மேலும் அறிய

ஆரோவில்லின் 56வது உதய தினம் - ‘போன் பயர்’ ஏற்றி வாசிகள் கூட்டு தியானம்

ஆரோவில்லின் 56வது உதய தினமான இன்று அதிகாலை அலங்கார தீபம் ஏற்றி ஆரோவில் வாசிகள் தியானத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம்: சர்வதேச நகரமான ஆரோவில்லின் 56வது உதய தினமான இன்று அதிகாலை அலங்கார தீபம் ஏற்றி ஆரோவில் வாசிகள் தியானத்தில் ஈடுபட்டனர். சர்வதேச நகரம் ஆரோவில். இது, ஐ.நா.வின் யுனெஸ்கோ உதவியுடன்  அமைக்கப்பட்ட பன்னாட்டு கிராமிய நகர சங்கமமாகும். உலக மக்கள் ஒரு இடத்தில் நாடு, மதம், மொழி, கலாச்சாரம் என வேறுபாடுகளை மறந்து ஒன்றாக கூட  இடம் வேண்டும் என மகான் அரவிந்தர் விரும்பினார். அவரது கனவை நிறைவேற்ற ஆரோவில் என்னும் சர்வதேச நகரை உருவாக்கியவர் அவரது சீடரான அன்னை மிர்ரா. உலகில், மனித இன ஒற்றுமையின் சின்னமாக, சர்வதேச நகரை உருவாக்க வேண்டும் என்ற கருத்து முதன் முதலாக மகான் ஸ்ரீஅரவிந்தர் எழுத்துக்களில் இருந்து தோன்றியது. ஆரோவில் குறித்த பொது அறிக்கை 1965ல் வெளியிடப்பட்டது. 1966ல் ஆரோவில் குறித்த திட்டம், 'யுனெஸ்கோ' பொது சபையில் இந்திய அரசால் வைக்கப்பட்டு ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டது.

அரவிந்தர் ஆசிரம அன்னை ஸ்ரீ மீர்ராவின்பெரும் முயற்சியால், 1968, பிப்ரவரி 28ல், ஆரோவில் சர்வதேச நகரம் துவங்கப்பட்டது. உலகின் 121 நாடுகளிலிருந்தும் இந்தியாவின் 25 மாநிலங்களில் இருந்தும் பிடி மண் எடுத்து வரப்பெற்று இந்த இடத்தில்  கூம்பு உருவாக்கப்பட்டது. நகரம் துவக்கப்பட்ட நாளில் இருந்து ஆண்டு தோறும் ஆரோவில் உதய தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.  இதில் உலகெங்கும் இருந்து வந்து குடியேறி இருக்கும்  மக்கள் போன் பயர்’ எனப்படும் அலங்கார தீபம் ஏற்றி கூட்டு தியானத்தில் ஈடுபடுவது வழக்கம்.

