திடீரென நிறம் மாறிய புதுச்சேரி கடல் நீர்... அதிர்ச்சியில் சுற்றுலா பயணிகள்
புதுச்சேரி : திடீரென நிறம் மாறிய புதுச்சேரி கடல் பகுதியால் அதிர்ச்சி அடைந்த சுற்றுலா பயணிகள்
புதுச்சேரி கடற்கரைக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து அதன் அழகை ரசித்து செல்வது வழக்கம். சென்னை மெரினா கடற்கரைக்கு அடுத்தபடியாக சுற்றுலா பயணிகள் பெரிதும் விரும்புவது புதுச்சேரி கடற்கரையைதான். இந்த நிலையில் இன்று காலை வழக்கம்போல் புதுச்சேரி கடற்கரையில் சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் வந்திருந்தனர். அப்போது திடீரென பழைய வடிசாராய ஆலையின் பின்புறம் உள்ள குறிப்பிட்ட பகுதியில் கடல் நீரின் நிறம் மாறியிருந்தது.
பிற பகுதிகளில் நீல வண்ணத்தில் இருக்கும் போது, அந்த பகுதி மட்டும் செம்மண் நிறத்தில் மாறியிருந்தது. ஒரு கிலோ மீட்டர் அளவில் குருசுகுப்பம் பகுதி வரை செம்மண் நிறமாக காட்சி அளித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சுற்றுலா பயணிகள் தலைமை செயலகம் எதிரே உள்ள மணல் பரப்பில் இறங்கி, நிறம் மாறியிருந்த கடலின் அழகை புகைப்படம் எடுத்தனர். இது தொடர்பாக மீனவர்கள் ஆரோவில் பகுதியில் அதிக மழை பொலிவு காரணமாக அங்குள்ள செம்மண் சரிந்து நீர் கடலில் கலந்து கடலில் கலந்திருக்கும் என்றும், மீண்டும் இது நீள நிறமாக மாறும் என்றும் மீனவர்கள் தெரிவித்தனர். இதுதொடர்பாக கடல் நிறம் மாறியதற்கான காரணம் என்ன என்று சுற்றுசூழல் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
-
ABP Nadu Top 10, 17 October 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 17 October 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
-
ABP Nadu Top 10, 16 October 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 16 October 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
-
தன்பாலினத்தவர் திருமணத்துக்கு நீதிமன்றத்தால் அங்கீகாரம் வழங்க முடியாது: உச்ச நீதிமன்றம்
தன்பாலினத்தவர் திருமணத்துக்கு நீதிமன்றத்தால் அங்கீகாரம் வழங்க முடியாது என நீதிபதி ரவீந்திர பட் தெரிவித்துள்ளார். Read More
-
Israel - Hmas War: நள்ளிரவில் வான்வழி தாக்குதல் - ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர் மரணம்.. இஸ்ரேல் விரையும் பைடன்
Israel - Hmas War: காஸா பகுதியில் நள்ளிரவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில், ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவர் கொல்லப்பட்டார். Read More