'வளர்த்த கிடா மார்பில் பாய்ந்தது ' அன்புமணி மீது ராமதாஸ் வைத்த அடுக்கணக்கான குற்றச்சாட்டுகள் என்னென்ன?
தவறு செய்தது அண்புமணி அல்ல நான் தான் எனது சத்தியத்தினை மீறி அன்புமணியை 35 வயதில் கேபினெட் அமைச்சராக்கி குற்றம் செய்துவிட்டேன்.

விழுப்புரம்: பாட்டாளி மக்கள் கட்சி தலைவருக்கான பண்பு அன்புமணியிடம் இல்லை வளர்த்த கிடா மார்பில் பாய்ந்தது என தனது மகன், மருமகள் குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அடுக்கடுக்காக குற்றஞ்சாட்டியுள்ளார்.
திண்டிவனம் அருகேயுள்ள தைலாபுரம் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது:
தர்மபுரியில் நடைபெற்ற கூட்டத்தில் அன்புமணி பேசியதை நீங்களும் பார்த்திருப்பீர்கள் நானும் பார்த்தேன் நாடும் பார்த்தது. நான் என்ன குற்றம் செய்தேன் ஏன் எனக்கு இந்த பதவிமாற்றம் ஒருமாதமாக மன உளைச்சலில் இருப்பதாக தெரிவித்திருந்தார். இது முழுக்க முழுக்க மக்களையும் கட்சிகாரர்களை திசை திருப்பும் முயற்சியாகும். தான் செய்த தவறுகளை மறைத்து மக்களிடமும் கட்சிகாரர்களிடமும் அனுதாபம் பெற முயற்சித்திருக்கிறார். அதற்கான பதிலை சொல்வது தனது கடமையாகும் இனிப்பினை தவிர்த்து கசப்பான வார்த்தைகளை கொண்ட மருந்தை தான் பதிலாக கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தவறு செய்தது அன்புமணி அல்ல நான் தான் எனது சத்தியத்தினை மீறி அன்புமணியை 35 வயதில் கேபினெட் அமைச்சராக்கி குற்றம் செய்துவிட்டேன். அன்புமணிதான் தவறு செய்தவர், தவறான ஆட்டத்தை அடித்து ஆட ஆரம்பித்தவர் அன்புமணிதான். நான் எதையும் போகிற போக்கில் சொல்லிவிட்டு போகவில்லை என்ன நடந்தது என்பதை இப்போது அப்படியே வெளிபடுத்துகிறேன், பொதுக்குழுவில் என்ன நடந்தது என எல்லோருக்கும் தெரியும்
அந்த பொதுக்குழு அதிர்ந்தது அந்நிகழ்வில் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மேடை நாகரீகமும் சபை நாகரீகமும் இல்லாமல் அநாகரிகமாக செயல்பட்டது யார், முகுந்தனை வீட்டில் தனக்கு உதவியாகவும், கட்சியில் அன்புமணிக்கு உதவியாக நியமித்தேன். உடனே மேடையில் காலை ஆட்டிக்கொண்டு மைக்கை தலையில் போடாத குறையாக மேஜை மீது விசியது சரியான செயலா பனையூரில் கட்சி அலுவலகம் திறந்திருக்கிறேன் என கூறியாது யார் கட்சி எனும் ஆளுயர கண்ணாடியை ஒரு நொடியில் உடைத்தது யார்.
இவ்விவகாரத்தில் எல்லோரும் ஆதங்கப்பட்டார்கள், அன்புமணி பக்குவப்படவில்லை, கடமை கண்ணியம் கட்டுபாட்டோட்டு நடத்திய கட்சியில் அன்புமணி கலக்கத்தை ஏற்படுத்தி வளர்த்த கிடாவே மார்பில் எட்டி உதைத்து விட்டார். அதனை கண்டு நான் இடிந்து போய்விட்டேன் கட்சி வளர்ச்சிக்கு தொடர்ந்து இடையூறாக இருந்து பல தவறுகளை அன்புமணி செய்து வந்தார்.
