மேலும் அறிய

NDA கூட்டணியில் பாமக வருமா ? - ஷாக் பதில் தந்த வானதி சீனிவாசன்

தவறு செய்யும் அமைச்சரை கட்டிக்காக்கும் மாடல் அரசாகவும், ஜெயிலில் பெயில் கிடைச்சவுடன் அமைச்சராக்கி அழகு பார்ப்பது தான் திமுக அரசு - வானதி சீனிவாசன்

விழுப்புரம்: தவறு செய்யும் அமைச்சரை கட்டிக்காக்கும் மாடல் அரசாகவும், ஜெயிலில் பெயில் கிடைச்சவுடன் அமைச்சராக்கி அழகு பார்ப்பது தான் திமுக அரசு என பாஜக மாநில மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். 

பெண்களையும், சைவம் மற்றும் வைணவத்தையும் சர்ச்சைக்குரிய வகையில் இழிவாக பேசிய அமைச்சர் பொன்முடியை கண்டித்து திருக்கோவிலூர் பேருந்து நிறுத்தம் எதிரே பாஜக மகளிரணி தேசிய தலைவி வானதி சீனிவாசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் காஷ்மீரில் தீவிரவாதிகளால் சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டவர்களுக்கு ஒரு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து மேடையில் பேசிய பாஜக தேசிய மகளிரணி தலைவி வானிதி சீனிவாசன்,

திருக்கோவிலூர் என்றாலே சிவன், பெருமாள் அமைந்த இந்த ஊருக்கு சாபம் விட்டது போல் சட்டமன்ற உறுப்பினராக பொன்முடி அமைந்துள்ளதாகவும், திமுக பாரம்பரியத்தில் பெண்கள் கூட்டத்தில் இருக்கும்போதே ஆபாசமாக பேசுவது தான் வரலாறு அது பாஜகவில் இல்லை திராவிட முன்னேற்றக்கழகத்தில் சமூக நீதி, பெண்களுக்கான அரசு என்று கூறுவார்கள். ஆனால் பெண்களை இழிவாக பேசுவார்கள் என குற்றஞ்சாட்டினர்.

பொன்முடியை அமைச்சர் பதவியிலிருந்து முதல்வர் நீக்க வேண்டும் என்றும் அமைச்சர் மனதில் எவ்வளவு வக்கிரமம் உள்ளது என்பதை காட்ட தான் திருக்கோவிலூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதாகவும், நாகரீக வரம்புகளுக்கு உட்படாமல் அமைச்சர் பொன்முடி பேசுவதாகவும், இரண்டு சமூகங்களுக்கு இடையே பிரிவினையை ஏற்படுத்தும் படி பேசினால் சட்டத்தின் படி தண்டிக்கப்பட வேண்டும். ஆனால் பொன்முடி மீது வழக்கு பதியவில்லை, நாட்டின் குடிமகன் தவறு செய்தால் எப்.ஐ.ஆர் போடுவார்கள் அமைச்சர் பேசினால் தமிழக அரசு பாதுகாப்பார்கள் என தெரிவித்தார். 

வெறுப்பினை உண்டாக்கும் வகையில் பேசிய பொன்முடிக்கு வழக்கில் முகாந்திரம் இல்லை என வழக்கறிஞர் வாதாடுகிறார்.  சைவத்தையும், வைணவத்தையும், பெண்களையும் இழிவாக பேசிய பொன்முடிக்கு உயர் நீதிமன்றமே தானாக முன்வந்து வழக்கினை எடுத்து கொள்வதாக கூறியுள்ளது, தவறு செய்யும் அமைச்சரை கட்டிக்காக்கும் மாடல் அரசாக திமுக உள்ளதாகவும், ஜெயிலில் பெயில் கிடைச்சவுடன் செந்தில் பாலாஜியை அமைச்சராக்கி அழகு பார்க்கும் முதல்வராக ஸ்டாலின் உள்ளதாக கூறினார்.

