாக அறிவித்து வந்த நிலையில் அவசர அவசரமாக நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் இன்று நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடத்தினார்.

செய்தியாளர் சந்திப்பில் சீமான் கூறியதாவது....

ஒரு தலைநகரம் தன் அடிப்படை வசதியை ₹2500 கோடி இருந்தால் சீரமைக்க முடியும் என வல்லுனர்கள் கூறுகிறார்கள். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் வெள்ள நீரை போக்க நிதி ஒதுக்கப்படுகிறது. மொத்தத்தில் நகர கட்டமைப்பு சரியில்லை. போதுமான மழை பொழிவு இருந்தாலும் அது கடலில் கலக்கிறது. அதன் பின் கடல்நீரை சுத்திகரிப்பது என்பது தேவையில்லாதது. மழை நீரை சேமிக்க திட்டமிடல் இல்லை. தலைநகரே இப்படி இருந்தால் மற்ற மாநகராட்சிகளின் நிலையை எண்ணிப்பாருங்கள். இரு கட்சிகளும் இக்கட்டமைப்பில் தோல்வி அடைந்துள்ளதால் தொடர்ந்து வாக்களித்த மக்கள் தோற்றுக்கொண்டு வருகிறார்கள். கால்வாய்க்கு ஒதுக்கும் நிதி வாய்க்குள் சென்றால் என்ன செய்வது.

ஆளுநரை மாற்ற சொன்ன திமுக இப்போது பாராட்டுகிறது. தற்போது  பாஜக கூட்டணி ஆட்சிதான் நடைபெறுகிறது. மற்ற மாநில முதல்வர்கள் விளையாட்டுத்துறை அமைச்சர்களை பிரதமர் சந்தித்து உள்ளாரா? இதன் மூலமே திமுக பாஜகவுடன் கூட்டணி வைத்திருப்பது உறுதியாகிறது. அதிமுகவுடன் கூட்டணியில் இருந்தபோது எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கு வராத பாஜக அமைச்சர் கூட்டணியில் இல்லாதபோதும் கலைஞர் நூற்றாண்டுவிழா நாணய வெளியீட்டில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்கிறார் என்றால் புரிந்து கொள்ளுங்கள்.

இந்தியா என்பது உருவாக்கப்பட்டது. அதில் ஒரே மொழியை வலியிறுத்தினால் தேச ஒற்றுமை கேள்விக்குறியாகும். இந்தி மாதம் தூர்தர்ஷன் நடத்துகிறது. தமிழக அரசு எங்களை தமிழ் வாரம் நடத்த அனுமதிப்பார்களா? இலங்கையில் எல்லை தாண்டி வருபவர்கள் மீனவர் என்பது பிரச்சினை இல்லை. திராவிட மாடல் எல்லாத்தையும் ஒழிச்சிட்டோம் என்றால் அனைவருக்கும் மொழிபற்று வந்துவிடும் திமுகவிற்கும் மொழி போராட்டத்திற்கும் சம்பந்தம் இல்லை. மொழியை பயன்படுத்தி ஆட்சிக்கு வந்த திமுக மக்களை ஏமாற்றி உள்ளது.

தமிழன் என்பது தான் பிரச்சினை. சுய மரியாதைக்காக இயக்கம் தொடங்கியவர்கள் எங்கெங்கோ விழுந்து கிடக்கிறார்கள். இறந்து போன சமஸ்கிருதத்தை உயிர்பிக்க ஆர்எஸ்எஸ் துடிக்கும் போது இறந்து கொண்டிருக்கும் தமிழை வாழவைக்க தமிழன் ஆள வேண்டும். அவன் தமிழனாய் இருக்க வேண்டும். பாஜக இந்தியை திணிக்கவில்லை. சமஸ்கிருதத்தை திணித்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார் .