ஜிகே மணி மகன்தமிழ் குமரனை இயக்க வளர்ச்சிக்கு பயன்படுத்தி கொள்ளலாம் என தெரிவித்திருந்தேன். தமிழ் குமரன் ஜி கே மணியின் மகன் என்பதாலும் சினிமாவில் உள்ளதால் அவரை பயன்படுத்தினால் கட்சி வளரும் நினைத்தேன். அதற்கு அன்புமணி தடையாக இருந்தார். அவருக்கு நியமன கடிதத்தை கொடுத்து அனுப்பினேன் அவர் வீட்டின் வாயிலை தாண்டுவதற்கு முன்பாகவே கிழித்து போட அன்புமணி கூறினார். இதேசெயல்தான் முகந்தனுக்கு மேடையிலையே நடந்தது. எல்லோரும் தனது தாயை கடவுள் என தான் சொல்வார்கள். ஆனால் பொங்கல் சமயத்தில் முகுந்தன் நியமனம் குறித்து அவரது தாய் கேட்டதற்கு கண்ணாடி பாட்டிலை தூக்கி அம்மா மீது அடித்தார். நல்லவேலையாக அவர் மீது அது படவில்லை பட்டிருந்தால் என்னவாகியிருக்கும் இதெல்லாம் ஒரு சிலவற்றை தான் கூறினேன் அவர் நிறைய தவறுகளை செய்துள்ளார். கட்சியை அரும்பாடு பட்டு வளர்த்தேன்
நிர்வாக குழு கூட்டத்தில் ஒரு நிர்வாகி பேசினால் அவரை பேச விடாமல் தடுக்கிறார். கட்சி நிர்வாகி பேசினால் தான் கட்சி வளர்ச்சிக்கு நாம் என்ன செய்யவேண்டுமென தெரிந்து கொள்ள முடியும். ஆனால் யாரையும் பேசவிடாமல் தடுத்தார். அப்போதே தலைமை பண்பு அன்மணிக்கு கொஞ்சம் கூட இல்லை என ராமதாஸ் தெரிவித்ததாக கூறினார். மேலும் கட்சியின் வளர்ச்சிக்காக எனக்கு மிகவும் பிடித்த மாவட்டங்களான தர்மபுரி சேலத்திற்கு சென்றிருந்தபோது அங்கு நான் மைக் வைத்து பேச கூடாது இருநூறு பேருக்கு மேல் கூட கூடாது, திருமண மண்டபத்தில் நடத்த கூடாது, தங்கியிருக்கும் அறையிலையே கட்சி நிர்வாகிகளை சந்திக்க வேண்டுமென கட்சியின் நிறுவனருக்கே அன்புமணி கட்டளை போடுகிறார். ஒரு கட்சியின் நிறுவனருக்கே இந்த நிலை கீழ்தரமாக நடத்திய விதம் ஏற்றுக்கொள்ள முடியாது.
மாவீரன் குருவை கீழ் தரமாக நடத்தியது ஏற்று கொள்ளதக்கது அல்ல. இதையெல்லாம் பார்த்த தான் நிர்வாக குழுவில் அன்புமணிக்கு தலைமை பண்பு இல்லை என கூறினேன். ஆறு வருடங்களுக்கு முன்பாக பிரதமர் மோடி பதவி ஏற்கும் விழாவிற்கு சென்றிருந்தேன் அதை முடிவித்து விட்டு சென்னை கிளம்பியபோது பாமக கட்சியை நான் பார்த்துக்கொள்கிறேன் என விமானத்தில் அன்புமணி கூறினார். அதை கேட்டு விமானத்திலையே இரண்டு சொட்டு கண்ணீர் வடித்து எதுவும் பேசாமல் தைலாபுரம் வந்துவிட்டேன். இது ஆறு வருடத்திற்கு முன்பு நடந்த கதை
தனக்கு 14 பஞ்சாயத்தினை அன்புமணி வைத்தார். அந்த பஞ்சாயத்தில் 34 அமைப்புகளை உருவாக்கியவர்கள் தன்னிடம் சமாதானம் செய்தார். அப்போது மக்களை பார்க்க அன்புமணி போகட்டும் கட்சியை ராமதாஸ் பார்க்கட்டும் என தெரிவித்தார்கள். அதன் பிறகு வீட்டின் கேட்டினை சாத்தி வீட்டிலையே இருக்கட்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
பொய்யை கூசாமல் அன்புமணி ராமதாஸ் பேசுவார், நான் கூட்டும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு செல்ல வேண்டாமென 108 மாவட்ட செயலாளர்களுக்கு அவரே கூறியிருந்தார். நான் கூட்டிய கூட்டத்திற்கு 8 பேர் வந்தார்கள் அன்றே இறந்துவிட்டேன் மறுநாள் பிழைத்து விட்டேன். அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குவேன் என்பது கற்பனை செய்து பார்க்க முடியாது நான் அப்படி செய்வேனா, நேற்று நடந்த சமூக பேரவை கூட்டம் அடிப்பதற்கு 6 பேரை வைத்துள்ளதாக அய்யா வைத்துள்ளார்கள் உங்களை எல்லாம் அடிக்க போகிறார் என அன்புமணி சொல்கிறார். இது நியாமா அப்போதும் கூட கூட்டத்தில் நூறு பேர் கலந்து கொண்டார்கள் பொய் என்பதை அவர் கூசாமல் பேசுவார்.