அமைச்சரவையில் உள்ள அமைச்சரே கூறுகிறார் என்னிடம் அதிகாரம் இல்லை என பேரவையிலையே தெரிவிக்கிறார். தவறாக பேசும் அமைச்சர்களை வீட்டுக்கு அனுப்ப முதல்வர் நடவடிக்கை எடுத்தால் உடல் நலத்தோடு இருப்பார் என்றும் திராவிட மாடல் அரசில் ஊழல் செய்யும் அமைச்சர்கள், தவறாக பேசும் அமைச்சர்களை வைத்து கொண்டு இந்தியாவின் சிறந்த மாநில அரசாக திமுக அரசு செயல்படுவதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவிப்பதாக வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

பாஜக ஆட்சி இருக்கும் வரை தீவிரவாதிகள் காஷ்மீரில் ஒரு இன்ச் இடத்தினை கூட எடுக்க முடியாது என்றும் வாக்கு வங்கி அரசியலுக்காக அன்னிய சக்திகளோடு பயங்கரவாத செயல் நடைபெற்றுள்ளதாகவும், தமிழகத்தில் உள்ள திமுக அரசு தீவிரவாத தாக்குதல் நடந்தாலும் பூசி மொழிகி வேறொரு அர்த்தத்தை கொடுக்கும் என்றும் கோயம்புத்தூரில் இஸ்ஸாமிய பயங்கரவாதிகள் நடத்திய மிகப்பெரிய வெடி விபத்தினை சிலிண்டர் விபத்து என தெரிவித்தது ஸ்டாலின் அரசு என குற்றஞ்சாட்டினார்.

சிலிண்டர் விபத்து என தமிழக அரசு தெரிவித்ததற்கு என்ஐஏ இன்று அது வெடிவிபத்து என நீதிமன்றத்தில் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்துள்ளதாகவும், தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக இணைத்திருக்கிறது. ஏற்கனவே கூட்டணியில் உள்ளவர்களை இணைத்து வருகின்ற தேர்தலில் வெற்றி பெறுவோம் என வானதி சீனிவாசன் நம்பிக்கை தெரிவித்தார். 

தலைப்பு செய்திகள்

பிரெஞ்சு நகரத்தில் டிராம் பயணம்: புதுச்சேரியில் பாரீஸ் பாணியில் களமிறங்கும் பேட்டரி டிராம்!
பிரெஞ்சு நகரத்தில் டிராம் பயணம்: புதுச்சேரியில் பாரீஸ் பாணியில் களமிறங்கும் பேட்டரி டிராம்!
விவசாயிகளுக்கு ஆட்சியர் அதிரடி உத்தரவு: அனைத்து நிலங்களையும் உடனே பதிவு செய்யுங்கள்! பதிவு செய்தால் மட்டுமே அரசு சலுகைகள்....
விவசாயிகளுக்கு ஆட்சியர் அதிரடி உத்தரவு: அனைத்து நிலங்களையும் உடனே பதிவு செய்யுங்கள்! பதிவு செய்தால் மட்டுமே அரசு சலுகைகள்....
தூரிகையில் விரியும் மனித பரிணாமம்: ஆரோவில்லில் நடைபெற்ற மோகனம் வெள்ளி விழா !
தூரிகையில் விரியும் மனித பரிணாமம்: ஆரோவில்லில் நடைபெற்ற மோகனம் வெள்ளி விழா !
விவசாயிகளே உஷார்! இந்த 3 பணிகளை முடிக்காவிட்டால் பி.எம்.கிசான் பணம் நிறுத்தப்படலாம்!
விவசாயிகளே உஷார்! இந்த 3 பணிகளை முடிக்காவிட்டால் பி.எம்.கிசான் பணம் நிறுத்தப்படலாம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Ukraine Big Attack on Russia: யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
Scorpio Lifestyler First Look: மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
Avore EX2 Price Range Features: ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
Embed widget