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

எனக்கு யார் வந்திருக்கிறார்கள் என தெரியவில்லை: ரெய்டு குறித்து துரைமுருகன் பேட்டி
எனக்கு யார் வந்திருக்கிறார்கள் என தெரியவில்லை: ரெய்டு குறித்து துரைமுருகன் பேட்டி
ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் - களமிறங்கிய MASTER MINDS: 2026-ல் அரியணை யாருக்கு?
ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் - களமிறங்கிய MASTER MINDS: 2026-ல் அரியணை யாருக்கு?
மக்களே மறந்து போன மதகஜராஜா! 12 வருடங்களுக்கு பிறகு ரிலீஸ் - என்னய்யா சொல்றீங்க?
மக்களே மறந்து போன மதகஜராஜா! 12 வருடங்களுக்கு பிறகு ரிலீஸ் - என்னய்யா சொல்றீங்க?
ரயிலில் மதுரைக்கு பார்சலில் வந்த 240 கிலோ கணேஷ் புகையிலை பறிமுதல்
ரயிலில் மதுரைக்கு பார்சலில் வந்த 240 கிலோ கணேஷ் புகையிலை பறிமுதல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

FORM-க்கு வரும் அதிமுக : வழிகாட்டும் MASTERMIND : திமுகவுக்கு பக்கா ஸ்கெட்ச்ஹெல்மெட் போட்டா தங்க காசு! NEW YEAR சர்ப்ரைஸ்! துள்ளிக் குதித்த வாகன ஓட்டிகள்Zomato Search in 2024 | ”எனக்கு Girlfriend வேணும்” மிரளவைத்த YOUNGSTERS! ஷாக்கான Zomato |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
எனக்கு யார் வந்திருக்கிறார்கள் என தெரியவில்லை: ரெய்டு குறித்து துரைமுருகன் பேட்டி
எனக்கு யார் வந்திருக்கிறார்கள் என தெரியவில்லை: ரெய்டு குறித்து துரைமுருகன் பேட்டி
ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் - களமிறங்கிய MASTER MINDS: 2026-ல் அரியணை யாருக்கு?
ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் - களமிறங்கிய MASTER MINDS: 2026-ல் அரியணை யாருக்கு?
மக்களே மறந்து போன மதகஜராஜா! 12 வருடங்களுக்கு பிறகு ரிலீஸ் - என்னய்யா சொல்றீங்க?
மக்களே மறந்து போன மதகஜராஜா! 12 வருடங்களுக்கு பிறகு ரிலீஸ் - என்னய்யா சொல்றீங்க?
ரயிலில் மதுரைக்கு பார்சலில் வந்த 240 கிலோ கணேஷ் புகையிலை பறிமுதல்
ரயிலில் மதுரைக்கு பார்சலில் வந்த 240 கிலோ கணேஷ் புகையிலை பறிமுதல்
Rohit Sharma: முடிவுக்கு வந்தது சகாப்தம்? பும்ராவிடம் கேப்டன்சி! பெஞ்சில் உட்கார்ந்த தலைவன் ரோகித்!
Rohit Sharma: முடிவுக்கு வந்தது சகாப்தம்? பும்ராவிடம் கேப்டன்சி! பெஞ்சில் உட்கார்ந்த தலைவன் ரோகித்!
Watch  video: அதே ஆள்.. அதே பந்து..  ஸ்லிப்பில் மீண்டும் அவுட்டான கோலி!
Watch video: அதே ஆள்.. அதே பந்து.. ஸ்லிப்பில் மீண்டும் அவுட்டான கோலி!
வீட்ல இருங்க! பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் இன்று விநியோகம்
வீட்ல இருங்க! பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் இன்று விநியோகம்
Tamilnadu Roundup: பொங்கல் பரிசு டோக்கன் விநியோகம்! துரைமுருகன் வீட்டில் ரெய்டு - தமிழ்நாட்டில் 10 மணி வரை!
Tamilnadu Roundup: பொங்கல் பரிசு டோக்கன் விநியோகம்! துரைமுருகன் வீட்டில் ரெய்டு - தமிழ்நாட்டில் 10 மணி வரை!
Embed widget