மனது சரியில்லாமல் மகாபலிபுரம் ஹோட்டலுக்கு சென்று தங்கியியிருந்தேன். அப்போது என் மருமகள் என்னை வந்து பார்த்தார்கள் மண்டபத்தை ஏற்பாடு செய்துவிட்டேன் எல்லாம் தயாராக உள்ளது. நீங்கள் தலைவரை மாற்றி அன்புமணியை நியமிக்க வேண்டுமென சொன்னார். அதற்கு கால அவகாசம் 8 நாட்கள் தான் இருந்தது. எட்டு நாளில் தலைவரை மாற்றி நியமிக்க வேண்டுமென தன்னிடம் வற்புறுத்தினார். அதற்கும் சம்மதித்து அவருக்கு பட்டாபிஷேகம் செய்து ஆரத்தழுவி ஆனந்த கண்ணீர் விட்டேன் அப்போதும் அந்த கூட்டத்தில் எனது குடும்பத்தை சார்ந்த பெண்கள் யாரும் கட்சிக்கு வரமாட்டார்கள் எனக் கூறினேன்.
ஏற்கனவே நான் செய்த சத்தியத்தை மீறி வற்புறுத்தலால் எனக்கு விருப்பமே இல்லாமல் அன்புமணிக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுக்க சம்மதித்தேன் அப்போதும் சாதா துறையை தான் கொடுத்தார்கள், இரவு தூங்காமல் கண்விழித்து பெரும் முயற்சி செய்து அவருக்கு சுகாதார துறை அமைச்சர் பதவியை பெற்று தந்தேன் இப்போது நடக்கும் பிரச்சனைக்கு ஒரே தீர்வு அய்யா, அப்பா, நிறுவன பாமக செயல்தலைவர் பதவியை முழுமையாக ஏற்று செயல்பட வேண்டும், இல்லையென்றால் தொண்டராக இருந்து கட்சிக்கு பணியாற்றட்டும் இந்த பிரச்சனைக்கு இது தான் ஒரே தீர்வு இதற்கு அவர் சம்மதித்தால் இதற்கு நல்ல தீர்வு கிடைக்கும்,கண்ணாடியும் உடையவில்லை எந்த பிரச்சனையும் இல்லை.
கூட்டணி குறித்து அன்புமணியிடம் பேசினேன் அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமியிடம் பேச கூறியிருந்தேன். அப்போதும் பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என அன்புமணி கூறினார். அதனால் அதிமுக பாமக கூட்டணி வைத்திருந்தால் சில இடங்களில் வெற்றி பெற்று கட்சிக்கு அங்கீகாரம் கிடைத்திருக்கும் பாஜக கூட்டணியுடன் வைக்க அன்புமணியும், செளமியா அன்புமணியும் இரண்டு கால்களை பிடித்தார்கள். இதற்கு ஒத்துக்கொள்ளவில்லை என்றால் தனக்கு நீங்கள் தான் கொல்லி வைக்கனும் என அன்புமணி கூறி அழுதார்கள் பாஜகவுடன் கூட்டணி என்பதை செளமியா முடிவு செய்து விட்டார்கள் எனக்கு தெரியாமலையே பாஜக கூட்டணி என அனைத்தையும் முடிவு செய்துவிட்டார்கள்
மாநில பொதுக்குழு எப்போது வேனாலும் கூட்டலாம் அப்படியே செய்ய தயாராக இருக்கிறேன் மூன்று வருடம் முடிந்துவிட்டது பொதுக்குழு கூட்டலாம். கட்சியின் பொதுக்குழு கூட்டம் கட்சியின் நிறுவனர் வழிகாட்டுதலின் படி கூட்டம் நடத்த வேண்டும் என விதி உள்ளது. பாஜக கூட்டணியில் இருக்கிறதா இல்லையா என கூறுவதில் சில சங்கடங்கள் உள்ளன. மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் நாங்கள் சீட்டு கேட்க கூடாதா நானே கூட தான் போட்டியிடுவேன், மாநில இளைஞரணி தலைவராக தொடர்ந்து முகுந்தன் செயல்பட்டு கொண்டு உள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.





