இந்த நிலையில் 56வது உதய தினமான இன்று ஆரோவில்லில் வசிக்கும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள், பொது மக்கள் ஆகியோர் மாத்திர் மந்திர் அருகில் அமைந்துள்ள ஆம்பி தியேட்டரில், அதிகாலை, 5 மணிக்கு கூடினர். 'போன் பயர்' எனப்படும் அலங்கார தீபம் ஏற்றப்பட்டு 6 மணி வரை, கூட்டு தியானத்தில் ஈடுபட்டனர். தீப்பிழம்பின் பின்னணியில், மாத்திரி மந்திர் தங்க நிறத்தில் ஜொலித்தது. நிகழ்ச்சியின் துவக்கத்திலும் முடிவிலும் ஆரோவில் எதற்காக துவக்கப்பட்டது என அன்னை ஸ்ரீமீர்ரா 1971ம் ஆண்டு இதே நாளில் ஆற்றிய உரை ஒலிபரப்பப்பட்டது. மேலும் மகான் அரவிந்தரின் ஆன்மீக உரையும் வெளியிடப்பட்டது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இன்று இரவு 34 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
TN Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இன்று இரவு 34 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
EVM Tampered: ”தோல்வியடைந்தால் மட்டும் EVMல் மோசடியா; வென்றால் இல்லை” உச்சநீதிமன்றம் காட்டம்? சொன்னது யாரை ? 
EVM Tampered: ”தோல்வியடைந்தால் மட்டும் EVMல் மோசடியா; வென்றால் இல்லை” உச்சநீதிமன்றம் காட்டம்? சொன்னது யாரை ? 
Akhil Akkineni Engaged: நாக சைதன்யா திருமணத்திற்கு முன் இரண்டாவது மகன் அகிலுக்கு நிச்சயதார்த்தத்தை முடித்த நாகர்ஜுனா - அமலா!
Akhil Akkineni Engaged: நாக சைதன்யா திருமணத்திற்கு முன் இரண்டாவது மகன் அகிலுக்கு நிச்சயதார்த்தத்தை முடித்த நாகர்ஜுனா - அமலா!
அதிகாரிகளிடம் சரமாரியான கேள்விகளை எழுப்பிய அதிமுக கவுன்சிலர் - சேலத்தில் பரபரப்பு
அதிகாரிகளிடம் சரமாரியான கேள்விகளை எழுப்பிய அதிமுக கவுன்சிலர் - சேலத்தில் பரபரப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தெலுங்குல பேச முடியாது.. தமிழ்ல தான் பேசுவேன்”அல்லு அர்ஜுன் THUGLIFEபள்ளியில் சாதியா? PAINT-ஐ எடுத்த அன்பில்! அரசுப் பள்ளியில் அதிரடி”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!அடிதடியில் இறங்கிய அதிமுகவினர்! செல்லூர் ராஜூ vs டாக்டர் சரவணன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இன்று இரவு 34 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
TN Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இன்று இரவு 34 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
EVM Tampered: ”தோல்வியடைந்தால் மட்டும் EVMல் மோசடியா; வென்றால் இல்லை” உச்சநீதிமன்றம் காட்டம்? சொன்னது யாரை ? 
EVM Tampered: ”தோல்வியடைந்தால் மட்டும் EVMல் மோசடியா; வென்றால் இல்லை” உச்சநீதிமன்றம் காட்டம்? சொன்னது யாரை ? 
Akhil Akkineni Engaged: நாக சைதன்யா திருமணத்திற்கு முன் இரண்டாவது மகன் அகிலுக்கு நிச்சயதார்த்தத்தை முடித்த நாகர்ஜுனா - அமலா!
Akhil Akkineni Engaged: நாக சைதன்யா திருமணத்திற்கு முன் இரண்டாவது மகன் அகிலுக்கு நிச்சயதார்த்தத்தை முடித்த நாகர்ஜுனா - அமலா!
அதிகாரிகளிடம் சரமாரியான கேள்விகளை எழுப்பிய அதிமுக கவுன்சிலர் - சேலத்தில் பரபரப்பு
அதிகாரிகளிடம் சரமாரியான கேள்விகளை எழுப்பிய அதிமுக கவுன்சிலர் - சேலத்தில் பரபரப்பு
DMK VS PMK:
"வேறு வேலை இல்லை" அனல் பறக்கும் அரசியல் களம்.. முதலமைச்சர் கோபத்தின் பின்னணி ?
Fengal Cyclone: நாளை புயல் உருவாகும் - வானிலை மையம் அறிவிப்பு.!  எப்போது?, எங்கு கரையை கடக்கும் ?
நாளை புயல் உருவாகும் - வானிலை மையம் அறிவிப்பு.! எப்போது?, எங்கு கரையை கடக்கும் ?
10 ஆயிரம் பேருக்கு மணக்க, மணக்க மட்டன் பிரியாணி; மதுரையே மிரண்ட பிரம்மாண்ட விருந்து
10 ஆயிரம் பேருக்கு மணக்க, மணக்க மட்டன் பிரியாணி; மதுரையே மிரண்ட பிரம்மாண்ட விருந்து
டங்ஸ்டன் விவகாரம்; அழகர் மலையில் ஒன்று கூடிய அரிட்டாபட்டி 48 தாய் கிராம மக்கள்
டங்ஸ்டன் விவகாரம்; அழகர் மலையில் ஒன்று கூடிய அரிட்டாபட்டி 48 தாய் கிராம மக்கள்
Embed widget